Friday, October 4, 2013

அறுசுவை உணவு உண்பவனே வயிற்றுக்கு வழியின்றி வாடும் வஞ்சனையின் வாசனை அறியாதவர்களைப் பார்.. அலங்காரம் செய்து கொள்பவனே! வேப்பம் குச்சியில் பல்துலக்கி களிமண் போட்டுக் குளித்து வண்டி மையில் கண்ணெழுதும் நம் சகோதிரிகளைப் பார்...கல்வி கற்கும் வயதில் கட்டிடத்திற்கு கலவை சுமக்கிறது உன் சனநாயக நாட்டின் பெருமையைப் பார்...உரிமை பற்றிச் சவடால் பேசுபவனே! உதவி செய்வதில் உரிமை எடுத்துக் கொள்ளக் கூடாதா? சுயநலம் தான் வருகிறதா? சுரணை வரவில்லையா? காமம் வீசும் உனது கண்கள் கருணை மறந்ததோ? இதையெல்லாம் நான் சொல்வதைக் கேட்டு உனது மனம் சுரணை கெட்டு செவிக்குத் திகட்டுகிறதா? நீ வாழ்ந்து பயனில்லை செத்துப் போ..



No comments:

Post a Comment