Thursday, October 24, 2013

ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியரால் 1801, அக்டோபர் 24 இல் திருப்புத்தூரில் இவ்விருவரும் தூக்கில் இடப்பட்டனர். இவர்களது நினைவாலயம் காளையார்கோவிலில் அமைந்துள்ளது!!! The Marudhu Pandiyars and more than 500 of their family members were captured at Cholapuram and they were infamously hanged at same time in the Fort of Tiruppathur (Sivaganga District, Tamil Nadu) on the English month of October 24, 1801.





மருது பாண்டியர்களின் சிலை






மருது பாண்டியர்களின் ஓவியம்


 

மருதுபாண்டியர் எனப்படும் மருது சகோதரர்கள் தமிழ்நாட்டில் ஆங்கிலேயர்க்கு எதிரான விடுதலைப் போராட்ட முன்னோடிகளுள் குறிப்பிடத்தக்கவர்கள். ஆங்கிலேயரைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்ட 1785முதல் 1801 முடிய ஆயுதம் தாங்கிப் போராடினார்கள்.

பெரிய மருது, சின்ன மருது எனப்படும் இவர்கள் ஆங்கிலேயர்க்கு எதிராகப் போராடிய அனைத்திந்திய குழுமங்களையும் ஒன்றிணைத்துத் திரட்ட முயன்றபோதுதான் ஆங்கிலேயரின் அதிருப்தி மற்றும் கோபத்திற்கு ஆளானார்கள். இவர்களது களம்சிவகங்கைச் சீமையைச் சேர்ந்த காளையார்கோயில் ஆகும்.

ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியரால் 1801அக்டோபர் 24 இல் திருப்புத்தூரில் இவ்விருவரும் தூக்கில் இடப்பட்டனர். இவர்களது நினைவாலயம் காளையார்கோவிலில் அமைந்துள்ளது


வாழ்க்கைக் குறிப்பு




இன்றைய விருதுநகர் மாவட்டம் நரிக்குடிக்கு அருகில் உள்ள முக்குளம் என்ற கிராமத்தில் வாழ்ந்த உடையார் சேர்வை என்ற மொக்க பழநியப்பன் என்பவருக்கும் அவரது மனைவி ஆனந்தாயி என்ற பொன்னாத்தாள் என்பவருக்கும் மகனாக 15.12.1748ல் மகனாகப் பிறந்தவர் பெரியமருது பாண்டியர்.

ஐந்து ஆண்டுகள் கழிந்து 1753ல் சிறிய மருது பாண்டியர் பிறந்தார். பெரிய மருது பாண்டியர் வெள்ளை நிறத்துடன் இருந்ததால் வெள்ளை மருது பாண்டியர் என்ற பெயரும் உண்டு. பெரிய மருதுவைவிட உயரத்தில் சிறியவராக இருந்ததால் இளைய மருது சின்ன மருது பாண்டியர் என்ற பெயரும் உண்டு.

சிவகங்கை அரசர் முத்துவிடம் அவரது போர்ப்படையில் வீரர்களாக தனது திறமையை நிரூபித்தனர். அவர்களின் வீரத்தை கண்டு மெச்சிய முத்துவிடம் மருது சகோதரர்களை தன் படையின் முக்கிய பொறுப்புகளில் நியமித்தார்.

சிவகங்கைச் சீமை மீட்பு





திருப்பத்தூரில் மருதிருவருக்கு அமைக்கப்பட்டிருக்கும் நினைவுத் தூண்


ஆற்காடு நவாப் வரி வசூலை ஆங்கிலேயருடன் பங்கிட்டுக் கொள்வதாக ஒப்பந்தம் செய்து கொண்டு சோசப் சுமித்து தலைமையிலான கம்பெனிப்படை 1772இல் இராமநாதபுரத்தைக் கைப்பற்றியபின் தாக்குதலை எதிர்பாராத அரசர் முத்து காளையார் கோவில் போரில் பலியானதால் அவரது பட்டத்தரசி வேலுநாச்சியார், மகள் வெள்ளச்சி, அமைச்சர் தாண்டவராயன் பிள்ளை, மற்றும் மருதுசகோதரர்கள்திண்டுக்கல் அருகே விருப்பாட்சி காட்டுக்குத் தப்பிச் செல்கின்றனர். 

1772 க்குப் பிறகு காட்டில் மறைந்து வாழ்ந்த மருது சகோதரர்கள் தமது கிளர்ச்சியை 1779ல் தொடங்கி ஆர்க்காட்டு நவாப், தொண்டைமான் மற்றும் குப்பினியர்களின் படைகளை வெற்றிக் கொண்டு 1780ல் சிவகங்கைச் சீமையை மீட்டு வேலுநாச்சியாரை மீண்டும் அரியணையில் அமர்த்தினர்.

இந்தப் போரில் பெரியமருது மணலூர் வாயிலிலும், தளபதி சந்தனம் சேர்வை பூவந்தி வாயிலிலும், வேலு நாச்சியார் மேலூர் வாயிலிலும் முகாமிட்டு போரிட்டனர். மேற்கில்திண்டுக்கல்லிலிருந்து தக்க சமயத்தில் வந்த ஐதர் அலி யின் படையும் வெற்றிக்கு உதவியது. 

வேலு நாச்சியார் மீண்டும் ஆட்சியில் அமர்ந்த விழாவிற்கு தர் அலி நேரில் வந்திருந்து வாழ்த்துக் கூறினார்.

ஒற்றுமை



மருது சகோதரர்கள் ஆட்சி மத ஒற்றுமை, நல்லிணக்கம் ஆகியவற்றுக்குக் குறிப்பிடத்தக்கவாக அமைந்தது. இசுலாம் மற்றும் கிறித்தவ மதங்களைச் சார்ந்தவர்களுக்கும் வழிபாட்டு இடங்களை அமைத்துக் கொடுத்தனர். இளையவரான “ சின்ன மருது” அரசியல் ராசதந்திரம் மிக்கவராக விளங்கினார். தஞ்சாவூர் முதல் திருநெல்வேலி முடிய மாபெரும் அரசியல் கூட்டணி ஒன்றைத் தொடங்கி ஆங்கிலேயர்க்கு எதிரான போரட்டதிற்கு வித்திட்டனர் .

சின்ன மருதுவின் திருச்சி பிரகடனம்:


1801 சூன் 16 ம் தேதி சின்ன மருது திருச்சி திருவரங்கம் முதலிய இடங்களில் வெளியிட்ட அறிக்கை “ சம்பு தீவ பிரகடனம்” என அழைக்கப்படுகிறது. அவ்வறிக்கை எல்லா இனத்தைச் சார்ந்த மக்களும் நாட்டுப் பற்று மிக்க பணிகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் ஆங்கிலேயர்க்கு எதிராகப் போர் தொடுக்க வேண்டுமென்றும் அறை கூவல் விடுக்கப்பட்டது.




மருதுபாண்டியர் நினைவிடக் காட்சி


தூக்குத்தண்டனை


௨௪-௧௦-௧௮௦௧ (24-10-1801) அன்று மருது பாண்டியர்களை தூக்கிலிட்டது வெள்ளையரசு அவர்கள் குடும்பத்தைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மன்னர் குடும்பத்தாரும் தூக்கிலிடப்பட்டனர்.

நினைவிடம்


மருது சகோதரர்களின் முழு உருவ கற்சிலைகள் சிவகங்கை மாவட்டம் காளையார்கோயில் காளீசுவரர் கோயிலின் உட்புறமும் மருது சகோதரர்களின்சமாதி காளீஸ்வரர் கோயிலின் எதிர்புறமும் அமைக்கப்பட்டுள்ளன.

நினைவுத் தபால்தலை


இவர்களது நினைவாலயம் சிவகங்கையில் உள்ள காளையார்கோவிலில் அமைந்துள்ளது. தபால்துறை மருது சகோதரர்களின் பெருமைப்படுத்தும் வகையில் அவர்களது நினைவுத் தபால் தலையை 2004அக்டோபர் 23 இல் மதுரையிலும்சென்னையிலும் வெளியிட்டது.

-புவிநன்

"இந்தி"(தீ)யன் அல்ல தமிழன்டா "

"இந்தி"(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு..                         

செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்

www.senkettru.wordpress.com 

FIRST WAR OF INDEPENDENCE BY THAMIZHLAR Maruthu Pandiyar BROTHERS








Statues of Maruthu Pandiyar Brothers in Mariamman Teppakkulam road junction.


The Marudhu Pandiyar (Tamil: மருது பாண்டியர்) brothers (Periya Marudhu and Chinna Marudhu) ruledSivagangaiTamil Nadu towards the end of the 18th century. The Marudhu brothers were the first to issue a proclamation of independence from the colonial British rule from Trichy Thiruvarangam Temple, Tamil Nadu on 10 June 1801, more than 56 years before what is generally said to be the First War of Indian Independence which broke out mainly in Northern India in the year 1857, HIDING THE HISTORY OF TAMILS IN EVERY POSSIBLE WAY BY THE INDIAN UNION.

Childhood


The Marudhu brothers were the sons of Servai alias Mookiah Palaniappan Servai and Anand alias Ponnathal. Marudhu Pandiyar, the Elder was born on 15.12.1748 in a small hamlet called Narikkudi near Aruppukkottai in then Ramnad principal state (now Virudhunagar district). In 1753 the younger Marudhu Pandiyar was born in Ramnad. Their father "Servai" served as the General in the Ramnad state military and he shifted his family to Virudhunagar from Narikkudi.

Early life


The Marudhu brothers were trained in native martial arts at Surankottai which traditionally served as a training centre for the Ramnad state army. The Valari is a peculiar weapon unique to TAMILS used originally by the indigenous TAMIL people (ancient Tamils) of the South Asia. Two forms of this weapon are used by TAMILS and known as boomerang warfare. These are normally made of wood. They are known as Valari sticks in Sangam Tamil.

Marudhu brothers were experts in the art of throwing the Valari stick and using it as a weapon. They used Valari in their Poligar Wars against the British colonial forces. They contested in and won many competitions of martial arts and distinguished themselves as brave warrirors. The Raja of Ramnad Muthu Vijaya Raghunatha Sethupathy issued the title of Pandiyas to honour the Marudhu Pandiyargal.

Bravery


The Raja of Sivagangai, a principal state near Ramnad, came to know of their brave and courageous deeds and requested the Ramnad king to assign them to serve the Sivaganga state army. They were appointed as Generals of the Sivaganga military and the brothers left an indelible impression in the military history of India.

In the year 1772, the English military of the British East India Company, under the command of Lt.Col. Bon Jour attacked the state at Kalayar Kovil. During the war, Raja Muthu lost his life in the battlefield. But the Marudhu brothers managed to escape along with Rani Velu Nachiar, wife of Raja Muthu Vadughanadhathevar and arrived at Dindigul which was ruled by Hyder Ali – the Sultan of Mysore as refugees. Hyder Ali supported them in all respects.

The Nawab of Arcot, the alliance partner of British East India Company, was not able to collect any taxes from the people of Sivaganga state for eight long years. He entered into an agreement whereby the rule of Sivaganga was restored to "Rani Velu Nachiar" after he collected his dues from her. The Marudhu brothers with 12,000 armed men surrounded Sivaganga and plundered the Arcot Nawab's territories. The Nawab on the 10th of March 1789 appealed to the Madras Council for aid. On 29 April 1789, the British forces attacked Kollangudi. It was defeated by a large body of Marudhu troops.

Marudhu Pandiyars Battles against the British


They were in close association with Veera Pandiya Kattabomman of Panchalankurichi. Kattabomman held frequent consultations with the Marudhus. After the execution of Kattabomman in 17 October 1799 at Kayattar, Chinna Marudhu gave asylum to Kattabomman's brother Oomaidurai. But the British took this reason to invade and attacked Sivaganga in 1801 with a powerful army. The Maruthu Pandiyars and their allies were quite successful and captured three districts from the British.

The British considered it such a serious threat to their future in IndiaN union that they rushed additional troops from Britain to put down the Maruthu Pandiyars' rebellion. These forces surrounded the Maruthu Pandiyars' army at Kalayar Koil, and the latter scattered. The Maruthu Brothers and their top commanders escaped. They regrouped and fought the British and their allies at Viruppatchi,Dindigul and Cholapuram. While they won the battle at Viruppatchi, they lost the other two battles.

Administration


Marudhu brothers were not only warriors and noted for bravery, but they were very great administrators. Rani Velu Nachiar made a will and paved the way for Marudhu Pandiyar Elder to rule. Marudhu Pandiar younger was made the Dewan of the state. During the period from 1783 to 1801, they worked for the welfare of their subjects and the SivagangaSeemai was made fertile. They constructed many notable temples like Kalayar KovilSivaganga many Ooranis and Tanks.

Death OF BRAVE HONOR


The Marudhu Pandiyars and more than 500 of their family members were captured at Cholapuram and they were infamously hanged at same time in the Fort of Tiruppathur (Sivaganga District, Tamil Nadu) on the English month of October 24, 1801.

Honour


A commemorative postage stamp has been released on October 2004. Every year people conduct guru pooja to them in October month.


-புவிநன்/PUVINAN

"இந்தி"(தீ)யன் அல்ல தமிழன்டா "

"இந்தி"(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு..                         

செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்

www.senkettru.wordpress.com 

 



No comments:

Post a Comment