Friday, October 25, 2013
எமது பலம் எமக்கு இன்னும் புரியலே ஆனால் எதிர்கள் நன்கு புரிந்து உள்ளார்கள் அதனால் தான் தமிழருக்கு என்று ஒரு நாடு வந்து விட கூடாது என்றும் சொந்த மாநிலம் என்றாலும் அதை தமிழன் ஆட்சி செய்ய கூடாது என்பதிலும் எந்த ஊடகம் என்றாலும் தமிழை முன்னுக்கு கொண்டு வர கூடாது என்பதிலும் எமக்குள் இருக்கும் சாதி என்ற நோயை அணைய விடாமல் இருப்பதிலும் மிக கண்ணும் கருத்துமா செயற்பட நாமோ இன்னும் புரிந்தும் புரியாமலும் பிரிந்தே நிக்கறோம்
தற்சமயம் இணையத்தில் 75,000 தமிழ்சார்ந்த வலைத்தலங்கள் இருப்பதாகக் கணிக்கப்படுகின்றது. இதில் 25,000 தலங்கள் முற்றும் முழுவதுமாகத் தமிழையே பயன்படுத்தி ஆக்கப்பட்டுள்ளன. உலகின் முதல் தாய்மொழி என்ற வரலாற்றுச் சிறப்பைப் பெற்றுள்ள செம்மொழியாம் நம் தமிழ்மொழி, இணையத்தில் தோன்றி உலகை உலாவந்த முதல் இந்திய மொழி என்ற பெருமையையும், மிக அதிகமான இணையத்தலங்களைக் கொண்ட ஒரே "இந்தி"(தீ)ய ஒன்றியத்தின் மொழி என்ற பெருமையையும், ஆங்கிலத்தைப் பயன்படுத்தி செய்யக்கூடிய அனைத்தையும் செய்யவல்ல ஒரே "இந்தி"(தீ)ய ஒன்றியத்தில் உள்ள மொழி என்ற பெருமையையும் ஒருசேர பெற்றுள்ளது
-நல்லதம்பி யோகநாதன்
"இந்தி"(தீ)யன் அல்ல தமிழன்டா "
"இந்தி"(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு..
செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்
www.senkettru.wordpress.com
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment