Monday, October 28, 2013
இழவுக்கு இழவு குடித்து வெடித்து ஆடி பழகிப்போன தமிழனிடம் வேறென்ன எதிர்பார்ப்போம் நாம் (2009 தீபாவளிக்கு எழுதிய கவிதை இன்றும் பொருந்தும் நிலை)
--தீபாவளி தமிழன்--
மரண வாடைக் கண்டால்
நாய்கள்கூட ஓலமிடும்
தமிழா
நீ உறங்கிக் கொண்டிருந்தாய்
கொத்து கொத்தாய்
கொல்லப்பட்டு கொண்டிருந்த போது
உன் இனம்
துக்கம் தீரவில்லை
மிச்சம் பிழைத்த தமிழன்
சிங்கள சத்தான்
வாயிலிருந்து
இன்னும் மீளவில்லை.
தீபாவளி, ரம்சான், ஈஸ்டர்
பண்டிகைகள்
தமிழகத்தில் குறைவில்லை.
அரசு தீவிரவாதத்தில்
வெடித்து சிதறிய
தமிழன் உடல்கள்
புதைப்பதற்கு
யாருமில்லை
ஈழத்தில்.
பட்டாசு ஆயிரம் வகை
இனிப்பு நூறு வகை
வெடிக்கவும் உண்ணவும்
புத்தாடையில் தீபாவளிக்கு
ஜொலிக்கவும் தயாராய்
ஆறு கோடி தமிழனின் தமிழகத்தில்.
இழவுக்கு இழவு
குடித்து வெடித்து ஆடி
பழகிப்போன தமிழனிடம்
வேறென்ன எதிர்பார்ப்போம்
நாம்
(2009 தீபாவளிக்கு எழுதிய கவிதை இன்றும் பொருந்தும் நிலை)
"இந்தி"(தீ)யன் அல்ல தமிழன்டா "
"இந்தி"(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு..
செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்
www.senkettru.wordpress.com
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment