Thursday, October 17, 2013
மோடி என்றழைப்பதைவிட "மோசடி" என்பதே பொருத்தமாக இருக்கும்?????? 100 நாள் வேலை திட்டம்... பல் இளிக்கும் ஊழல்கள்!
கரன்சிங் ரத்தோட் என்ற விவசாயியின் குடும்ப உறுப்பினர்கள் 4 பேரும் 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தில் சேர்வதற்கு விண்ணப்பிக்கவே இல்லை. ஆனாலும், மாதம்தோறும் அவர்கள் சம்பளம் பெற்றிருக்கிறார்கள்.
அதாவது, அவர்களுடைய பெயரில் போலியாக அட்டைகளை தயார் செய்து, பணத்தைச் சுருட்டியிருக்கிறார் உள்ளூர் பஞ்சாயத்துத் தலைவர்.
லேக்தர்சன் எனும் 25 வயது இளைஞர், 100 நாள் வேலைக்கு விண்ணப்பிக்கவே இல்லை. ஆனால், அவர் பெயரிலும் சம்பளம் போட்டு சுருட்டப்பட்டிருக்கிறது. இத்தனைக்கும் அவர் எந்த வேலையையும் செய்ய முடியாத மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர்.
இதைவிட கொடுமை... மதுபாய் கோலி என்ற விவசாயி, தன்னுடைய இறப்புக்குப் பிறகும் தொடர்ந்து வேலை செய்து வந்ததுதான். 2006-ம் ஆண்டிலேயே அவர் இறந்துபோனாலும்... அதை அடுத்து வந்த மூன்று ஆண்டுகள் வரை, 100 நாள் வேலை திட்டத்தில் வேலை பார்த்ததற்கான சம்பளம் தரப்பட்டிருக்கிறது.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில்தான் இந்த உண்மைகள் வெளிவந்துள்ளன.
‘அரசுத் திட்டங்கள் பக்காவாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன..
"இந்தி"(தீ)ய ஒன்றியத்திலே வளர்ச்சியை நோக்கி பீடுநடை போடும் மாநிலம்... நாளைய பிரதமர் இன்று ஆட்சி நடத்தும் மாநிலம்’ என்றெல்லாம் புகழப்படும் நரேந்திர மோடியின் குசராத் மாநிலத்தில்தான் இந்தக் கொடுமைகள் எல்லாம்.
மோடி என்றழைப்பதைவிட "மோசடி" என்பதே பொருத்தமாக இருக்கும்??????
-கௌதம் "மேனன்"னின் வேட்டையாடு விளையாடுவில் வந்த இளமாறன்
"இந்தி"(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு..
செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்
www.senkettru.wordpress.com
thamilarulaham.org
http://senkettru.blogspot.in/
http://iamnotaliberator.blogspot.in/
தமிழர் தேசியம் சார்பான காணொளிப்பதிவு பார்க்க…
https://www.youtube.com/my_videos?o=U
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment