Wednesday, October 16, 2013
ஐநா மனிதவுரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை சிறிலங்கா சென்றபோது இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட மக்களுக்காக முள்ளிவாய்க்காலில் அஞ்சலி செய்ய முற்பட்ட போது இன வெறி பிடித்த சிங்களம் அதை தடுத்தது .இங்கு சர்மனிக்கு சென்ற நவநீதம் அம்மையார் இரண்டாம் உலகப்போரின் காலகட்டத்தில் நாசிகளால் கொல்லப்பட்ட லச்சக்கணக்கான யூத மக்களுக்காக அதே இடத்துக்கு சென்று அஞ்சலி செய்தார்.
இந்தவிடயத்தை நாம் மட்டும் அல்லாமல் உலகமே இதை ஒப்பிட்டு பார்த்தால் சிங்கள இனவாதிகளும் ராசபக்சே கூட்டுக்களவானிகளும், "இந்தி"(தீ)ய ஒன்றியமும் எவ்வளவு கேவலமானவர்கள் என்பது நன்கு புரியும் .
இறந்து போனவர்களின் கல்லறைகளை கூட இடித்து அழித்த இனவாத சிங்களவனா தமிழர்களுக்கு அரசியல் தீர்வு கொடுப்பான் ?
இன்று பதவிக்கு அடி பட்டு திக்கு திக்காக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட கூட்டமைப்பின் ஒற்றுமையே சிங்களவனுக்கு போதும் தமிழர்களை அழிப்பதற்கு .
கஞ்சியாக இருப்பினும் அடுத்தவனுக்கு பகிர்ந்துண்டுவிட்டு மகிழ்வாக அடுத்த படியை நோக்கி நகர்வதே குடும்பம். அவர்களே வாழ்க்கையில் வெற்றியும் பெறுவார் ..ஒருவர் கரைக்கும் மற்றவர் தண்ணிக்குள்ளும் இழுத்து தாங்களும் குழம்பி மக்களையும் குழப்பி கரை சேர விடாமல் இருப்பதற்கு பெயர் கூட்டமைப்பு கிடையாது கூத்து அமைப்பு .
இனியேனும் பதவி ஆசையை தூக்கி குப்பை தொட்டியில் போட்டு விட்டு சுயநலம் இன்றி தமிழ் கச்சிகள் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுப்புகள் செய்து தமிழ் மக்களின் நீண்ட கால சுகந்திரகனவை நனவாக்க பாடு படுங்கள் என்று என்னைப் போன்ற ஒவ்வொரு உணர்வுள்ள தமிழனும் நிச்சயம் எதிர்பார்கிறான் .இது தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மட்டும் அல்ல தமிழக கச்சிகளுக்கும் சேர்த்தே ....
.....பா .சங்கிலியன் ....
"இந்தி"(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு..
செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்
www.senkettru.wordpress.com
thamilarulaham.org
http://senkettru.blogspot.in/
http://iamnotaliberator.blogspot.in/
தமிழர் தேசியம் சார்பான காணொளிப்பதிவு பார்க்க…
https://www.youtube.com/my_videos?o=U
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment