Monday, October 28, 2013

தமிழர்களே, நாங்கள் அப்படித் தான் இலங்கைக்கு போவோம், இலங்கை அரசுடன் நட்பு பாராட்டுவோம், மீனவர் படுகொலையை தடுக்க மாட்டோம், இனப்படுகொலைக்கான விசாரணை எல்லாம் கோர மாட்டோம், தனி ஈழம் பற்றி பேசமாட்டோம், இலங்கை ஒரு கொலைகார நாடு என்று கூறமாட்டோம், இலங்கையை கண்டிக்க மாட்டோம், தமிழர்களுக்கு நீதி பெற்றுத் தரமாட்டோம், உங்களால் என்ன செய்து விட முடியும்?

காந்திய வழியில் அறப்போர் செய்வது இந்தியை ஒன்றியத்தில் வேலைக்காகது என்பதையே நமது ஈகைச்சுடர் லெப்.கேணல் திலீபன் அண்ணா உறுதிப்படுத்தியுள்ளார்இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடைபெறக் கூடாது, நடைபெற்றால் "இந்தி"(தீ)ய ஒன்றியம் அதில் கலந்து கொள்ளக் கூடாது என்று தமிழக மக்கள், இயக்கங்கள், கட்சிகள் பல போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறோம். இந்த கோரிக்கையை முன்வைத்து ஒரு விவசாயி ஒருவர் தீக்குளித்துள்ளார் என்ற செய்தியும் வந்துள்ளது. தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் கூட நிறைவேற்றி ஆகிவிட்டது . ஆனால் நாம் எத்தனை போராட்டங்களை, தீர்மானங்களை முன்னெடுத்தாலும் "இந்தி"(தீ)ய ஒன்றியம் இந்த விடயத்தில் எந்த வித கவலையும் படுவதாக தெரியவில்லை. நடுவண் அரசு நம்மிடம் கேட்கும் கேள்வி ஒன்று தான். 

தமிழர்களே, நாங்கள் அப்படித் தான் இலங்கைக்கு போவோம், இலங்கை அரசுடன் நட்பு பாராட்டுவோம், மீனவர் படுகொலையை தடுக்க மாட்டோம், இனப்படுகொலைக்கான விசாரணை எல்லாம் கோர மாட்டோம், தனி ஈழம் பற்றி பேசமாட்டோம், இலங்கை ஒரு கொலைகார நாடு என்று கூறமாட்டோம், இலங்கையை கண்டிக்க மாட்டோம், தமிழர்களுக்கு நீதி பெற்றுத் தரமாட்டோம், உங்களால் என்ன செய்து விட முடியும்?

நீங்கள் ஒரு மாநிலத்தில் மட்டும் தான் வாழ்கிறீர்கள். அதுவும் எந்த வித அதிகாரமும் இல்லாத, அடிமை நிலையில் உள்ள ஒரு மாநில அரசின் கீழ் தான் வாழ்கிறீர்கள். உங்களால் "இந்தி"(தீ)ய ஒன்றியம் அல்லது இலங்கை அரசையோ ஒன்றும் செய்து விட முடியாது . எங்களை தட்டிக் கேட்கும் உரிமையோ தகுதியோ உங்களுக்கு இல்லை. நீங்கள் என்ன தான் கத்தினாலும் கதறினாலும் உயிரை மாயத்தாலும் உங்களுக்கு ஆதரவாக நாங்கள் செயல்படமாட்டோம், உங்களால் என்ன செய்து விட முடியும் என்று இந்திய அரசு கேட்கிறது. 

இனி நாம் என்ன பதில் கொடுக்கப் போகிறோம்? இதற்கு மேலும் இந்தியாவை கெஞ்சி பலனில்லை. தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை "இந்தி"(தீ)ய ஒன்றியம் எடுத்துவிட்ட பின்பு , நாம் துணிந்து எதிர்ப்பது தான் நியாயம்.

வெறும் கண்டனம் மட்டுமே தெரிவித்துக் கொண்டிருந்தால் பயனில்லை. இந்நிலையில், தமிழ் நாட்டிற்கான அதிகாரப் பகிர்வு, சுயாட்சி, சுய நிர்ணய உரிமை, தமிழர்களே தங்களை ஆள்வதற்கு சுதந்திர தமிழர் குடியரசு இது தான் நமக்கு தேவை என்பதை "இந்தி"(தீ)ய ஒன்றியத்திற்கு இனி ஒவ்வொரு தமிழரும் உரக்கச் சொல்லுதல் வேண்டும். 

"இந்தி"(தீ)ய ஒன்றியத்துடன்  உள்ள  நட்புறவை தமிழக மக்கள், கட்சிகள் , இயக்கங்கள், தமிழக அரசும் பேணுதல் கூடாது என்ற நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். "இந்தி"(தீ)ய ஒன்றித்துடன்  உள்ள  எல்லா வகையிலும் ஒத்துழையாமையை கடைப்பிடித்தல் வேண்டும்.

இந்த திட்டத்தை, பரப்புரையை அரசியல் கட்சிகள் , அமைப்புகள் துணிந்து முன்னெடுத்தால் தமிழக மக்கள் நிச்சயம் ஆதரிப்பார்கள். இதை நாம் இன்று செய்யவில்லை எனில் வேறு எப்போதும் செய்யமுடியாது . அடிமைகளாக செத்து மடிய வேண்டியது தான். 

ஆகவே தோழமைகளே, துணிந்து நாம் ஒரு முடிவெடுப்போம், டெல்லி அரசின் கட்டுப்பாட்டிற்குள் இல்லாத அதிகாரமுள்ள தமிழக குடியரசை நிறுவ எல்லாவகையிலும் முயல்வோம். அதற்கான போராட்டங்களை செயல்திட்டங்களை கூர்மை படுத்துவோம். விவாதிப்போம். இறுதி வரை போராடி அதிகாரமுள்ள தமிழர் அரசை நாம் உருவாக்குவோம். இதை தவிர ஒரு சிறந்த தீர்வு இருப்பதாக தெரியவில்லை.

"இந்தி"(தீ)யன் அல்ல தமிழன்டா "

"இந்தி"(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு..                         

செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்

www.senkettru.wordpress.com 

No comments:

Post a Comment