Thursday, October 17, 2013
ஏடா! தமிழ் வீரா! உனை எலிபோல் நினைத்தாரா? வாடா படை யூடே அற வலியின் துணை யோடே!
ஏடா! தமிழ் வீரா! உனை
எலிபோல் நினைத்தாரா?
வாடா படை யூடே அற
வலியின் துணை யோடே!
நாடா பிணைக் காடா என
நால்வர் மடிந்தாலும்
போடா அவர் வழியே! நகை
புரிவாள் தமிழ் மொழியே!
குண்டாந்தடி கொண்டே அடி
தந்தார் வெறியாளர்
என்றால் அது நன்றே! எமை
ஈன்றாள் புகழுண்டே!
பண்டை மொழி என்பார் தமிழ்
பார்ப்போம் அதை வீணர்
வென்றா விடுவார்கள்? மற
வேங்கை விடுவானோ?
'முத்தே! முழு நிலவே! விடை
மொழிவாய்!' என இல்லாள்
பத்தே விரல் பற்றி அவள்
பதிலின் வெறி பெற்று...
'சொத்தே! மொழி வித்தே! தமிழ்ச்
சொல்லே! உனக்காச்
செத்தே மடிகின்றேன்!' எனச்
செல்வாய் தமிழ் ஏறே!
- காசி ஆனந்தன்
எம்பக்கத்தில்( www.fb.com/tamileelams) தொடர்ந்து இணைந்திருங்கள்.
"இந்தி"(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு..
செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்
www.senkettru.wordpress.com
thamilarulaham.org
http://senkettru.blogspot.in/
http://iamnotaliberator.blogspot.in/
தமிழர் தேசியம் சார்பான காணொளிப்பதிவு பார்க்க…
https://www.youtube.com/my_videos?o=U
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment