Wednesday, October 16, 2013

திருகோணமலை துறைமுகத்தில் காவியமான கடற்கரும்புலிகளினது வீரவணக்க நாள்


திருகோணமலை துறைமுகத்தில் 17,10.1995 அன்று சிறிலங்கா கடற்படையின் தரையிறங்கு கலம் மீதான கரும்புலித் தாக்குதலில் காவியமான நீரடி நீச்சல் பிரிவு கடற்கரும்புலிகள் மேஜர் சிவசுந்தர், கப்டன் ரூபன், கப்டன் சிவகாமி ஆகிய வேங்கைகளின் 18ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

கடற்கரும்புலிகளின் தாக்குதலின் மூன்று சிறிலங்கா கடற்படையின் கலங்கள் முற்றாக தாக்கி அழிக்கபட்டது.

கடலிடை உயிர்பூவைச் சொரிந்த உயிராயுதமாக சென்றவர்கள் ஈகத்தில் உருகும் கானம் " கடற்கரும்புலிகள் பாகம் - 02ல் "... யார் பாடிடக் கூடும் எனும் பாடல் இவரின் வரலாறு உரைக்கின்றது...

இதே நாளில் தாயக விடுதலை வேள்வி தன்னில் கடலிலும் - தரையிலும் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

|| புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் ||

No comments:

Post a Comment