Thursday, October 31, 2013

இனச் சுத்திகரிப்பின் ஓர் அங்கமே தமிழ் பெண்கள் மீதான கருத்தடை: பிரித்தானிய எம்.பிக்களுக்கு எடுத்துரைப்பு 2.10.2013



இலங்கையின் தமிழர் தாயகப் பிரதேசத்தில் தமிழ்ப் பெண்கள் மீது திட்டமிட்ட வகையில் திணிக்கப்படும் கருத்தடை என்பது சிங்கள அரசின் தமிழினச் சுத்திகரிப்பின் ஓர் அங்கமே என பொதுநலவாய மாநாட்டு விவகாரத்தில் பிரித்தானிய எம்.பிக்களுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் எடுத்துரைத்துள்ளது.

இலங்கையில் இடம்பெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் உச்சிமாநாட்டில் பிரித்தானியா பங்கெடுத்துக் கொள்ளக் கூடாது என்பதற்கான அழுத்த்தினை பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரித்தானியப் பிரதிநிதிகள் தொடர்சியாக மேற்கொண்டு வருகின்றனர்.

இதனொரு அங்கமாக Mike Gapes MP Ilford Selected Committee, Verindra Sharma MP Southall, John Mc Donnell MP Hayes பிரித்தானிய பாராளுமன்ற பிரமுகர்களைச் சந்தித்த நா.தமிழீழ அரசாங்கத்தின் பெண்கள் விவகார அமைச்சின் தலைமையிலான தமிழர் பிரதிநிதிகள், தமிழர் தாயகத்தில் தமிழ்ப் பெண்கள் மீது திட்டமிட்ட வகையில் திணிக்கப்படும் கருத்தடை என்பது சிங்கள அரசின் தமிழினச் சுத்திகரிப்பின் ஓர் அங்கமே எடுத்துரைத்துள்ளனர்.

சமீபத்தில் 50க்கும் மேற்பட்ட தமிழ்ப் பெண்களை அழைத்துச் சென்று வற்றபுறுத்தி, அவர்களுக்கு கருத்தடை செய்த விவகாரம் தமிழர் தாயகத்தில் இருந்து அருட்தந்தை மங்களராசா அவர்களினால் வெளிச்சத்துக்கு கொண்டு வரப்பட்டிருந்தது.

இதனை ஆதாரமாக கொண்டு இவ்விவகாரத்தினை பிரித்தானிய அரசியல் பிரதிநிதிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று நா.தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள், இலங்கை தொடர்பிலான பிரித்தானியாவின் கொள்கை நிலைப்பாடு மற்றும் பாராளுமன்ற விவாதம் குறித்தும் எடுத்துரைத்திருந்தனர்.

"இந்தி"(தீ)யன் அல்ல தமிழன்டா "

"இந்தி"(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு..                         

செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்

www.senkettru.wordpress.com

தமிழீழ தேசியகொடி வரலாறு

http://www.youtube.com/watch?v=ilNSBJ57fR8 

No comments:

Post a Comment