முசாஃபர் நகர் மாவட்டம் முகமத்புரைசிங், ஹூசைன்பூர் கிராமங்களில் வசிக்கும் இரு சமூகத்தினருக்கு இடையே நேற்றிரவு இந்த கலவரம் ஏற்பட்டுள்ளது. இதில், அப்ரோஸ், மெகர்பான், அஜ்மல் ஆகிய மூன்று இளைஞர்கள் கொல்லப்பட்டனர்.
மேலும் ஒருவர் படுகாயமடைந்தார். இதுதொடர்பாக எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
கலவரத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். முகமத்புரைசிங் கிராமத்தில் சிலர் புகுந்து ஹூசைன்பூர் கிராமத்தினர் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக பரப்பிய வதந்தியால் மீண்டும் கலவரம் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். கடந்த மாதம் முசாஃபர் நகரில் இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட வகுப்பு கலவரத்தில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். உயிருக்கு பயந்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இடம் பெயர்ந்தனர்.
"இந்தி"(தீ)யன் அல்ல தமிழன்டா "
"இந்தி"(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு..
செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்
www.senkettru.wordpress.com
No comments:
Post a Comment