Monday, October 14, 2013

இனியும் ஒரு தமிழர் சாகக் கூடாது. தோழர் தியாகுவின் உண்ணா நிலைப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவோம். நாம் செயலில் ஈடுபடுவோம்.



ஒவ்வொரு முறையும் தமிழர்கள் இந்தி"(தீ)ய ஒன்றியம் மற்றும் இலங்கைக்கு எதிராக போராடும் போது யாராவது ஒருவரை தமிழ்ச் சமுகம் இழக்க நேரிடுகிறது .

முத்துக்குமார், செங்கொடி , விசயகுமார் போன்ற பல உணர்வாளர்கள் ஆற்றாமையால் தன்னையே தீக்கு இரையாக்கி உள்ளனர். அப்படி உயிர் நீத்தாலும் இந்தி"(தீ)ய ஒன்றியம் அதை பற்றியெல்லாம் சட்டை செய்வதில்லை.

தமிழர்களின் போராட்டங்களை எல்லாம் தமிழர் தேசியத்தின் அரசோ, இந்தி"(தீ)ய ஒன்றியமமோ மதிப்பதில்லை. இப்படி ஒரு நிலை இருக்க ஏன் தமிழர்கள் உயிர் துறக்க வேண்டுமா?

நாம் பல வழிகளில் போராடி நம் உரிமைகளை பெற்றுக் கொள்வோம். 

இப்போது 14 வது நாளாக உண்ணா நிலையில் இருக்கும் தோழர் தியாகு ஐயாவின் உடல்நிலை மிகவும் மோசமான கட்டத்தை எட்டி உள்ளது. தோழர் தியாகு தமிழர்களின் அறிவு சார் சொத்து. அவரை இழப்பது இந்தி"(தீ)ய ஒன்றியதிற்கு மகிழ்ச்சியை தான் தரும்.

ஆனால் தமிழர்களுக்கோ அது மாபெரும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அவரை நாம் நிச்சயம் இழக்க முடியாது. அவரை காப்பாற்றுவது ஒவ்வொரு தமிழனின் கடமையாகும். 

அதனால் தோழர் தியாகு தனது போராட்டத்தை முடித்துக் கொள்ள தமிழர்கள் ஒன்று சேர்ந்து குரல் கொடுப்போம். வயதான நிலையில் அவர் உயிர் எந்த நேரத்திலும் பிரிந்து விடும் அபாயம் உள்ளது என்பதை கருத்தில் வைத்து அவரது போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர நாம் அனைவரும் தோழர் தியாகு ஐயாவிற்கு வேண்டுகோள் வைத்து அவரை உண்ணா நிலைப் போராட்டத்தை கைவிட செய்வோம்.

தமிழக அரசியல் தலைவர்கள், இயக்கங்கள், மாணவர்கள், பொதுமக்கள் அனைவரும் இதை வலியுறுத்துவோம். தமிழக மக்களாகிய நாம் இந்த போராட்டத்தை கையில் எடுப்போம். தமிழகம் தழுவிய மாபெரும் போராட்டங்களை மக்களாகிய நாம் இணைந்து முன்னெடுப்போம். அடுத்தடுத்து வரும் போராட்டங்களில் கலந்து கொண்டு நாம் செயலில் ஈடுபடுவோம்.

அப்படியான செயலில் நாம் ஈடுபட்டால் தோழரின் உண்ணா நிலையை விரைவில் நாம் முடிவுக்கு கொண்டு வரலாம். உடனே செயல்படுவோம் தோழரின் உண்ணா நிலையை முடிவுக்கு கொண்டு வருவோம் .

-இளையவேந்தன்

"இந்தி"(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு..                         

செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்

www.senkettru.wordpress.com

thamilarulaham.org

http://senkettru.blogspot.in/

http://iamnotaliberator.blogspot.in/

தமிழர் தேசியம் சார்பான காணொளிப்பதிவு பார்க்க

https://www.youtube.com/my_videos?o=U

 

 

No comments:

Post a Comment