Thursday, October 17, 2013

தமிழர்களுக்குக் கட்டாயக் கருக்கலைப்பு - சீனாவின் வழியில் சிறீலங்கா



சீனாவில் மக்கள் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த ஒரு குழந்தைத் திட்டத்தைக் கொண்டுவந்து, இரண்டாவது குழந்தை பெற்றவர்களுக்கு பெருந்தொகையாகத் தண்டப்பணம் அறவிடுவதுடன், பலரை வலுக்கட்டாயக் கருக்கலைப்புக்கும் உட்படுத்திவருகின்றது.

இதேவேளை, சிறீலங்கா தீவிரவாத அரசோ இன அழிப்பு நோக்குடன் தமிழர்களுக்கு மட்டும் கட்டாயக் கருக்கலைப்புச் செய்து வருகின்றது. இதில் தமிழர் தாயகம், மலையகம் என்று வேறுபாடு காட்டாமல் இந்தக் கொடூரத்தை அரங்கேற்றி வருகின்றது.

கடந்த வாரம் மலையகத்தில் தமிழ்ப் பெண் ஒருவர் கட்டாயக் கருக்கலைப்புக்கு உட்படுத்தப்பட்டு பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டெங்கு பரிசோதனை என்ற பெயரில் கந்தப்பளை கோட்லொட்சு தோட்டத்தைச் சேர்ந்த கோட்டை புசுபராணி என்ற இரு பிள்ளைகளின் தாய்க்கு கட்டாய கருத்தடை செய்யப்பட்டதால் அப்பெண் அதிக இரத்தப் பெருக்கு ஏற்பட்ட நிலையில் ஐந்து நாட்கள் நுவரெலியா வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெறவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த பெண்ணின் கணவரான யோகேசுவரன் இந்த விடயம் குறித்து கந்தப்பளை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். கடந்த செப்டெம்பர் 30ம் திகதி தோட்ட நலன்புரி உத்தியோகத்தர் டெங்கு பரிசோதனைக்கு நுவரெலியாவில் இருந்து வைத்திய அதிகாரி முதலாம் திகதி வருவதாகவும் 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் அனைவரும் கட்டாயமாக இந்த பரிசோதனை செய்து கொள்ள வேண்டுமெனவும் அறிவித்தார்.

இதன்படி கோட்லொட்சு தோட்டத்துக்கு வைத்திய அதிகாரி தோட்ட நலன்புரி உத்தியோகத்தர் குடும்ப நல மருத்துவமாது ஆகியோர் முதலாம் திகதி பயணம் செய்துள்ளனர். அந்த தோட்டத்தைச் சேர்ந்த கோட்டை புசுபராணியும் சிகிச்சைக்கு சென்றிருந்தார். இவர் இரண்டு பிள்ளைகளின் தாயாராவார். இவருக்குக் கட்டாய கருத்தடை செய்யப்பட்டுள்ளது. பின்னர் வீடு திரும்பிய புசுபராணிக்குத் தொடர்ந்து இரத்தப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இப்பெண்ணின் கணவர் உடனடியாக நுவரெலியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது வழியில் புசுபராணி சுயநினைவு இழந்து மயக்கமடைந்துள்ளார்.

நுவரெலிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட இப்பெண் ஐந்து நாட்கள் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்ற பின்னர் கடந்த 5ம் திகதி வீடு திரும்பியுள்ளார். பெண்ணின் கணவர் இது குறித்து கந்தப்பளை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்தும் இது குறித்து இதுவரை விசாரணைகளை மேற்கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

முன்னதாக, கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள மூன்று கிராமங்களில் மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் சிகிச்சைகள் வழங்கப்படுவதாக அண்மையில் இணையத்தளம் ஒன்று தகவல் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. கிளிநொச்சி மாவட்டத்தின் வேரவில் பிராந்திய அரச மருத்துவமனையில் கடந்த ஓகசுட் மாதம் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

வலைப்பாடு, வேரவில், கேரஞ்சி ஆகிய கரையோர கிராமங்களில் வசிக்கும் பெண்களே இதில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஓகசுட் 30ம் திகதி வேரவில் பிரதேச மருத்துவமனையை சேர்ந்த ஊழியர்கள் தொண்டர்கள் ஆகியோர் குறித்த மூன்று கிராமங்களுக்கு சென்று அங்குள்ள குடும்பங்களில் 5 வயதான குழந்தைகளில் நிறை குறைந்து காணப்பட்டால் கட்டாயம் மருத்துவமனைக்கு வந்து பிள்ளையின் நிறையைப் பரிசோதித்து மருந்துகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என அறிவித்தனர்.

31ம் திகதி வேரவில் மற்றும் கிளிநொச்சி மருத்துவமனைகளை சேர்ந்த 20 தாதிகள் மற்றும் குடும்ப நல ஊழியர்கள் மூன்று கிராமங்களில் வீடு வீடாக சென்று இரண்டு அம்பியூலன்சு வண்டிகளில் தாய்மாரை அழைத்துச் சென்றுள்ளனர்.

இது குறித்து தெரிவித்த 43 வயதான பெண்ணொருவர், ‘தொண்டு பணியாளர் தனது வீட்டுக்கு வந்து மருத்துவ அட்டையுடன் நிறை குறைந்த 5 வயது பிள்ளையுடன் வைத்தியசாலைக்கு வருமாறு கூறியதாக கூறியுள்ளார். எனது 5 வயது பெண் குழந்தை சிறந்த தேக ஆரோக்கியத்துடன் இருப்பதாக நான் மருத்துவமனையில் இருந்து வந்தவர்களிடம் நான் கூறினேன்.

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைகளில் இருந்து வந்த அந்த பரிசோதனைக் குழுவை எனக்கு நன்கு தெரியும். கிளிநொச்சி வைத்தியசாலையில் இருந்து விசேட வைத்தியர்கள் வந்துள்ளதால் சிகிச்சை ஆலோசனைகள் சிறந்ததாக இருக்கும் என நான் கருதினேன்’ எனக் கூறியுள்ளார்.

இதனையடுத்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட பெண்களைக் கருத்தடை ஊசியை போட்டுக்கொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. மருத்துவர்களும் தாதியர்களும் நீண்டகாலம் கருத்தரிக்காது இருப்பதற்காக மருந்தை எடுத்து கொள்ளுமாறு கூறியுள்ளனர்.

நீண்டகாலத்திற்கு பின்னர் பிள்ளை பிறந்தால் அந்த குழந்தை ஆரோக்கியமான குழந்தை பிறக்கும் என காரணம் கூறியுள்ளனர். ஏற்கவே கருத்தடை மருந்துகளை எடுத்துள்ளீர்களா என மருத்துவர்களும் தாதியர்களும் கேட்டுள்ளனர். தான் மாத்திரைகளை எடுத்துள்ளதாக அந்தப் பெண் கூறியுள்ளார். இந்த மருந்து மாத்திரை விட பக்க விளைவுகள் அற்ற சிறப்பான மருந்தாக இருக்கும் என தாதியர்கள் கூறியுள்ளனர்.

முதலில் சகல தாய்மாரும் இந்தப் புதிய கருத்தடை மருந்தை ஏற்றுக்கொள்ளாது அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கருத்தடை மருந்தை போட்டுக் கொள்ளவில்லை என்றால் எதிர்காலத்தில் இந்த மருத்துவமனையில் வேறு சிகிச்சை பெற முடியாது என்று தாதியர்கள் கூறியுள்ளனர். இதனையடுத்து சில பெண்கள் மருத்துவனையில் கொடுத்த அந்த ஊசி மருந்தைப் போட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.

-அனைத்துலக தமிழர் மையம்

நாம் "இந்தி"(தீ)யன் அல்ல தமிழன்டா "இந்தி"(தீ)ய - "இந்தி"(தீ)ய ஒன்றியம்-

"இந்தி"(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு..                         

செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்

www.senkettru.wordpress.com

thamilarulaham.org

http://senkettru.blogspot.in/

http://iamnotaliberator.blogspot.in/

தமிழர் தேசியம் சார்பான காணொளிப்பதிவு பார்க்க

https://www.youtube.com/my_videos?o=U

No comments:

Post a Comment