நடுவண் அரசின் கீழ் இயங்கும் செம்மொழி ஆய்வு நிறுவனத்தில் தமிழ் அறிவு சிறுதும் இல்லாத நபர்கள் இயக்குனராக நியமித்துள்ளது நடுவண் அரசு. அதுமட்டுமில்லாமல் , இந்த நிறுவனத்தில் பணிபுரியும் உயர் அதிகாரிகள் அனைவரும் வேற்றின மக்களாவர்.
இதனால் செம்மொழி ஆய்வுக்கு ஒதுக்கப்படும் தொகை ரூபாய் 60 கோடியில், இந்த நிறுவனம் செலவு செய்யும் தொகை 30 கோடி ரூபாய் தான்.
இந்தி வளர்ச்சிக்கும் , இந்தி திணிப்புக்கும் நடுவண் அரசு பல நூறு கோடிகள் செலவு செய்யும் நிலையில் தமிழ் வளர்ச்சிக்கு எந்த வித அக்கறையும் காட்டுவதில்லை இந்திய அரசு. செம்மொழி தமிழாய்வு நிறுவனமும் வேற்றின மக்களின் கைகளில் உள்ளதால் முறையே தமிழ் மொழியின் வளர்சிக்கு எந்த முன்னெடுப்பும் இந்த நிறுவனத்தால் எடுக்கப்படுவது இல்லை.
இதை தமிழ் அமைப்புகளும் , தமிழர் நலன் சார்ந்த கட்சிகளும் வன்மையாக கண்டித்து வருகின்றன.
இந்நிலையில் நாளை தமிழாய்வு நிறுவனத்துடன் போராடும் ஊழியர்ககளும் தமிழ் அமைப்புகளும் பேச்சு வார்த்தை நடத்த முடிவு செய்துள்ளனர். தமிழ் அமைப்புகள், தமிழக கட்சிகள் இந்த பேச்சு வார்த்தையில் பங்குபெற்று ஊழியர்களின் கோரிக்கைக்கு வலு சேர்க்குமாறு வேண்டுகிறோம். மேலும் நிரந்தரமாக ஒரு கண்காணிப்பு குழு ஒன்றையும் ஏற்பாடு செய்து , தமிழ் வளர்ச்சிப் பணியை நாம் மேற்பார்வையிடலாம்.
இன்று 28/10/2013 காலை 9.30 மணி அளவில் தரமணியில் உள்ள செம்மொழி ஆய்வு நிறுவனத்திற்கு அமைப்புகள், கட்சிகள் சார்பாக தோழர்கள் நேரில் வர அழைக்கிறோம். தொடர்புக்கு தோழர் வேலுமணி 9884187979.
No comments:
Post a Comment