Thursday, October 31, 2013

வெள்ளை வான் தயாரிப்பாளர் இவர் தான் : லீனா மணிமேகலை !

  
கடந்த சில நாட்களுக்கு முன்னர், வன்னிசென்று இலங்கை இராணுவத்தின் கண்களில் விரலைவிட்டு ஆட்டிவிட்டு "இந்தி"(தீ)ய ஒன்றியம் தப்பிச் சென்ற லீனா மணிமேகலை இவர்தான். இவர் தனது ஆவணப்படத்தின் சில முக்கிய பகுதிகளை முல்லைத்தீவில் வைத்தே படமாக்கியுள்ளார் என்றால் இவர் துணிச்சலைப் பாராட்டாமல் இருக்கவே முடியாது.


இவரால் தற்போது தயாரிக்கப்பட்டுள்ள "வெள்ளை வேன்" என்னும் ஆவணப்படம் இன்னும் சில நாட்களில்(நவம்பரில்) வெளியாகவுள்ளது. எப்படி பார்த்தாலும் காமன்வெலத் நாடுகளின் உச்சி மாநாடு இலங்கையில் நடைபெறமுன்னரே இந்த படம் திரையிடப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.அமெரிக்காவில் இருந்து இயங்கும் சி.என்.என் சர்வதேச தொலைக்காட்சி , ஆசுதிரேலியாவில் உள்ள ஏ.பி.சி, மற்றும் பிரித்தானியாவில் இருந்து இயங்கும் சேனல் 4 ஆகிய தொலைக்காட்சிகள் இதனை வெளியிடவுள்ளது. "இந்தி"(தீ)ய ஒன்றியத்தில் வசித்துவரும் லீனா மணிமேகலை ஒரு சுதந்திர படத்தயாரிப்பாளர் ஆவார்.

அவர் இதற்கு முன்னரும் சில குறிப்பிடத்தக்க ஆவணப்படங்களை தயாரித்து வழங்கியுள்ளார். குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்கள் தொடர்பாக இவர், பல விடையங்களை ஆராய்ந்துள்ளார். இவரின் ஆவணப்படத்திற்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நல்ல வரவேற்பு காணப்படுகிறது.

இந்தவகையில் நவம்பர் மாதம் வெளியாகவுள்ள இந்த ஆவணத்திரைப்படம் பெரும் அதிர்வலைகளை தோற்றுவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை செல்லவுள்ள உலகத்தலைவர்கள் பலர், பார்க்கும் சர்வதேச தொலைக்காட்சியில் இது ஒளிபரப்பாகவுள்ளது என்பது இலங்கை அரசைப் பொறுத்தவரையில் வயிற்றில் புளியைக் கரைக்கும் விடையமாகவே உள்ளது.

மாநாட்டிற்கு செல்லும் உலகத்தலைவர்கள் இதுதொடர்பாக கேள்வி எழுப்பினால் அதனை எவ்வாறு சமாளிப்பது என்பது பெரும்பாடாக இருக்கப்போகிறது. இது இலங்கை அரசுக்கு சர்வதேச அளவில் பாரிய ஒரு நெருக்குதலை உண்டாக்கியுள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது. பிரித்தானியாவில் உள்ள தமிழர்கள் சேனல் 4 ஒளிபரப்பவுள்ள இந்த ஆவணத்திரைப்படத்தை உடனே பார்க்கலாம்.


இந்தி"(தீ)யன் அல்ல தமிழன்டா "

"இந்தி"(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு..                         

செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்

www.senkettru.wordpress.com



http://www.youtube.com/watch?v=3TeDzggUFkc 

No comments:

Post a Comment