பூடான் நாட்டில் இருந்து "இந்தி"(தீ)ய ஒன்றியத்திற்கு குடியேறிய ‘சக்காசு’ என்ற இனத்தை சேர்ந்த 65 ஆயிரம் மக்களுக்கு "இந்தி"(தீ)ய ஒன்றியத்திற்கு குடியுரிமை வழங்கவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தேசிய மனித உரிமை ஆணையம் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சக்காசு இன மக்களுக்கு குடியுரிமை வழங்கும்படி "இந்தி"(தீ)ய ஒன்றியத்தின் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் ஒரு லட்சம் இலங்கை தமிழ் ஏதிலிகள் வாழ்கின்றனர். அதில் 70 ஆயிரம் பேர் 115 ஏதிலிகள் முகாம்களிலும், 35 ஆயிரம் பேர் வெளியிலும் வசிக்கின்றனர். இவர்களும், சக்காசு இன மக்களை போல், 30 ஆண்டுகளுக்கு மேல் தமிழகத்தில் வாழ்கின்றனர்.
ஓரு மனிதனின் ஆயுள்காலம் சுமார் 60 அல்லது 70 ஆண்டுகள் ஆகும். அதில், 30 ஆண்டுகளுக்கு மேல் குடியுரிமை இல்லாமல் வாழ்வது என்பது "இந்தி"(தீ)ய ஒன்றியத்தின் அரசியல் சட்டத்துக்கு எதிரானது. மனித தன்மைக்கு எதிரானது.
தமிழகத்தில் ஏதிலிகளாக வாழ்ந்துக் கொண்டிருக்கும் இலங்கை தமிழ் ஏதிலிகள் சுமார் ஒரு லட்சம் பேருக்கு "இந்தி"(தீ)ய ஒன்றியத்தின் குடியுரிமை வழங்கவேண்டும் என்று மத்திய, மாநில அரசுக்கு உத்தரவிடவேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
--அருள்மொழிமாறன்
"இந்தி"(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு..
செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்
www.senkettru.wordpress.com
thamilarulaham.org
http://senkettru.blogspot.in/
http://iamnotaliberator.blogspot.in/
தமிழர் தேசியம் சார்பான காணொளிப்பதிவு பார்க்க…
https://www.youtube.com/my_videos?o=U
No comments:
Post a Comment