
எங்கள் மண்ணைத் தொட்டவன் கால்கள் எங்கள் நிலத்தில் உரமாகும்!!!!
பிறந்த பிள்ளை நடந்து பழக
கையில் வேலைக் கொடுப்போம் !
பிறந்த குழந்தை இறந்து பிறந்தால்
வாளால் கீறிப் புதைப்போம்!!!
யுத்தச் சத்தம் கேட்டால் போதும்
முத்தச் சத்தம் முடிப்போம்!
இரத்தக் குளத்தை நிரப்பி நிரப்பி
வெற்றித்தாமரையை பறிப்போம்!
எங்கள் மண்ணைத் தொட்டவன் கால்கள்
எங்கள் நிலத்தில் உரமாகும்!
எங்கள் பெண்ணைத் தொட்டவன் கால்கள்
எங்கள் அடுப்பில் விறகாகும்
No comments:
Post a Comment