Monday, October 28, 2013

GTO எனும் தோழமை அமைப்பு இப்போதெல்லாம் காவி நெடி அடிக்க ஆரம்பித்து உள்ளது. பா.ஜ.க வும் ஹிந்தியமும் திடீர் நண்பர்களாக இவர்கள் காணும் மர்மம் எதனால் வந்தது என்பது ஒன்றும் புதிரல்ல.

543024_289353131144665_291739279_n
தமிழக இஸ்லாமியரை பற்றி சரியான புரிதல் இல்லாத சில ஈழ தோழர்கள் தங்கள் சொந்த நாட்டு புரிதலை இங்கு ஒலிபெயர்ப்பதும் ஒரு காரணம். அதற்காக இஸ்லாமியர் அனைவரும் தமிழ் உணர்வாளர்கள் என்ற வாதத்தை நான் இங்கு சொல்ல வரவில்லை. ஹிந்துக்களில் எத்துனை துரோகிகளும் சமஷ்கிருதம் தூக்கி பிடிக்கும் அவலட்சணங்களும், இத்தாளிக்காரிக்கும் கன்னடத்திக்கும் தெலுங்கனுக்கும் அல்லக்கைகளாக கிடக்கும் அற்பங்களும் மலிந்து கிடக்கின்றனரோ அதை விடவும் பிற மதங்களில் தமிழ் உணர்வு அற்றவர்கள் எண்ணிக்கை விகிதாச்சாரத்தில் அதிகமா என்ன?

தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்று முதன் முதல் போராடிய அய்யா காய்தே மில்லத், ஹிந்தி எதிர்ப்பு போராளி கான் பகதூர், கட்சதீவை கருணாநிதி தாரை வார்த்து கொடுக்க அதற்க்கு முழு எதிர்ப்பு அப்போது காட்டிய ஒரே பெயர் சொல்லக்கூடிய நபராகிய அய்யா "மதுரை ஷேரிப்" அவர்கள் தொட்டு ஈழத்திற்காக முதன்முதலில் தமிழகத்தில் தீக்குளித்த மாவீரன் அப்துல் ரவூப் வரையான மனிதர்களை நாம் மறக்க தான் வேண்டுமா?

A study published in 2010 by the European Journal of Human Genetics compared DNA samples of six different groups of Indian Muslims―Sunnis and Shias from Uttar Pradesh, Shias from Andhra Pradesh, Dawoodi Bohras from Gujarat, and Dawoodi Bohras and Mappla Muslims from Tamil Nadu―with non-Muslim Indian samples, as well as samples from Pakistan, Middle East, Central Asia, East Asia and Europe.

Its key finding was that “unlike Muslim communities in China and Central Asia, which show a marked presence of Western Y chromosomes, Indian Muslims derive most of their Y chromosomes from local neighboring non-Muslim populations, suggesting a regional genetic affinity among Indian Muslim and non-Muslim populations.”

இது அறிவியல் ஆதாரம் இஸ்லாமியர் எம் இனத்தவர் என்பது. மேலும் குறிப்பாக, "At least at the Y-chromosomal level, the origin of Muslim isolates in south India is predominantly from local populations rather than from other Muslims of other parts of India, or outside the country"

இத்தோடு இந்திய மரபணு ஆய்வு மையத்தின் ஆய்வு "Genetic affinity between diverse ethnoreligious communities of Tamil Nadu, India: a microsatellite study" சொல்வதையும் சான்றாக கூறலாம் - "Historically, a number of local
Hindu caste groups have converted to Islam and formed religious endogamous groups. Therefore the local caste groups and religious communities in a region are expected to show genetic relatedness. In this study we investigate the genetic relationship between Tamil-speaking (Dravidian language) Muslims (Sunni), six endogamous Hindu castes, and a tribal ethnic group (Irulars) using 13 CODIS (Combined DNA Index System) autosomal microsatellite markers. Muslims show the highest average heterozygosity (0.405) compared to the other groups. The neighbor-joining tree and the multidimensional-scaling plot show clustering of Tamil-speaking Muslims with three caste groups (Gounder, Paraiyar, and Vanniyar), whereas the Irular tribe is separated out of the cluster."

சுருக்கமாக, தமிழ் இஸ்லாமியர்கள் முழு தமிழர்கள் (குறிப்பாக கவுண்டர், பறையர் மற்றும் வன்னியருடன் மரபணு ஒத்தவர்கள் என்கிறது இந்திய ஆய்வு அறிக்கை). மதத்தால் அவர்கள் மாறுபட்டு இருக்கலாம். இனத்தால் எம்மவர்கள். வடநாடு போல வாள் கொண்டு இஸ்லாமிய மதம் இங்கு வரவில்லை. தமிழன் கோலோச்சிய கடல் வாணிபத்தால் அரபியரோடு நட்பால் மதம் மாறினர். பின் வந்த காலங்களில் பிராமணிய வெறியாட்டங்களில் இருந்தும், சாதியாக அழுகி கிடப்பதில் இருந்து விலகவும் மதம் மாறினர். நம் முப்பாட்டன் தான் அவர்கள் முப்பாட்டனும். அவர்கள் மார்க்கம் வேறாக இருக்கலாம், அதனால் என்ன? நமக்கு இந்த மண்ணில் வாழ என்ன உரிமை உள்ளதோ அதே அளவு உரிமை அவர்களுக்கும் உள்ளது.

மார்க்கங்கள் மாறலாம், மரபணு மாறாதே. சங்க காலத்தில் முழு தமிழகமும் சமண மதத்தில் தான் இருந்தது. பாண்டிய நாட்டில் தமிழனின் முந்தைய மதமாம் சைவ (ஹிந்து அல்ல, பின்னால் இது பற்றி பார்க்கலாம்) மதத்தை பின்பற்றுவது கூட குற்றம் என கருதப்பட்ட காலமும் உண்டு. எமது வீரமறத்தி கண்ணகி சமணத்தி. அறிவீரோ?

இந்து மதம் என்று ஒரு ஒற்றை மதம் இல்லை. பல்வேறு தத்துவங்கள், வழிபாடுகள் வழக்கங்கள் ... இவிங்களுக்கு என்ன மதம் என்று கேட்ட போது அரபுகள் சொன்னது தான் இந்து மகா நதிக்கு அந்த புறம் இருப்பவர்களின் மார்க்கங்கள் -ஒருவரின் குலசாமி கோயிலில் பங்காளிகள் தவிர வேறு எவனும் வழி பட முடியாது. சைவம் வேறு, வைணவம் வேறு. சித்தர் கர்ப்பிபதை பின்பற்றினால் வேதம் ஒழிய வேண்டும். வேதம் சொல்வதன் படி போனால் சித்தர்கள் அயோக்கியர்கள். அத்வைதம்படி போனால் எல்லாமும் சரியே. நிகிலிசம் சரி என்றால் எல்லாம் மாயையே. காளி நரபலிக்கும் கருப்பு வழிபாடுகளுக்கும். ஊர் சாமி கோயில்கள் பக்கத்து ஊரன் நம் ஊரை அடிக்க வந்த போது அவனை எதிர்த்த மாவீரர்களுக்கு உரியது. முருகன் தமிழ் கடவுள், வடநாட்டானுக்கு தெரியாது. வழிபட மாட்டான். அம்மன் வழிபாடு திராவிடரின் வழிபாடு. இத்தோடு உலகின் பண்டைய குடிகளில் காணப்படும் மூதாதையர் வழிபாடு, இயற்கையோடு ஒன்றிய குடிகள் இன்றும் கொண்டிருக்கும் இயற்கை சக்தி வழிபாடு, உலகத்தின் அனைத்து குடிகளிலும் இருந்த/இருக்கின்ற யோனி வழிபாடு, ஆண் குறி (லிங்கம் என்ற சொல் இன்றளவும் ஹிந்தியில் ஆண் குறியை குறிக்கும்) வழிபாடு. இன்னும் எத்தனையோ மார்க்கங்களும் இந்து மகாநதிக்கு அப்பால். இப்படி தான் இந்து மதம் என்ற பெயர் வந்தது.

ஆரியர்கள் திராவிடத்தில் ஊடுருவும் முன்னர் அம்மன் மற்றும் சைவ வழிபாடே பிரதானமாக இருந்தது. ஈழத்தில் சைவ மதம் என்று அழைக்கப்படுவதும் தமிழன் இராவணின் தெய்வமாக சிவபெருமான் இருந்ததும் கவனத்தில் எடுக்கவும். திராவிட வழிபாடுகள் எப்படி ஆரிய நோக்கில் வளைத்து ஒடிக்கப்பட்டு, ஆரிய கடவுள்களை திராவிடர்கள் வழிபடவும் ஆரிய பூசாரிகளை (பிராமணர்கள்) திராவிடர்கள் கொண்டாடும் நிலையும் உருவாக்கப்பட்டது என்பதை Dravidian Gods in Modern Hinduism by Wilber Theodore Elmore, என்ற ஆய்வு நூல் விவரிக்கிறது. இந்த ஆய்வு ஆந்திராவை மையமாக கொண்டது எனினும் தமிழரின் கிராமப்புற வழிபாட்டு முறைகள் அறிந்தவருக்கு ஒப்பிட கூடியதாகவே உள்ளது. மதத்தால் வேருன்றிய ஆரியம், வீரியம் கொண்டதும் வர்ணாசிரம முறை வளர்ந்ததும், இன்றளவும் ஆரியன் இராமன், தமிழன் இராவணனை கொன்றதை நாமே துதிப்பதும் விழா எடுப்பதும் என தமிழன் ஆரியனிடம் சமூக கலாச்சார தேசிய அடிமையாக இருப்பதும் காண கூடியதாக உள்ளது. ஹிந்து வெறியர்களுக்கு பணிய நேர்ந்தால் இராஜ பக்சேயை நம் சந்ததியினர் கோயில் கட்டி கும்பிட்டு தேசிய தலைவர் பொம்மை எரித்து மே 18 ஐ விழாவாக கொண்டாடினாலும் ஆச்சர்யமில்லை. இராவணனுக்கும் இதுவே தான் நடந்தது.

*** மதங்களை பற்றி போதுமான அளவு நாம் கவனித்து விட்டோம். தமிழ் தேசியம் பேசும் ஹிந்துத்துவ வாதிகள் பற்றி அடுத்து பார்ப்போம்.
ஒரு இனப்படுகொலயாலனை எதிர்க்க இன்னொரு இனப்படுகொலயாலனை ஆதரிக்க வேண்டுமாம் தமிழர்கள். தமிழக இஸ்லாமியன் எம் சகோதரன். எவனும் எங்கள் உறவில் விளையாட நாங்கள் அனுமததிதது இல்லை. அனுமதிக்க போவதும் இல்லை. தமிழனுக்கு வலிப்பது போல் தான் இஸ்லாமியனுக்கும் வலிக்கும், கஷ்மீரனுக்கும் வலிக்கும், மணிப்பூரிலும் (ஹிந்தியாவின்) வடகிழக்கிலும் போராடும் வேரினத்தவருக்கும் வலிக்கும். இந்தியா தேசிய இனங்களின் சிறைக்கூடம் என்று தமிழ் தேசிய தலைவர் தமிழரசன் முழங்கியது மிகவும் சரியான உண்மை.
*** மாற்று என்ன?
ஹிந்தியா எனும் கட்டமைப்பு புரியாத எவரோ தான் வெகு புத்திசாலி என நினைத்து கொண்டு GTO வை இயக்குவதாக தோன்றுகிறது. ஹிந்தியா மூலம் ஈழம் அமையாது. ஹிந்தியாவை நம்பி நாசமாக போனது போதாது போலும். பெரும்பான்மை பிடித்து மத்தியில் அமர்ந்து பெரும் பணி ஆற்ற போகிறீர்கள்... by the way, ராஜீவ் க்கு பிறகு அமைந்த ஒவ்வொரு மத்திய அரசும் தமிழரின் ஆதரவாலேயே ஆட்ச்சியில் இருந்தன, என்ன சாதித்தார்கள்? மக்கட் தொகை கணக்கெடுப்பில் வெகு குறைவான மலையாளி ஏன் ஏறி மிதிக்கிறான்? ஏன் இரண்டு மலையாளிகளுக்காக ஒரு ஐரோப்பிய நாட்டின் கப்பல் படையே நடுங்குகிறது? எதனால்? ஒற்றுமையால். மலையாளி மலையாளியை முன்னிறுத்துவதால். எத்தனை தெலுங்கு, கன்னட, மலையாள முதல்வர்கள் அங்கு கண்டு உள்ளீர்கள்?
அங்கு விகிதாச்சாரப்படி இஸ்லாமியர் அதிகம் தமிழகத்தை விட. ஹிந்துத்துவ வேரூன்றியதாலா மலையாளி தன் இனம் காத்தான்? அங்கு உள்ள அரசியல்வாதியை மலையாள இனத்திற்கு எதிராக பேசி விட்டு வெள்ளையும் சொள்ளையுமாக வெளியே வர சொல்லுங்களேன் பார்க்கலாம். இங்கு மட்டும் தான் சூ சுவாமியும் சோ வும் உயிரோடு இருக்க முடியும். TV யில் ஏறி தமிழன் தீவிரவாதி என்றும் போர் என்றால் மக்கள் கொல்லப்படுவது சகஜம் தானே என்று சொல்லி விட்டு ஆட்ச்சியில் ஏற முடியும். இங்கு மட்டும் தான் உன்னாவிரத நாடகங்கள் அரங்கேறும். இங்கு மட்டும் தான் ஈழம் என்ற சொல்லை அகற்ற வேண்டும் என்று திராவிடன் வேடம் பூணுவான்.
*** முடிவுரை
உலக தமிழர் ஒற்றுமை என்கின்ற பேரில் ஒன்றாக இருக்கும் தமிழரையும் பிரிக்கும் சதி போல உள்ளது. GTO வின் கொள்கை நிலையாளர்கள் தங்களது பாதையை யோசித்து எடுப்பது நல்லது. ஏற்கெனவே தலித்களை அந்நியப்படுத்தி விட்டது "ரா". இப்போது சில அமைப்புகள் மூலம் இஸ்லாமியரையும் அந்நியப்படுத்த முயற்சி நடக்கிறது. மே மாதமே இது இப்படியாக தான் போகும் என்று ஒரு ஜோக் காக சொல்லி இருந்தேன். அதை மெயபடுத்தும் வேலைகள் துரிதமாக நடக்கின்றன. மாற்று கருத்து கொண்ட எல்லோரையும் துரோகிகள் "ரா" விற்காக வேலை செய்கின்றனர் , என சொல்வது ஈழ மண்ணில் வாடிக்கை. GTO அப்படி இல்லை என்றே நம்புகிறோம், ஆனாலும் சூழ்ச்சி வலையில் விழ வேண்டாம் என்பது தான் வேண்டுதல். ராஜபக்சேயின் தரகன் சூ. சுவாமியும், இன எதிரி சோவும், இலங்கை ஒருமித்த நாடே என்று முழங்கிய ராஜபக்சேயின் விருந்தாளியும் பாராளுமன்ற எதிர் கட்சி தலைவருமான சுஷ்மிதாவும், இந்தியா இலங்கைக்கு எதிரான
அமெரிக்க தீர்மானத்தை ஆதரிக்க கூடாது என்று முழன்கியவர்களும் GTO விற்கு என்று தனியாக ஒரு ஸ்பெஷல் பார்சல் ஈழம் தர போகிறார்களாம்.

மதங்களினால் நாடுகள் உருவாவது இல்லை. அப்படியாயின் ஐரோப்பா முழுவதும் (துருக்கி தவிர்த்து) ஒற்றை நாடாகி இருத்தல் வேண்டும். தேசிய இனங்கள் தான் நாடுகள் கண்டுள்ளன. Well, predominantly this has been the case. சாதி, மத வேறுபாடுகள் கலைந்த ஒருமித்த தமிழின உயர்வே தமிழ் தேசியம். எவரும் மார்க்கங்களை நம்பிக்கைகளை அடையாளங்களை களைய வேண்டிய அவசியமில்லை. மற்ற எல்லாவற்றையும் பின்னிறுத்தி தமிழர் உரிமையை முன்னிறுத்தும் உள்ளடக்க அரசியல் தமிழ் தேசியம். பிளவுபட்டு பிளவுபட்டு போக அல்ல, ஒன்று சேர்ந்து ஒருமித்த தமிழ் தேசம் காண்போம். "ரா" வின் சூழ்ச்சிகள் தொடரட்டும், எங்கள் போராட்டமும் தொடரும். தலித்கள் இஸ்லாமியர் சிறுபான்மையினர் இல்லாத தமிழ் தேசியம் பொய்மை.

-இந்தியன் அல்ல தமிழன்

No comments:

Post a Comment