Wednesday, October 16, 2013

ஒரு சனநாயக நாட்டில் ஒவ்வொரு குடிமகனும் அவரது சொந்த தாய் மொழியில் தானே கையெழுத்து இடும் உரிமையை பெறவேண்டும். அவ்வாறு இல்லாமல் ஏன் வேறு ஒரு மொழியில் கட்டாயமாக கையெழுத்து போட வேண்டும்? நீதியை நிலைநாட்டும் நீதிபதிகளுக்கு இது தெரியாதா ?

ஹிந்தி வெறி சுதந்திரம், சமஉரிமைகளுக்கு எதிரான ஆதார் அட்டை கட்டாயமல்ல : உச்சநீதிமன்றம் அதிரடி தனிமனித விவரங்களான கண்ரேகை , விரல் ரேகைகளை பொது மக்களிடம் சேகரிப்பதோடு , அவர்களை கட்டாயப் படுத்தி அவர்களின் வங்கிக் கணக்கை ஆதார் அட்டையோடு இணைக்கிறது நடுவண் அரசு.நாங்கள் தாய் மொழியில் தான் கையெழுத்திடுவோம் என்று ஏன் நீதிபதிகள் சொல்லவில்லை. "இந்தி"(தீ)யில் கையெழுத்து இட்டவுடன் அவர்களுக்கு நீதிபதி பதவி வழங்கப்பட்டுவிடுமாம் . அதுவரை அவர்களுக்கு பதவி வழங்கப்படாது எனத் தெரிகிறது.

இது மொழி உரிமைக்கு புறம்பானது அல்லவா ?

மனித உரிமை மீறல் ஆகாதா ?

 

 

நீதிபதிக்கே இந்த நிலை என்றால் "இந்தி"(தீ)ய ஒன்றியத்தில் சாதாரண குடிமகனுக்கு எந்த அளவில் இந்தி"(தீ) திணிப்பு இருக்கும் என்று சொல்ல வேண்டியதே இல்லை. அதை தடுக்கும் வல்லமை குடிமகனுக்கு நிச்சயம் இருக்காது.

"இந்தி"(தீ)ய ஒன்றியத்தின் இந்தி"(தீ) திணிப்பு, வெறிப் போக்கிற்கு நாம் நிச்சயம் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும். "இந்தி"(தீ)ய ஒன்றியத்தில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் சம உரிமைகள் கொடுக்கப் பட வேண்டியது தான் முறையானது .

அனைத்து மொழிகளும் ஆட்சி மொழியாக வேண்டும் என்ற கோரிக்கையை இந்திய மக்கள் அனைவரும் வலியுறுத்த வேண்டும் . இல்லையெனில் "இந்தி"(தீ)யை அனைவரின் தாய் மொழியாக ஏற்க வைக்கும் "இந்தி"(தீ)ய ஒன்றியம் என்பதில் ஐயமில்லை.

இந்தி"(தீ) திணிப்பு, வெறிப் போக்கையும் ஆதிக்கத்தை ஒழிப்பதே நாம் தற்போது முன்னெடுக்க வேண்டிய பெரும் போராட்டமாகும்.

-----------------------------------------------------------

இதை ஏற்றுக்கொண்ட சனாதிபதி, 7 பேரையும் நீதிபதியாக நியமிக்க கடந்தவாரம் ஒப்புதல் அளித்தார். இதை தொடர்ந்து, சனாதிபதி மாளிகையில் இருந்து, சென்னை உயிர்நீதிமன்றத்திற்க்கு ஆவணங்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

அந்த ஆவணங்களில், உயிர்நீதிமன்றத்திற்க்கு நீதிபதி பதவிக்கு தேர்வாண ஆர்.மகாதேவன் உட்பட 7 பேரும் நேற்று இந்தி"(தீ) மொழியில் தங்களது கையெழுத்தை போட்டனர். இதையடுத்து அந்த ஆவணங்கள் நேற்று மாலையே டெல்லியிலுள்ள சனாதிபதி மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

நீதிபதிகளாக தேர்வு செய்யப்பட்டவர்கள் இந்தி"(தீ) மொழியில் கையெழுத்திட்ட பிறகு, அவர்களை நீதிபதியாக நியமித்து சனாதிபதி இறுதி உத்தரவு பிறப்பிப்பது வழக்கம்.

இப்போது, 7 பேரும் இந்தி"(தீ)யில் கையெழுத்து போட்டதை தொடர்ந்து, அடுத்த சில நாட்களில் இவர்களை உயிர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமித்து சனாதிபதி உத்தரவு பிறப்பிப்பார் என்றும், இதைத்தொடர்ந்து 7 பேரும் வரும் வாரங்களில் பதவி ஏற்பார்கள் என்றும் உயிர்நீதிமன்ற வட்டாரத்தில் கூறப்பட்டது.

-இளையவேந்தன்

"இந்தி"(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு..                         

செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்

www.senkettru.wordpress.com

thamilarulaham.org

http://senkettru.blogspot.in/

http://iamnotaliberator.blogspot.in/

தமிழர் தேசியம் சார்பான காணொளிப்பதிவு பார்க்க

https://www.youtube.com/my_videos?o=U

 

No comments:

Post a Comment