Thursday, October 17, 2013
"எங்கள் கலைக்கூடு இன்று ஆனது கலைக்களமாய்"
"எங்கள் கலைக்கூடு இன்று ஆனது கலைக்களமாய்"
படைக்கு ஒரு தளபதி என்பதுதான் உலக
வழக்கம் ;ஆனால்
கலைப்படை முழுவதுமே தளபதிகள் என்பதுதான்
எங்கள் முழக்கம் !!!
பார்க்கும் போது மனிதனாய் தெரிந்தவர்கள்;
பழகியபிறகு கலைக்கு தளபதிகளாய் ஆனவர்கள் !!!
என் நண்பர்களுக்கு
இன்று நான் எழுதும் கவிதை !!!
நாங்கள் கோர்த்த கைகள் இன்று ;
நின்றது "தன்மானம் கலைக்களமாய்"
படையை பலவாய்,பலஇடங்களில் பெருக்கிவிட்டலும் ;
என் பிள்ளைகள் இழந்ததும் இதற்க்கு உழைத்தும்
என்றும் நான் மறவேன், என் கலை கூட்டின் தந்தையாய் !!!
இதோ !
தலைமை தளபதி மோகன் ;
என் துணைவன்!
என் அன்பன்;
என் நண்பன்;
என் மாற்று இதயன்;
கலைகலத்தின் சாரதி;
அவன் இல்லாமல் என் வாழ்வை கூறமுடியாது!!!
அவன் இல்லாமல் எங்கள் நண்பர் கூட்டில் சிரிப்பு நிறையது !
எனக்கும் கலைக்கும்
தன்னையே அர்ப்பணித்த மழைத்துளி இவன் !!!
என் கண்கள் கலங்கவைத்த பாரதி இவன் !!!
கோடிமுறை நான் அடித்தாலும் வெறுத்தாலும்
என்னை பிரியாத ஒற்றை உயிர் ! என் மாமா !
உயிரை பிரிந்த வலி உணர்கிறேன்
என் மோகனை பிரிந்ததில் !!!!!!!!!!!
அடுத்து , இவன் எங்களுக்கு தாய் !!!
கல்லூரி நேரத்தில் என் தாயை பிரிந்த வழியை
மீண்டும் இன்று கொடுத்தவன் !!!
இந்த கவிதையை யார் படித்து உணராவிட்டாலும்
இவன் கண்ணில் நீர் ததும்பும் ! உறதி
என்னை ரசித்த முதல் நண்பன்!
என் முகபாவனை பயிற்சியாளன்;
என் கலைகளின் காதலன்;
என் ஆடை வடிவமைப்பாளன்;
எங்கள் நண்பகுடுன்பதின் ஒளிசுடர் !!!
அருணு மறக்கமாட்டேன் டா !!!
இவன் பெயர் டார்வின்!
எங்கள் செல்லக்குழந்தை !
எங்கள் வீட்டின் இசையமைப்பாளன்,
தினம் தினம் நாட்டிற்கு போராடுபவன் !
என்னையும் போராட வெய்தவன் !
நாங்கள் பார்க்காத ஆயுதம் இல்லை
நாங்கள் சுடாத ஆளும் இல்லை
எப்படி தெர்யுமா ?
பகைவரை சுடுவோம் கணினியில் !
பல மேடைகளில் எனக்கு ஊக்க மருந்திவன் !
என் வலது கையாய் ஆடிய மன்னவன் !
பல துரோகிகளால் இவள் ஆட்டத்தை இழந்தோம் பாதியில்,
இன்று நட்பில் தூரம் நிற்கிறோம் !
இவன் நவீன் !
இவனை வர்ணித்தால் பலரும் என் மேல் கோபம் கொள்ளக்கூடும் !!!
ஏன்னென்றால் இவனை நாங்கள் "பங்காளி" என்று வர்ணித்து விட்டோம் !
இவன் ஆறடி உயரம் அனால் அரவணைப்பு நூறடி கொண்டவன் !
இன்றும் என்னோடு கைப்பிடிப்பவன் !
என்றும் என்னோடு கை பிடிப்பான் !
பல முறை என் கண்ணில் கண்ணீரை பொங்காமல் ;
அணைகட்டி காத்த கரிகாலசோழன் இவன்!
இவன் வலிகள் பல இருந்தும்
என் வலிக்கு மருந்திட்ட சித்தன் இவன் !
என் அன்னை மடியில் பிறவா அண்ணன் இவன் !!!
" பங்கு மறக்க மாட்டேன் யா !"
உங்கள் அனைவரையும் மீண்டும் கட்டி அணைக்க
மேடையை எதிர் பார்த்திருக்கேன் டா ! சீக்கிரம் வாங்க !
என் தளபதிகளுக்கு கோடி கவிதைகள்
செதுக்கினாலும் ஈடாகாது!
அதனால் தான் பல முறை கண்ணீர்
வடித்து ஈடு செய்ய முயற்சிக்கிறேன் ;முடியல !
இப்படிக்கு,
என்றும்,
உங்கள் சக்கரை ;
"இந்தி"(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு..
செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்
www.senkettru.wordpress.com
thamilarulaham.org
http://senkettru.blogspot.in/
http://iamnotaliberator.blogspot.in/
தமிழர் தேசியம் சார்பான காணொளிப்பதிவு பார்க்க…
https://www.youtube.com/my_videos?o=U
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment