நாம் என்ன செய்ய வேண்டும்?
தமிழா!
கருப்பு வேண்டாம், சிவப்பு வேண்டாம்
கருப்பும் சிவப்பும் இனி வேண்டாம்
ஆண்ட இனம் துவண்டது போதும்
அறிவுடைத் தமிழன் ஆட்சிக்கு வரணும்.
எதுகை வேண்டாம், மோனை வேண்டாம்
ஏமாற்றும் பேச்சு இனியும் வேண்டாம்
வஞ்சக நரிகளை வணங்கியது போதும்
வாழ வழி தமிழன் வகுத்திட வேணும்.
கூட்டம் வேண்டாம், கூட்டு முழக்கம் வேண்டாம்
குழு குழு வீரம் இனி வேண்டாம்
பாமரர் மகிழ நடித்தது போதும்
பண்பினர் பாராட்ட செயல் படைத்திட வேணும்.
நடிப்பு வேண்டாம், நா நயம் வேண்டாம்
நல்லுரைத் தேடாமை இனி வேண்டாம்
வந்தேறி வாழ வாழ்ந்தது போதும்
வல்லமை நாம் பெற வழித்தேட வேணும்.
ஒதுக்க வேண்டாம், ஒதுங்கிட வேண்டாம்
ஓநாய் ஊளையிடல் இனி வேண்டாம்
உணர்வின்றி உரிமை இழந்தது போதும்
ஓர்மையில் நின்று நாம் சாதிக்க வேணும்.
புலம்பல் வேண்டாம், புறம் கூறல் வேண்டாம்
புல்லறிவாண்மை இனி வேண்டாம்
தான்தோன்றி முடிவை தவிர்த்தால் போதும்
தலைவனாக கொள்கையை ஏற்றல் வேணும்.
-பொன்பரப்பியான்
"இந்தி"(தீ)யன் அல்ல தமிழன்டா "
"இந்தி"(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு..
செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்
www.senkettru.wordpress.com
No comments:
Post a Comment