தமிழக, கேரள மக்களின் பாதுகாப்பைக் கருத்தில்கொள்ளாமலும், லட்சக்கணக்கான மக்களின் உயிரோடு விளையாடும் வகையில் கூடங்குளத்தில் தொடங்கப்பட்டுள்ள அணுஉலைகளில் இதுவரை மின் உற்பத்தி தொடங்கப்படவில்லை.
பிரதமர் தொடங்கி மத்திய அமைச்சர்கள் பலரும் அணு உலையில் உற்பத்திக்கான தேதியை பலமுறை அறிவித்தும், அறிவித்தபடி உற்பத்தியே தொடங்கவில்லை. கூடங்குளம் அணு உலைத் திட்டமே தோல்வியில் உள்ள நிலையில் 3ஆவது மற்றும் 4ஆவது உலைகளுக்காக ரசுயாவுடன் ஒப்பந்தம் செய்ய பிரதமர் மன்மோகன் சிங் முடிவு செய்துள்ளார்.
இதற்காக ரசுயாவுக்கு வரும் 20ஆம் தேதி புறப்பட்டுச் செல்கிறார். அங்கு கூடங்குளம் அணு உலை திட்டம் தொடர்பாக அடுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறார். பிரதமரின் இந்த முடிவுக்கு அணு உலைக்கு எதிரான மக்கள் இயக்கம் கடும் கண்டனம் தெரிவிக்கிறது.
இடிந்தகரையில் வரும் 20ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். மற்ற இடங்களிலும் தயவு செய்து எதிர்ப்பினைப் பதிவு செய்யுங்கள்.
-கூடங்குளம் அணுவுலை எதிர்ப்பியக்கம் மற்றும் செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர் குழு
"இந்தி"(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு..
செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்
www.senkettru.wordpress.com
தமிழர் தேசியம் சார்பான காணொளிப்பதிவு பார்க்க…
That's the reality of the Fukushima Daiichi nuclear power plant accident
http://youtu.be/pV2OEJTmR7k
No comments:
Post a Comment