Sunday, October 27, 2013
கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி! காமம் செப்பாது, கண்டது மொழிமோ பயிலியது கெழீஇய நட்பின், மயில்இயல் செறிஎயிற்று, அரிவை கூந்தலின் நறியவும் உளவோ, நீ அறியும் பூவே? –குறுந்தொகை
காதல் வாழ்க்கை அழகும்,தன்னுள்ளே மட்டும் நினைந்து,நினைந்து இன்பம் காணக் கூடியதும் ஆகும்.எனவே தான் அகம் என்று முன்னோர்கள் கூறினர். புறம் என்பது, புறப்பார்வை என்பது அளந்தறியக்கூடியது. காதலைச் சொல்வது அகப்பார்வை.கண்ணால் கண்டதைச்சொல்வது புறப்பார்வை.ஆய்வு செய்யும் அறிவியலாளர்களுக்கு புறப்பார்வை தான் தேவை.
எனவே தான் தலைவன் தன் தலைவியின் கூந்தல் மணத்தை விட வேறு சிறந்த மணம் உண்டா? என்று சந்தேகத்தை தீர்த்துக் கொள்வதற்காக, ஒவ்வொரு மலராகச் சென்று தேன் உண்ணும் தும்பிக்கு ஒவ்வொரு மலரின் மணம் அளந்தறியக் கூடிய பார்வை உண்டு.
எனவேதான் தும்பியைப்பார்த்து தன்னுடைய அகஉணர்வைப் பற்றித் தீர்ப்புக் கூற வேண்டுகிறான் தலைவன்???
இந்தப் பாடலுக்கும் சிவபெருமானுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.ஆனால் திருவிளையாடல் திரைப்படத்தில் தருமிக்கு சிவபெருமான் இக்கவிதையை எழுதி கொடுப்பதாகவும் ,அதனால் நக்கீரனுக்கும் சிவபெருமானுக்கும் வாதம் நடந்து அதில் கோபமாகி சிவபெருமான் நக்கீரனை எரித்ததாகவும் காட்சிகளை அமைத்துக் கதை விட்டிருப்பார்கள்.
ஆனால் இந்தப் பாடலுக்கும் திருவிளையாடல் புராணத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.இது மனுவாதிகள் தமிழ் இலக்கியங்களைத் திருடி தங்களது கற்பனையைப் புகுத்தி, ஆபாச புராணக்கதைளைப் படைத்தனர்.
மேலும் நாயக்க மன்னர்கள் துணையுடன் மேலும் மேலும் புராணக்கதைகளைப் புனைந்து தீபாவளி முதலிய பண்டிகைகளை உருவாக்கினார்கள். இப்படி மனுவாதிகள் செய்த புரட்டுக்களை தமிழ் மக்களிடம் எடுத்துச் சொல்லாமல் மனுவாதிகளை எதிர்ப்பதாகக் கூறிய ஈ.வே.ராமசாமி தமிழில் எல்லாம் புராணக்கதைகளும் ஆபாசங்களும் மட்டுமே மலிந்திருப்பதாகவும் எனவே தமிழர்கள் யாரும் தமிழ் இலக்கியங்களைப் படிக்காதீர்கள், ஏன் தமிழிலேயே பேசக் கூடாது என்று வெறிக் கூச்சல் எழுப்பி தமிழையும், தமிழரையும் ஒழிக்க முனைந்தார்.
தமிழர்களும் தங்களது வளமான இலக்கியங்களையும்,தமிழையும் படிக்க மறந்தனர். இனியாவது தமிழர்கள் அனைவரும் நமது மொழியையும் ,சங்க இலக்கியங்கலையும் கற்போம். தமிழ் மொழிகாப்போம்,தமிழ் இனம் காப்போம் என்று உறுதி ஏற்போமாக.
இக்காட்சியை மற்றுமொரு கோணத்தில் பார்க்கும்போது தவறு என்பதை யார் செய்தாலும் தவறுதான் என்ற ஒரு நிலையில் தான் தமிழன் இருந்தான் என்பதை புலப்படுத்துகிறது!!! அதாவது தமிழன் பின்பற்றினானா என்றால்?? அதுவும் இல்லை???
துரோகிகளின் கூடாரமாக தமிழர் தேசம் மாறியது???
-செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போரின் குழு
"இந்தி"(தீ)யன் அல்ல தமிழன்டா "
"இந்தி"(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு..
செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்
www.senkettru.wordpress.com
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment