Saturday, October 5, 2013

உலகின் முதல் அறிவியல் நூல் தொல்காப்பியம்



ஆர்க்கீமிடீஸ் மிதவை விதியைக் கண்டுபிடித்தார் என்று மனப்பாடம் செய்யும் ஒரு பள்ளி மாணவர், அந்த மிதவை விதியைப் பயன்படுத்தி சோதிக்க முனைந்ததில்லை அல்லது முனையவிட்டதில்லை. காக்கா கல்லைப் போட்டு தண்ணியைக் குடித்தது என்று அந்தக் காலத்தில் பாட்டி கதைகளின் ஊடாக ஒளிந்திருந்த அறிவியல் விதிகள் பாட்டியோடு ஒழிந்துவிட்டது. மார்க் விழாதவரை எத்தனை ஆப்பிள்கள் விழுந்தாலும் நமூரில் நியூட்டன்கள் உருவாவதில்லை என்ற கூற்றும் உண்மையே! நடைமுறை உதாரணங்கள் இன்றியும், செயல்முறை ஒத்திகைகள் இன்றியும் பெரும்பாலும் நமது கல்விமுறை முனைமழுங்கப்பட்டுவருகிறது.தற்போது செயல்முறைச் சோதனைகள் சிலவற்றை இணையத்தில் செயல்படுத்திப் பார்க்கும் சிமுலேஷன் எனப்படும் பாவனைகள் வந்துள்ளன. இங்கு பலவிதச் சோதனைகள் உள்ளன, நாமே நகர்த்தியும் எரிந்தும், கலக்கியும் விளையாடலாம். தமிழிலும் உள்ளன, விரும்புகிறவர்கள் மொழிமாற்றம் செய்து கொள்ளவும் வசதிவழங்கப்படுகிறது.
விஞ்ஞானம் படிக்க அற்புத பாவனைகள்(Simulations)

http://phet.colorado.edu/en/simulations/translated/ta

-வேனிற்கோ

No comments:

Post a Comment