Thursday, October 3, 2013

உலகில் தமிழர்களுக்கான அரசு தமிழகத்திலும் புதுவையிலும் தான் உள்ளது. ஆனால் புதுவை மாநிலம் அல்ல. அது இந்திய ஒன்றியப் பகுதி. இதன் காரணமாக இங்கு உண்மையில் முதல் அமைச்சர் ஆட்சி செய்வதில்லை. அங்குள்ள ஆளுநரே ஆட்சி செய்துவருகிறார். இந்த ஆளுநர் தமிழரும் அல்ல. இவர் தமிழினத்திற்கு எவ்வாறு ஆட்சி செய்வார் எனத் தெரியவில்லை. இந்த நிலை மாறவேண்டும் எனில் புதுவையை தமிழகத்தோடு இணைக்க வேண்டும் அல்லது புதுவைக்கு மாநில உரிமையை கொடுக்க வேண்டும். அதற்கான செயல்திட்டத்தில் தமிழக அரசியல் தலைர்கள் முன்னெடுக்க வேண்டும். இல்லையெனில் புதுவை தமிழர்களின் கைவிட்டு போய்விடும்.

1379212_513676135390206_937160588_n 992814_481763781909166_499638122_n ௨௦௦௨ இல் மத கலவரம் செய்த பயங்கரவாதி மோடியை தமிழ்நாட்டில் அனுமதிக்காதே - Nicht in die terroristischen Modi Unruhen im Jahr 2002 in Tamil Nadu ஆரியமும் திராவிடமும் ஒன்று என்றறிக - Einer der arischen dravidischen enrarika ஆரியமும் திராவிடமும் ஒன்று என்றறிக - Einer der arischen dravidischen enrarika b2d1f-e0aea4e0af81e0aeb0e0af8be0ae95e0aebfe0ae95e0aeb3e0af88e0ae87e0aea9e0aeaee0af8de0ae95e0aebee0aea3e0af81e0aeb5e0af8be0aeaee0af8d

முதல் அமைச்சர் ரங்கசாமி புத்தகத்தை வெளியிட்டு பேசினார். அவர் பேசியதாவது:–

மாநில அதிகாரம் புதுவையின் வளர்ச்சிக்காகவும் மக்கள் நலனுக்காகவும் கேட்கப்படுகிறது. இது எனது ஒருவனுக்காக மட்டுமல்ல. என சுயநலத்திற்காகவும் கேட்கவில்லை. நாளை எந்த கட்சி வேண்டுமானாலும் ஆட்சிக்கு வரலாம். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள பல தலைவர்கள் புதுவைக்கு மாநில அதிகாரம் பெற்றத்தர உடன் நின்று போராடுவோம் என்று கூறினார்கள். ஆனால், புதுவையில் இருப்பவர்கள் சிலர் இதுபற்றி சிந்திப்பதில்லை.

நம்மிடம் போதுமான அதிகாரம் இல்லை. எங்கிருந்தோ வந்தவரிடம் அதிகாரம் உள்ளது. நாம் நினைப்பதை செய்து முடிக்க முடியவில்லை. அனைத்து அதிகாரமும் மத்திய அரசிடம் உள்ளதால் சட்டசபையில் கொண்டு வரப்படும் திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்ற முடியவில்லை. இதனை மாற்ற வேண்டும். இதற்காக நாம் போராட வேண்டும்.

நம்மை நாமே ஆள வேண்டும் நமக்குள் ஒற்றுமை வேண்டும். நமக்கு வேண்டியதை நாமே தீர்மானிக்க வேண்டும். மாநில அதிகாரம் பெருவோம் என்பதில் நம்பிக்கை உள்ளது. மத்திய மந்திரி புதுவை வரும் போதெல்லாம் பல்வேறு பிரச்சினைகள் குறித்து பேசுகிறார். ஆனால் புதுவை மாநில வளர்ச்சி குறித்து அவர் பேசுவது கிடையாது. புதுவை மக்கள் மீது அவருக்கு அக்கறை இல்லை.

மத்திய அரசு நிதி கொடுத்ததாக கூறுகிறது. ஆனால் அந்த நிதி எந்த அளவிற்கு நமக்கு கிடைத்தது. நமது வருவாய் என்ன என்பது இந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது. மாணவர்களுக்கான இந்த புத்தகத்தை அனைவரும் படிக்க வேண்டும். வருங்காலத்தில் மாணவர்கள் மாநில அந்தஸ்து கோரி அரசுக்கு நெருக்கடி கொடுப்பார்கள்.

-இளையவேந்தன்

No comments:

Post a Comment