இப்போது தமிழ்நாட்டில் சில தமிழ்க் குலங்கள் தாங்கள் தான் ஆண்ட பரம்பரை என்று பிதற்றித்
திரிவது வீண்பெருமையே. ஒருகாலத்தில் தமிழ்க் குலங்கள் அனைத்துமே ஆண்ட பரம்பரையினரே.
வர்லாற்றுப் போக்கில் முதலில் திராவிடம் ஆரியர்களோடு கூட்டுச் சேர்ந்து தமிழகத்தின் குலங்களை சாதிகளாக்கி அவற்றிற்கு இல்லாத புனைவுகதைகளைக்கூறி பின்னர் அவர்களைச் சாதிகளாக இறுக்கம் செய்தனர்.அதன் பின்னர் அவர்களை பிறப்பின் அடிப்படையிலும் சாதியாகப் பார்ப்பதையும் புகுத்தி தமிழர்களிடையே பிளவினை ஏற்படுத்தி திராவிடர்கள் ஆட்சி செய்ய்தனர்.அந்தக் காலக்கட்டத்தில் தான் தமிழர்களின் இறையாண்மை பிடுங்கப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக ஆட்ட்சி அதிகாரத்தில் இருந்தும்,அவர்களுடைய நிலங்களையும் பிடுங்கி பாளையங்களாகப் பிரித்து தெலுங்கர்கள் ஆட்ட்சியை நிலைநாட்டிக் கொண்டனர். எனவே தமிழ்நாட்டில் தமிழன் ஆண்ட பரம்பரை என்று சொல்லிக்கொள்ளவதற்கு இன்று வரை உரிமை என்பது இல்லவே இல்லை.சில தமிழ்க் குலங்கள் தாங்கள் மட்டுமே ஆண்ட பாரம்பரை என்று சொல்லிக் கொள்பவர்கள் எல்லாம் தமிழ் இன மீட்சிக்குக் குழிபறிப்பவர்களே.
மேலும் விழிப்புணர்வு பெற...
https://www.youtube.com/my_videos?o=U
-ஏகாந்தன்நம்பி ஏகாந்தன்
No comments:
Post a Comment