Saturday, September 28, 2013

தமிழர் என்பதே நம் அடையாளம்! சாதியாய் மதமாய் பிரிவது அவமானம்!


தமிழர்களே சிந்திப்பீர் !

இன்று நாம் சாதியாலும் மதத்தாலும் பிரித்து வைக்கப்பட்டுள்ளோம். மதவாத கட்சிகள் நம்மை தமிழர்களாக உணர வைக்காது , நம்மை மதவாதிகளாக குறுகிய வட்டத்திற்குள் அடைத்து வைத்து மற்ற மதங்களுடன் நம்மை மோதவிட்டு வேடிக்கை பார்க்கின்றன. தமிழர் ஒற்றுமையை மதத்தால் சீர்குலைத்து விட்டனர். தமிழர்கள் என்றுமே மதவாதிகள் அல்லர். இருந்தும் நம்மை பிரித்தாளும் சூழ்ச்சியை மதவாதிகள் தொடர்ந்து செய்து வருகின்றனர் . தமிழர் என்ற இன அடையாளத்தை சிதைத்து வருகின்றனர். ஆரிய இந்துத்துவா, இஸ்லாமிய, கிறிஸ்துவ மதவாத சக்திகள் தமிழர் ஒற்றுமைக்கு எதிராகவே செயல்படுகின்றனர்.

தமிழர்கள் எந்த மதத்தை சார்ந்தாலும், மதம் சாராதவராக இருந்தாலும் தாங்கள் முதலில் தமிழர் என்றே கருதுதல் வேண்டும். இனத்தால், மொழியால் நாம் அனைவரும் தமிழர்களே என்று உணருதல் வேண்டும். இனத்திற்கு பிறகே மதங்கள். மதங்களுக்குள் இருக்கும் பிற பிரிவினர் , சாதியினர் அனைவருமே தமிழர்கள் தான். நம்முடைய சாதி மத கருத்தியல் வேற்றுமைகள் களைந்து நாம் அனைவரும் தமிழர்களே என்று உலகிற்கு உரக்கச் சொல்வோம் . நம்மை பிரித்தாளும் மதவாதத்தை துரத்தி அடிப்போம். தமிழர்களாக ஒன்றினைவோம்.

தமிழர் என்பதே நம் அடையாளம்!
சாதியாய் மதமாய் பிரிவது அவமானம்!

-இளையவேந்தன்

No comments:

Post a Comment