Friday, September 27, 2013

தமிழர் நாட்டின் சிக்கல்கள் குறித்து பேசாது பாகிஸ்தான் அமெரிக்கா குறித்து மோடி திருச்சியில் பேசியது எந்த விதத்திலும் மோடிக்கு தமிழர்களின் ஆதரவை பெற்றுத் தராது.

ImageImage

தாய் மொழி உரிமைக்காகவும் , இந்தித் திணிப்பிற்கு எதிராகவும் கடந்த 75 ஆண்டுகளாக போராடும் தமிழ் மக்களின் நடுவே மோடி இந்தியில் உரையாற்றியது அவர் தமிழர்களின் உணர்வை புரிந்து கொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது.

தமிழர்களின் தலையாய பிரச்சினையான ஈழப் பிரச்சனை, கூடங்குளம் அணு உலை, மீதேன் எரிவாயு, கைல் குழாய் பதிப்பு, நியூற்றினோ, முல்லைப்பெரியாறு, காவரி, பாலாறு, மூன்று தமிழர் தூக்கு, தமிழர் இழந்த நிலம் மீட்டல், மாநில சுயாட்சி, தாய் மொழிக் கல்வி, இந்தித் திணிப்பு, தமிழை ஆட்சி மொழியாக்குதல், சாதி சிக்கல்கள், இயற்கை வளங்கள் சுரண்டப்படுதல் போன்ற எந்த தமிழர் பிரச்சனைகள் பற்றியும் பேசாமல் தமிழர்களுக்கு தொடர்பே இல்லாத பல செய்திகளை மோடி பேசிவிட்டு சென்றுள்ளார். மீனவர் பிரச்சனை குறித்து மேலோட்டமாக குஜராத் தமிழக மீனவர்கள் குறிப்பிட்டு ஒப்பீட்டு அளவில் பேசியுள்ளார்.

1.5 லட்சம் தமிழ் உறவுகளை பறிகொடுத்து விட்டு, 600 மீனவர்களை பறிகொடுத்து விட்டு, 25 ஈகிகளை நெருப்புக்கு இரையாக்கி விட்டு தமிழ் மக்கள் அனாதையாக நிற்கின்றோம். இவர்களுக்கு அரை நிமிடம் அஞ்சலி செலுத்தாத மோடி, இந்திய இராணுவ வீரர்களுக்கு இரண்டு நிமிட அஞ்சலி செலுத்தியுள்ளது தமிழர்களின் உணர்வை பாஜக புரிந்து கொள்ளவில்லை என்பதை காட்டுகிறது. இப்படிப்பட்ட பாஜகவை நம்பி தமிழர்கள் வாக்களித்தால் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு காவி உடை அணிந்த இன்னொரு காங்கிரஸ் ஆட்சி தான் நடக்கும் என்பதில் ஐயமில்லை.

- இளையவேந்தன்

No comments:

Post a Comment