வீட்டில் தங்களின் தாய்மொழியாகியத் தெலுங்கு,கன்னடம், மலையாளத்திலும் வெளியில் தமிழ்நாட்டில் தமிழ்மொழியையும் பேசுபவர்கள் திராவிடர்கள்.இவர்களின் கட்சிகளே தமிழ் மண்ணில் வலிமையாக இருக்கின்றன.தி.மு.க, அ.தி.மு.க என்கிற பெயர்களில் ஆட்சி செய்கின்றன.இவைகளின் நோக்கம் தமிழ்மொழி,இலக்கியம்,பண்பாடு,கலை, நாகரிகம் ஆகியவற்றை அழிப்பதும் கடைசியாக தமிழ் இனத்தை அழிப்பதும் ஆகும்.இந்த அழிப்பு வேலையில் முழு மூச்சாக இறங்கி செயல்பட்டவர் ஈ.வே.ரா. அவரது வாரிசுக் கட்சிகள் தி.மு.க, அ.தி.மு.க. திராவிடர்கள் தங்கள் சொந்த மாநிலங்களில் குறைந்த பட்சமாக 5-ஆம் வகுப்பு வரை தங்கள் தங்கள் தாய் மொழிகளைப் பயிற்சி மொழியாக்கி அவைகளின் மேம்பாட்டிற்கு வழி கோலிவிடுகின்றனர்.தங்கள் இனம் அழியாமல் இருப்பதற்கு ஆவண செய்துவிடுகின்றனர். அவர்கள் தங்களின் தாய்மொழிகளில் படிப்பவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கவேண்டும் என்பதற்காக 5-ஆம் வகுப்பிற்குப் பிறகு ஆங்கிலமொழிப் பயிற்சி அளித்து தமிழ்நாட்டிற்குள் வரவழைத்து தங்களின் ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி வேலை கொடுத்துவிடுகின்றனர்.
தமிழ் நாட்டை ஆளும் திராவிடர்கள் தங்கள் இன உறவுகளுக்கு ஏதுவாக தமிழ் நாட்டில் தமிழ் படிக்கவேண்டிய அவசியமில்லை என்கிற சூழ்நிலையை உருவாக்கி 1-ஆம் வகுப்பிலிருந்து தமிழ்க் குழந்தைகளுக்கு ஆங்கிலம் கற்பிக்கின்றனர். தமிழர்களுக்குக் கிடைக்கும் இந்த ஆங்கில அறிவு ஆந்திரா,கேரளா, கர்நாடகாவில் 5-ஆம் வகுப்பிற்குப் பிறகு ஆங்கிலம் படித்துவிட்டு தமிழ்நாட்டில் நுழைந்து திராவிடர்கள் பட்டம் பெற இருப்பவர்களை வரவேற்கவே பயன்படுகிறது. மேலும் அது தமிழர்கள்,திராவிடர்கள் என்பவர்களிடையே வேறுபாடு வெளிப்படுத்தப்படாமல் இருப்பதற்கே பயன்படுத்தப்படுகிறது.
ஆந்திராவில் ஓர் அரசு நிறுவனத்தில் 100 பதவிகள் இருக்கின்றன என்றால் தாய் மொழியில் தேர்வு வைத்து அந்த மாநிலத்தவர்க்கே 100 பதவிகளையும் கொடுத்து விடுகின்றனர். கேரளா,கர்நாடகாவிலும் அவ்வாறே. தாய்மொழியில் பயிற்சிபெற்று தேர்வு எழுதி வெற்றி பெறுவது மிகவும் சுலபமானது என்பது அனைவரும் அறிந்ததே.
ஆனால் தமிழ் நாட்டிலோ தாய்மொழி தமிழில் தேர்வு வைக்காமல்(தமிழில் தேர்வு வைத்தாலும் தமிழில் பயிற்சி இல்லாமையால் பயன் இல்லை) ஆங்கிலத்திலும் இந்தியிலும் தேர்வு வைப்பதால் அதே 100 பதவிகளுக்கு சுமார் 10,000 பேர் போட்டியிடுகின்றனர். இதன் விளைவாக தமிழை தாய்மொழியாக்க கொண்டவர்களுக்கு 10 பதவிகள்கூட கிடைப்பதில்லை. இது தமிழர்களுக்கு எதிராக திராவிடர்களால் வேண்டுமென்றே உருவாக்கப்பட்ட அவல நிலை.
ஆகவே தமிழ்நாட்டில் தமிழ் இளஞர்களுக்கு ஏற்பட்டிருக்கும் இந்த மோசமான அவல நிலையைப் போக்க, தமிழின் தொன்மையை நிலைநிறுத்த,தமிழின் கலை,இலக்கியப் பண்பாட்டை உயிர்ப்பிக்க தமிழ்நாட்டைத் தமிழர்களே ஆளவேண்டும்
-ஏகாந்தன்நம்பி ஏகாந்தன்
No comments:
Post a Comment