நம் தமிழால் என்று ஒன்றுபடுவோமோ, அன்றே நமது விடுதலை மொட்டு மலரத்தொடங்கும். ஒரு
மலையாள கிறித்துவர், ஒரு மலையாள இஸ்லாமியர், மலையாள இந்து போன்ற மதவாதிகளும்,ஒரு
மலையாள மார்க்ஸிஸ்ட்,காங்கிரஸ்,பி ஜே பி. போன்ற அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும்,தங்களை
முதலில் மலையாளிகள் என்ற மொழி,இன அடயாளமாகவே கொள்கிறார்கள்.

அது மட்டுமல்ல தாழ்த்தப்பட்ட ஈழவரோ,அல்லது நாயர்,மேனன்,நம்பியார் என அனைவரும் மலயாளிகளாகதான் உணர்கிறார்கள். மேலும் கேரளாவச் சேர்ந்த உச்ச நீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகளும் மலையாள மொழியினராகவும், மலையாள இனமாகவும் காட்டிக் கொள்கின்றனர் இதனை முல்லைபெரியாறு பிரச்சினயில் கண்கூடாக கண்டோம்.
இது போன்றே ஆந்திர, கர்நாடக மாநிலங்களிலும் காண்கிறோம்.சாதிகளற்ற தமிழ்ச் சமூகமாக தமிழால் ஒன்றிணைக்க தமிழர்களால் தான் முடியும் .ஒரு காலத்தில் சாதிகளற்ற சமூகமாகவே தமிழ்ச்சமூகம் இருந்தது. வடுக வந்தேறிகளின் அரசுகளால் தான் சாதி இறுக்கம் அடைந்த்தது. கிருட்டிண தேவராயர் தான் இஸ்லாமியர்களிடம் இருந்து இந்து சனாதனத்தை காப்பதாகக் கூறி தமிழ்நாட்டை அடிமைப்படுத்தினார்.அவரின் வாரிசுகள் தான் திராவிடம் என்றபோர்வையில் சனாதன தர்மத்தின் பிடியில் இருந்து தமிழர்களைக் காக்க போராடுவதாக நடித்து மீண்டும் கிருட்டிண தேவராயரின் ஆட்சியை , விசால ஆந்திராவை (அவர்கள் சொல்லும் விசால ஆந்திரம் என்பது பாஞ்சாலங்குறிச்சி வரை)ஆண்டுகொண்டிருக்கிறார்கள்.நாம் தமிழால் ஒன்று பட்டால் அவர்களின் ஆட்சி தகர்ந்துவிடும். ஆகவேதான் திராவிடர்கள் ஓலமிடுகின்றனர்.ஓப்பாரி வைக்கின்றனர்,அரற்றுகின்றனர். அதைப்பற்றி நாம் கவலைகொள்ளாமல் நம் தமிழால் ஒன்றுபடுவோம்.
-ஏகாந்தன்நம்பி ஏகாந்தன்
No comments:
Post a Comment