Sunday, September 29, 2013

திராவிடம் தமிழர்கள் மத்தியில் ஏற்படுத்திய மாற்றங்கள் என்ன? அனைவருக்கும் பகுத்தறிவை நாத்திக திராவிடம் வளர்த்திருக்கிறதா?

1236123_632814103415817_44611142_n 1236439_521059347974041_1750359631_n


அன்பான உறவுகளே உங்களிடம் ஒரு கேள்வி ,

1-திராவிடம் தமிழர்கள் மத்தியில் ஏற்படுத்திய மாற்றங்கள் என்ன,

2-அனைவருக்கும் பகுத்தறிவை நாத்திக திராவிடம் வளர்த்திருக்கிறதா?

3-நம் உயிருக்கும் மேலான தமிழ்மொழியை திராவிடம் உண்மையாகவே வளர்த்திருக்கிராதா?

4-ஆன்மீகத்தின் மூலமாக வளர்க்கபட்ட தமிழ்மொழிக்கு , திராவிட நாத்திகம் தமிழ்மொழிக்காக எத்தனை வளர்ச்சியை எற்படுத்திக்கொடுத்திருக்கிறது?

5-அயல்நாட்டில் இருந்து வந்த ஒரு பாதிரியார் (கன்ஸ்டிந்டாய்-தொ பெஸ்கி) தன்பெயரை வீரமாமுனிவர் என்று பெயரை மாற்றி தமிழுக்காகவே தொண்டாற்றி , தான் இறக்கும் தருவாயில் நான் ஒரு தமிழர் என்று எழுதி என் கல்லறையில் வையுங்கள் என்றார்.
திராவிடத்தை போதித்த பெரியார் தமிழை காட்டுமிராண்டி மொழி என்றாரே ஏன்?

6-சாதி பிரிவினையை முழுவதுமாக திராவிடம் ஒழித்துவிட்டதா?
கால் நூற்றாண்டுக்கு மேலாக ஆட்சி அதிகாரத்தை வைத்துள்ள திராவிடம் சாதியை ஒழிப்பதற்க்கு என்ன அரசியல் தீர்மானத்தை சட்டமன்றதில் இயற்றி இருக்கிறது.

7-தமிழீழத்தை வென்று 10தே ஆண்டுகளில் பிரபாகரன் சாதியை ஒழித்த நடவடிக்கைகளை திராவிட நாத்திகர்கள் அறியாமல் போனது ஏன்?

திராவிட தமிழர்கள் குடித்து நாசமாக போனதிர்க்கு திராவிட அரசியல் காரணமா இல்லையா?

இப்படி எண்ணற்ற கேள்ளிவிகள் இனி வந்துகொண்டே இருக்கும் ,
தெரிந்தவர்கள் ,சொல்லுங்கையா?


-ஏகாந்தன்நம்பி ஏகாந்தன்

No comments:

Post a Comment