
உரலில் இடித்ததை
வழித்து எடுப்பினும்
துகள்கள் அழியாது
கோரை புற்களை
வெட்டி வீழ்த்தினும்
வேர்கள் அழியாது
விடியலை தேடி
வீழ்ந்த வீரரின்
புகழ் என்றும் அழியாது
தமிழ் புலிப்படை வீரம்
தரணியில் என்றும்
தரம் தாழ்ந்து போகாது
மனச்சோர்வு கொண்டால்
எம் இனம் என்றும்
வாழவே முடியாது
மாண்ட மறவரின்
கொள்கையை
மனதிலே கொண்டால்
மனமே தளராது
வெல்வோம் நாமென
வீறு கொண்டெழுந்தால்
வீண் காலம் போகாது
வீணர்கள் எம்மை
வீழ்த்த நினைப்பினும்
விடுதலை தோற்காது
..பா .சங்கிலியன் ...
No comments:
Post a Comment