
ஆழ்துளை கிணறு தோண்டுவோம்
பாதுகாப்பின்றி திறந்தே வைப்போம்
சிறார்களிடம் ஆபத்தை விளக்கமாட்டோம்
கவனக்குறைவுடன் அலட்சியம் செய்வோம்
மரணத்தை விலைக்கொடுத்து வாங்குவோம்
எத்தனை சிறார்களை காவு கொடுத்தாலும்
ஏன் இன்னும் மக்களிடம் விழிப்புணர்வு இல்லை
பாதுக்காப்புடன் இருப்பதே அனைவரின் கடமை
பாதுகாப்பை உறுதிசெய்வதே நம் அறிவுடைமை
ஆழ்துழாய் கிணறு அமைத்த பிறகு அதை சரிவர பாதுக்காப்புடன் மூடாமல் இருக்க வேண்டாம். அந்த இடத்தில் உள்ள குழந்தைகளிடம் ஆழ்துழாய் கிணறு குறித்த ஆபத்தை நன்கு அறிவுறுத்த வேண்டும். அந்த இடத்தில் குழந்தைகளை விளையாட அனுமதிக்க கூடாது. கூடுமானவரை ஆழ்துழாய் கிணறு மூடும் வரை ஒருவர் அந்த இடத்தில் பாதுகாப்பு கண்காணிப்புடன் இருப்பது சிறப்பு. உயிர் விலைமதிப்பற்றது.
-ஆயிசா பாரூக்
No comments:
Post a Comment