Sunday, September 29, 2013
மாணவர்கள் போர் வெல்லட்டும் - மக்களை புரட்ச்சி மலரட்டும் - தனி ஈழ தாகம் என்றும் தணியாது, எங்கள் தாயகம் யார்க்கும் பணியாது
பி.சி.சி.ஐ கிரிக்கெட் வாரிய கூட்டத்தை தடையை மீறி முற்றுகையிட்ட ஐந்து மாணவர்கள் செம்பியன் , ஜோ பிரிட்டோ, தமிழ், தமிழன்பு ரத்தினவேல் ஆகியோர்களை மட்டும் சிறையில் அடைக்க உள்ளதாக செய்திகள் வந்துள்ளது.
தேனாம்பேட்டை காவல்துறை துணை ஆணையர் திரு செந்தில் குமார் அவர்களுடன் தொடர்பு கொண்டு பேசினேன் . இனத்திற்காக மாணவர்கள் போராட்டம் நடத்தி உள்ளனர் . அவர்களை சிறையில் அடைப்பது நியாயமில்லை . அதனால் அவர்களை சிறையில் அடைக்கும் முடிவை கைவிடுமாறு கோரிக்கை வைத்துள்ளேன். அவரும் சரி பார்க்கலாம். இனி இது போல் நடக்காமல் பார்த்துக் கொள்ளவும் என்று கூறிவிட்டார்.
ஐந்து மாணவர்கள் மட்டும் விடுதியின் உள்ளே பிசிசிஐ கூட்டம் நடக்கும் இடத்திற்கே சென்று விட்டனர் . இதனால் காவல் துறை அதிகாரிகள் வேலை இழக்கும் சூழ்நிலை ஏற்படும் . அதனால் இந்த முடிவை எடுப்பது தவிர வேறு வழி இல்லை என்றார் துணை ஆணையர். எனினும் சில தலைவர்களை பேச சொல்லி உள்ளேன். மாணவர்கள் சிறைக்கு செல்வதை நாம் எப்படியும் தடுப்போம்.
இதற்கிடையில் மாணவர்கள் ஐந்து பேரை மட்டும் சிறையில் அடைப்பதை நாங்கள் அனுமதியோம் , மீதம் உள்ள 26 மாணவர்களையும் சிறையில் அடைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளனர் ஏனைய மாணவர்கள்.
-இளையவேந்தன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment