Monday, September 30, 2013

இன்று நடிகர் திலகம் சிவாஜி கணேசன் (Sivaji Ganesan) ( அக்டோபர் 1, 1927 ) 85வது பிறந்தநாள்.


புகழ் பெற்ற தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். விழுப்புரம்
சின்னையாப்பிள்ளை கணேசன்
என்பது இவரது இயற்பெயர். இவர், பராசக்தி
என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த்
திரையுலகில் அறிமுகமானார்.

நல்ல குரல்வளம், தெளிவான, உணர்ச்சி பூர்வமான தமிழ் உச்சரிப்பு, சிறந்த நடிப்புத் திறன்
ஆகியவை இவரின் சிறப்புகளாகும். நடிகர்
திலகம், நடிப்புச் சக்கரவர்த்தி
என்று பெரும்பாலான மக்களால்
அழைக்கப்பட்டார்.

இவர் நடித்த மனோகரா, வீரபாண்டிய
கட்டபொம்மன் போன்ற திரைப்படங்கள்
வசனத்திற்காகப் பெயர் பெற்றவை. இராஜராஜ
சோழன் , கப்பலோட்டிய தமிழன் போன்ற
வீரர்களினதும் தேசத் தலைவர்களினதும்
பாத்திரங்களை ஏற்றுத் திறம்படச் செய்தார்.
பாசமலர் , வசந்த மாளிகை போன்ற
திரைப்படங்கள் மற்றும் பல பக்திப் படங்கள்
இவரது உணர்ச்சிப்பூர்வமான நடிப்புக்காகப்
பேசப்பட்டவை.

1960 – ஆப்பிரிக்க-ஆசியத் திரைப்பட விழாவில்
சிறந்த நடிகருக்கான விருது கிடைத்தது.
1966 – பத்ம ஸ்ரீ விருது
1984 – பத்ம பூஷன் விருது
1995 – செவாலியே விருது (Chevalier)
1997 – தாதா சாகேப் பால்கே விருது
1962 – சிறப்பு விருந்தினராக அமெரிக்க நாட்டில்
சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது,
நயாகரா மாநகரின் ‘ஒரு நாள் நகரத் தந்தை’ என கவுரவிக்கப்பட்டார்.


-வீரம் வெளஞ்ச மதுரை

No comments:

Post a Comment