
பீகாரில் கால்நடை தீவனங்கள் வாங்கியதில் போலியாக பில்கள் தயிர்க்கபட்டு ரூ.37.70 கோடி மோசடியாக பெறப்பட்டது. இந்த ஊழல் வழக்கு கடந்த 17 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.
இன்று ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் உள்பட 45 பேரும் குற்றவாளிகள் என்று சிபிஐ சிறப்பு கோர்ட் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டதால், லாலு, ஜகன்னாத் மிஸ்ரா உள்ளிட்டோர் உடனடியாக சிறையில் அடைக்கப்பட்டனர். 3 முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என் எதிர்பார்க்கபடுகிறது.
இது போன்ற ஊழல் வாதிகளை அவர்களது எம்.பி பதவிகளில் இருந்து நீக்க சட்டம் வந்துள்ளதை தொடர்ந்து இவரது எம்.பி பதவி பறிபோகும்.
கூடியவிரைவில் தமிழகத்தின் ஊழவாதிகளும் கைது செய்யபடுவார்கள் என்று நம்புவோம்!!
ஊழலற்ற இந்திய ஒன்றியம் உருவாக்க இது ஒரு தொடக்கமாக இருக்கட்டும்!
-இதுதான் சனநாயகமா
No comments:
Post a Comment