Friday, September 27, 2013
இனியாவது விழிக்குமா தூங்குவது போல் நடிக்கும் தமிழக அரசு ?
அவர்களின் நியாயமான கோரிக்கையை கனிவுடன் அணுகி இருக்க வேண்டிய தமிழக அரசு, கண்டுகொள்ளாமல் பார்வையற்றவர்கள்தானே என்று அலட்சியப்படுத்தி, காவல்துறையைக் கொண்டு கடுஞ்சொல்லால் காயப்படுத்தியும், தாக்கியும் குண்டுகட்டாகத் தூக்கி அப்புறப்படுத்தி, திக்குத் தெரியாத காட்டில் விடுவதென்று முடிவெடுத்து, போராடும் பார்வையற்றவர்களை முதலமைச்சரைச் சந்திக்க வாருங்கள் என்று காவல்துறை வாகனத்தில் ஏற்றி, சென்னை புறநகர் பகுதிகளில் இறக்கிவிட்ட செயல் மிகவும் கண்டத்திற்கு உரியதாகும்.
தொடர்ந்து அலைக்கழிக்கப்பட்டு அலட்சிப்படுத்தி அவமதித்ததால் இனி நிரந்தரத் தீர்வை தமிழக முதலமைச்சரால்தான் தர முடியும் என்ற நம்பிக்கையோடு தொடர்ந்து தங்களின் உறுதியான போராட்டத்தின் மூலமாக நிருபித்துக்கொண்டு வருகிறார்கள்.
நாகரீக சமூகத்தில் மாற்றுத் திறனாளிகள் நடத்தப்படும் விதம் கவலை அளிப்பதாக உள்ளது.
உடலில் ஏற்படும் ஊனங்களை குறைபாடுகளை மனிதனைத் தவிர, ஏனைய உயிரினங்கள் பொருட்படுத்துவது இல்லை. எனவேதான் இவர்களைக் காக்க வேண்டிய பொறுப்பை உலகப் பொதுமன்றம் சட்டமாக்கி, Make the Right Real அவர்களின் உரிமைகளை உண்மையாக்கிட பணித்தது.
கடந்த நான்கு ஆண்டு காலமாக தங்களின் கோரிக்கையை சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சருக்கும், அரசு செயலாளருக்கு தெரிவித்தும் அவர்கள் எதிர்பார்த்த பயன் இல்லாததால், கடந்த ஆகÞடு 8 ஆம் தேதி அடையாள உண்ணாநிலை அறப்போராட்டம் நடத்தினார்கள். அப்போதாவது அரசு விழித்துக்கொண்டு அவர்களின் குறைகளை கனிவுடன் கேட்டு கலைந்திருக்க வேண்டும்.
ஆனால், போராடுபவர்களை காவல்துறையைக் கொண்டு அப்புறப்படுத்துவதால், பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்டுவிடாது.
-இளையவேந்தன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment