Sunday, September 29, 2013

ஆரியமும் திராவிடமும் கூடுக்கலவானிகள் - இவை இரண்டும் முன்னிலைப்படுத்தும் மிகப்பெரிய தீய சக்தி பா.ச.க வும் இந்துத்வா அமைப்புகளும்



தமிழர் பிரச்சனை குறித்து என்னவென்றே தெரியாத பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் !

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜகவின் தேசியத்தலைவர் ராஜ்நாத் சிங் அனைவருக்கும் எதிர்பாராத ஒரு அதிர்ச்சியை அளித்தார்..

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளவேண்டுமா இல்லையா — பாஜகவின் நிலை என்ன என்று ஒரு செய்தியாளர் அவரிடம் கேள்வி எழுப்பினார் ..காமன் வெல்த் மாநாடா ? எங்கே நியூயார்க்கில் நடைபெறப் போகிறதே அந்த மாநாடா என தனது அறியாமையை அநியாயத்திற்கு அப்போது அவர் வெளிப்படுத்தினார்..அருகில் இருந்து தமிழக பாஜகவின் டெல்லி பொறுப்பாளர் முரளிதர் ராவ் பதறிப்போய் உடனடியாக தலையிட்டு இல்லையில்லை என அவசர அவசரமாக மறுத்து இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாடு பற்றியும் அதற்கு ஏற்பட்டுளள் எதிர்ப்பு பற்றியும் அவருக்கு விளக்கினார்.. அப்போதுகூட ராஜ்நாத் சிங்கிங்கிற்கு விவரம் புரியவில்லை..எதையோ பேசி ஏதேதோ சொல்லி சமாளித்தார்.

தமிழர்கள் கடந்த 8 மாதங்களாக காமன்வெல்த் மாநாடு இலங்கையில் நடக்கக் கூடாது என கடுமையான போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கான பெரும் பரப்புரையில் மாணவர்கள் திருச்சியில் இருந்து சென்னை வரை உயிர் கொடுத்து மிதிவண்டி பேரணி நடத்தி உள்ளனர். தமிழக முதல்வர் உட்பட அனைத்து கட்சி தலைவர்களும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளனர். தமிழகமே இது குறித்து கொந்தளித்து உள்ளது. ஆனால் இந்த பாஜகவின் தலைவர் காமன்வெல்த் மாநாட்டை குறித்து எதுவுமே அறிந்திருக்கவில்லை என்பது தமிழர் பிரச்சனைகள் குறித்து தேசிய கட்சிகள் எந்த அளவிற்கு அறிந்து வைத்துள்ளது என்பதை காட்டுகிறது . இப்படித் தான் ஈழத்தில் போர் நடந்த போதும் இந்த பாஜக உட்பட தேசிய கட்சிகள் அலட்சியம் காட்டியது . அந்த அலட்சிய போக்கினால் முடிவில் 1.5 லட்சம் உயிர்கள் பறிபோனது.

அதே போல 600 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட போதும் இந்திய தேசிய கட்சிகள் அதை ஒரு பொருட்டாகவே கருதவில்லை. இன்னும் இலங்கையுடன் நட்பு பாராட்டி வருகிறது இந்திய அரசு. ஆனால் பாகிஸ்தான் இந்திய ராணுவத்தினரை தாக்கினால் மட்டும் பாஜக உடனே பாராளுமன்றத்தையே முடக்கிவிடும். தமிழர்கள் என்று வந்தால் அது பிரச்சனையாகவே அவர்களுக்கு தெரியாது. இந்திய நாடு தமிழர்களை பாதுகாக்கும் நாடாக என்றுமே இருந்ததில்லை, இனி இருக்கப் போவதில்லை என்பதை ராஜ்நாத் போன்ற தேசிய கட்சிகளின் தலைவர்கள் அவ்வப்போது நமக்கு உணர்த்திக் கொண்டே இருக்கின்றனர். இனியாவது தமிழர்கள் விழித்துக் கொண்டு தங்களுக்கான அதிகாரம் கொண்ட மாநில சுயாட்சி கோரிக்கையை வலியுறுத்த வேண்டும் . பாஜக காங்கிரஸ் போன்ற இந்திய தேசிய கட்சிகளை புறக்கணிக்க வேண்டும் .

-இளையவேந்தன்

No comments:

Post a Comment