Friday, September 27, 2013
இந்திய ஒன்றியத்தில் நடைபெறும் பாலியல் வன்முறைகள்:
பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிரான பாலியல் பலாத்காரங்கள் தொடர்பான அதிகரித்து கொண்டே போகிறது. கடந்த நூற்றாண்டில் மட்டும் பாலியல் தொழிலுக்காகக் கடத்தப்பட்ட இந்திய ஒன்றியப் பெண்கள் சுமார் 50 லட்சம் பேர். இவர்களில் 40 சதவீதம் பேர் பருவம் அடையாதவர்கள்.
கடந்த 30 ஆண்டுகளில் இந்திய ஒன்றியத்தில் கருவிலேயே கொல்லப்பட்ட பெண் சிசுக்களின் எண்ணிக்கை 1 கோடியே 20 லட்சம். ராய்ட்டர் செய்தி நிறுவனம் பல நாடுகளில் ஆய்வு செய்து சர்வதேச புரிதல்களின் அடிப்படையில் பெண்கள் வாழத் தகுதியற்ற ஆபத்தான நாடுகளின் பட்டியலை தரவரிசைப்படுத்தி வெளியிட்டுள்ளது. அதில் இந்திய ஒன்றியம் நான்காவது இடத்தில் உள்ளது. ஆப்கானிஸ்தான், காங்கோ, பாகிஸ்தான் முதல் மூன்று இடத்தைப் பிடித்துள்ளன என்று இந்த ஆய்வு கூறுகிறது.
இந்திய ஒன்றியத்தில் ஆண்டுக்கு சுமார் 1.5 லட்சம் முதல் 2 லட்சம் பேர் வரை பாலியயல் தொழிலுக்காக வெளி மாநிலங்களுக்குக் கடத்தப்ப டுகிறார்கள். பெண்களைக் கடத்தும் கும்பல் தங்களிடம் சிக்கும் 10 முதல் 20 வயது வரையிலான பெண்களைத் தரகர்களிடம் லட்சக்கணக்கான ரூபாய்க்கு விற்கிறார்கள். கடத்தப்படும் பெண்களில் 20 சதவீதம் பேர் சிறுநீரகம் உள்ளிட்ட உறுப்புகள் பறிக்கப்படுவதற்காக மாபியா கும்பலிடம் அனுப்படுகிறார்கள்.
இந்திய ஒன்றியத்தில், 2011ம் ஆண்டு பதிவான பாலியல் வன்முறை புகார்கள் 24,206. பெண்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் கொடுமை தொடர்பான புகார்கள் 35,565. அலுவலகங்களில் பாலியல் தொல்லைகள் பற்றிய புகார்கள் 85,750. கணவனால் அல்லது உறவினர்களால் நிகழ்ந்த பாலியல் தொல்லைகள் பற்றிய புகார்கள் 99,135. பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகப் பதிவான புகார்கள் 2,28,650 என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது.
பாலியல் உறவு என்பது உணர்வு சார்ந்த விசயம் என்றாலும் புறச்சூழல்களே அவற்றை வடிவமைக்கின்றன. பாலியல் குற்றங்களைக் குறைப்பதற்கு இந்திய ஒன்றியத்தில் தண்டனைச் சட்டத்தைக் கூடுதலாக்க வேண்டிய அவசியம் இல்லை. இருக்கும் சட்டங்களையும் விதிகளையும் முறையாகப் பயன்படுத்தினாலே போதும். 120 கோடி மக்கள் தொகை கொண்ட இந்திய ஒன்றியத்தில் குற்றங்களைக் கட்டுபடுத்தத் திடமான அரசியல் முடிவு தேவைப்படுகிறது. சனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட, மக்களை நேசிக்கிற, முற்போக்கான அரசாங்கத்தால் மட்டுமே இது சாத்தியம்;
மேலே கூறிய இறுதி வாக்கியத்தை மறந்துவிடுங்கள், இதல்லாம் இந்திய ஒன்றியத்தில் நடக்குற காரியமா?
-இந்தியன் அல்ல தமிழன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment