Monday, September 30, 2013
நம்மால் முடிந்த அணைத்து நிலைகளிலும், இடங்களிலும், அணைத்து வழிகளிலும் கருத்துப்பரப்புரை செய்தாலே பொதுக்கூட்டங்களின் தேவையில்லாமல் போய்விடும்
நேற்று நடத்த தமிழர் விழாவில் முகநூல் நண்பர் ஆசைத்தம்பி அவர்களை சந்தித்தேன். அவர் பயன்படுத்தும் தலைக்கவசம் நம்மை வெகுவாக கவர்ந்தது. அவர் இருசக்கிர வண்டியில் பயணிக்கும் போது மக்களுக்கு அவரால் முடிந்த இத்தகைய பரப்புரை செய்து வருகிறார். இலவசத்தால் இந்த அரசுகள் தமிழர்களை தொடர்ந்து ஏமாற்றி வருகிறது என்பதை அழுத்தமாக பதிவு செய்துள்ளார் ஆசைத்தம்பி. கூடவே தமிழர்களின் நியாயமான கோரிக்கையான தமிழ்நாடு தமிழருக்கே என்ற வாசகத்தையும் தலைக் கவசத்தில் எழுதி உள்ளார். வாகனத்தில் வாழ்க தமிழ் என்றும் எழுதி உள்ளார்.
இது போன்ற சிறு சிறு பரப்புரைகளும் தமிழுக்கும் தமிழர் நாட்டிற்கும் வலு சேர்க்கும் என்பதில் ஐயமில்லை . ஆசைத்தம்பிக்கு நம் வாழ்த்துகள்.
-இளையவேந்தன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment