Monday, September 30, 2013
விடுதலை உணர்ச்சியின் வடிவம் சே விற்கு வீர வணக்கம்! அமைச்சர் பதவியை இவனோ கணுக்கால் மயிருக்கு சமமாய் நினைத்தான்! அடிமை நிலைமை இருக்கும் வரையில் சே வும் உலகில் இருப்பான்...
விடுதலை
உணர்ச்சியின்
மனித உருவம்...
விடுதலை
வேள்வியில்
தேசிய எல்லைகளை
உருக்கி அழித்த
புரட்சியின் வடிவம்...
காற்று போலே
விரும்பிய
திசைகளில்
கால்களை நகர்த்திய
போராளி...
அடிமை செய்ய
நினைப்பவர்
எவர்க்கும்
இன்றும் இவனே
பகையாளி!
எத்தனை காலம்
கடந்தும்
லத்தீன் அமெரிக்கா
முழங்கும்....
சே என்ற
பெயர் போதும்
ஆதிக்க நாடுகள்
நடுங்கும்!
கொரில்லா என்னும்
போர்முறையை
முறையாய்
இவன்தான்
கொடுத்தான்...
அடிமை விலங்குகள்
அறுத்திடவே
துவக்கை
கையில் எடுத்தான்!
காங்கோ கியூபா
பொலிவியா
எங்கும் புரட்சியை
விதைத்தான்...
அமைச்சர் பதவியை
இவனோ
கணுக்கால்
மயிருக்கு சமமாய்
நினைத்தான்!
அடிமை நிலைமை
இருக்கும் வரையில்
சே வும்
உலகில்
இருப்பான்...
போரிட விழையும்
வீரர்கள் நெஞ்சில்
உயிரின்
நாடியாய் துடிப்பான்!!!
-முகிலினி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment