Friday, September 27, 2013

தியாகி திலீபனுக்கு சேலம் சட்ட கல்லூரி மாணவர்கள் அஞ்சலி


தமிழீழ மக்களின் விடிவுக்கான கோரிக்கைகளோடு உண்ணாவிரதம் இருந்த திலீபன் அவர்கள் 1987 செப்டம்பரில் வீர மரணம் அடைந்தார்.
அவரின் மறைவு உலக தமிழர்களிடம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. அதன் பின் அவர் நினைவை போற்ற தொடங்கினர் தமிழர்கள்.

அவரின் நினைவு தினத்தை முன்னிட்டு சேலம் சட்ட கல்லூரி மாணவர்கள் விடுதிக்கு எதிரில் மாணவர்கள் மற்றும் உணர்வாளர்கள் திலீபன் படம் வைத்து மெழுகுவர்த்தி ஏந்தியும், மலர்கள் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.

இதில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தமிழின உணர்வாளர்கள் கலந்துகொண்டனர்.

-நாதன்

No comments:

Post a Comment