Saturday, September 28, 2013
துரோகத்தை இனம்கண்டு சிரம்கொண்டு வா தமிழா?
பெரியார் : ஐயா! தமிழ்தான் உலகின் முதன் மொழி, மூத்த மொழி, தனி மொழி என்று சொல்லிக்கொள்கிறார்களே நாம் எப்படி, இங்க பொழப்பு நடத்துறது?
ஆரியன் : அதை விடுங்கானம்! அவங்க முட்டாப் பசங்க! அதன் அருமை, பெருமையை படிச்சாதான தெரியும், படிக்காமலே செய்துட்டா!
பெரியார் : அதெப்படி முடியும் அவங்க தாய்மொழியை மறப்பாங்களா!
ஆரியன் : யோவ் அசடு! நான் இவ்வளவு காலம் அதை நான் செய்யலையா! இனி நீ பாத்துக்க. பெருமையை கேவலப்படுத்தி பேசு! தொடர்ந்து பொய் பேசு நாளைக்கு அது உன்மையாகிவிடும். ஏற்கெனவே தமிழை நான் நீச பாசைன்னு சொல்றேன், நீ உனக்கு பிடிச்சாப்ல ஏதாவது கெட்ட கெட்ட வார்த்தையா சொல்லு. அவங்க மேல உள்ள தன்னம்பிக்கை போச்சுன்னா, பயம் வந்துடும். அப்புறம் தமிழன் செத்த பிணம்தானே. தன்னை தாழ்தவன் என்று நம்புகிறவன் ஆட்சி அதிகாரத்தை கோரமாட்டான் இதான் நடக்கும்.
பெரியார் : பேஷ் பேஷ், நான் வந்து தமிழை காட்டுமிரான்டி மொழி-ன்னு சொல்றேன். அப்படியே திரும்ப திரும்ப சொல்லி மூளயை மழுங்கடிக்கிறேன். ஆங்கிலம்தான் உசந்த்துன்னு சொல்லி எல்லோரையும் ஆங்கிலம் படிடான்னு சொல்றேன். அப்பதானே அவங்கள வெச்சு வேலைவாங்க வசதியாய் இருக்கும். எப்பிடி!
ஆரியன் : ரொம்ப நன்னா இருக்கு. இப்படியே செய், என்னையே மிஞ்சிடுவே போலிருக்கே
பெரியார் : சாதி பிரச்சனையில் அப்பாவி மக்கள் அடிச்சிக்கிட்டு சாகிறாங்களே சாமி பிரச்சனை வராதா
ஆரியன் : உணர்ச்சியில சண்ட போட்டுக்குவானுக அறிவுகெட்டவனுக. பிரிஞ்சி இருந்தா நமக்கு தானே லாபம். உன் மக்களா, என் மக்களாடா அடிச்சி சாகிராங்க, நீ ஏன்டா கவலைபடற. தமிழன்தானே சாகிறான். நம்ம ஆளுவதற்கு எவன் செத்தாலும் கண்டும் காணாம இருந்துடனும் அவ்வளவுதான்.
பெரியார் : அதெல்லாம் நா கரெக்டா பாத்துகுவேன் சாமி, இது சத்தியம். சரி சாமி இவ்வளவு நல்லது எங்களுக்கு பண்ணீங்க, உங்களுக்கு ஆட்சியில எதுவும் வேண்டாமா. கோயில் வருமானமே போதுமா. நீங்களும் கொள்ளையடிக்கிறதுல பங்கு போட்டுகிட்டாதான் என் மனசு ஆறும் சாமி.
ஆரியன் : அட டா, என் நெஞ்சை தொட்டுடடா தம்பி, ஒன்னு செய், கட்சியின் ஆனிவேர் உங்கிட்ட இருக்கிறாப்புல பாத்துக்க. அரசியல் கட்சியை தனியா வைச்சுக்க, அப்பதான் நான் வந்து அங்கு அமர வசதியாய் இருக்கும், பிறகு கொஞ்ச காலம் உனக்கு 5 வருஷம், எனக்கு 5 வருஷம்னு மாத்தி மாத்தி ஆண்டுக்கலாம், நான் ஆட்சியில் இருந்தாலும் நம்கொள்கையில் விழிப்போடு இருப்போம். இப்படியே முடிந்தவரை கொள்ளையடிப்போம், முடியாட்டி அப்பிடியே (தமிழகத்தை) மூட்டை கட்டிடுவோம். பின் இந்த தமிழர்களை பார்த்து டேய் வந்தேறிகளே என்று விரட்டுவோம். ஆட்சியும் அதிகாரமும் இருக்கும் வரை நம்மள யாரும் அசைக்க முடியாது பாத்துக்கோ, நம்மகிட்ட இவனுக அடிமையா இருக்கத்தான் வேனும், துடிப்பானவன்கள, நம்பாதவன்கல தமிழ்த்தீவிரவாதி என்று முத்திரை குத்தி ஒரேடியா தூக்கிடுவோம். எப்பிடி.
பெரியார் : சாமியே உங்கள் கையில், நீங்கள் எந்த கதை விட்டாலும் அது வேதம்னு நம்புறாங்க. ஆட்சி என் கையில், பின் இந்த மாஸ்டர் பிளான் தோல்வி அடையாது. தமிழை காட்டுமிராண்டி மொழி என்று சொல்லுவேன், பள்ளியிலும் கல்வியிலும் அதை படிக்க விருப்பம் இல்லாமல் செய்வேன். ஆங்கிலம்தான் தேவை என்று புகழந்து படிப்படியாக இவர்களின் மூலையை மழுங்கடிப்பேன். சிந்திக்கும் திறனை இழந்து வரும் தலைமுறை இயந்திரமாக மாற்றிப்போகும். உலகின் மூத்த குடிமக்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் (தமிழர்கள்) இதோடு ஒழிந்தார்கள். ஹா ஹா ஹா
-ஏகாந்தன்நம்பி ஏகாந்தன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment