Friday, September 20, 2013

நமக்கு தேவை விருப்பங்கள் மட்டுமல்ல, பகிர்தலே மக்களை சென்றடையும்!!!!!! தங்களால் முடிந்த குறைந்தப்பட்ச சேவை தமிழுக்கு, தமிழ் மக்களின் விழிப்புணர்வுக்கும்... விருப்பம் பொத்தானும், பகிர்தல் பொத்தானும் பல மையில்கள் தூரத்திலா இருக்கு?????... விருப்பத்தை வைத்து நாமென்ன செய்வது??? பகிர்தல் தான் தேவை!!!!!!!!!!!!!!!!!அதுவே பெருமளவில் இணையதள தமிழ் தேசிய போராளிகளை சென்றடையும்???

படம்

உங்கள் கருத்துக்கள் மக்களை சென்றடய வேண்டாம் என்று நினைப்பவர்கள் மூச்சுபுத்ததகத்தில் (FACEBOOK) விருப்பங்களை தெரிவிக்கலாம்.

உண்மையிலேயே தமிழர் தேசம் அமைய வேண்டும் என்ற என்னமுடயவர்களும், நமது கருத்துக்கள் அணைத்து தமிழர்களையும் சென்றடைய வேண்டும் என்ற எண்ணமும் உடையவர்கள் உங்களுக்கு பிடித்த கருத்துக்களை பகிருங்கள்.

நாம் அடிமை இனத்தை சார்தந்த அனாதைகளாக்கப் பட்டோம் ஆரிய திராவிட கூட்டுக் கலவானிகளாலும் தமிழின துரோகிகளாலும்;

நமக்கென்று ஒரு வலிமையான தொழில்நுட்பத்தை இல்லாதவர்கள். அப்படி இருக்க இணையத்தளத்தில் நாம் ஏற்ப்படுத்தும் சிந்தனைகளும் பதிவுகளும் பெரிய அளவு தாக்கத்தை ஏற்ப்படுத்தாது என்பதை நாம் உணர வேண்டும்.

தமிழகத்தில் சரி பாதி பேர் ஏழைகள் என்று உலுக்கியெடுக்கும் உலக வங்கி ஆய்வு கூறுகிறது. அதில் படிக்காதவர்கள், பாமர மக்கள், எழுதப் படிக்க தெரியாதவர்கள், கணினி பயன்படுத்த தெரியாத மக்கள் இருக்கின்றனர். இவர்களை சொறன்ட்டியும் இங்குள்ள அரசியல் கட்சிகள் பிழைப்பு நடத்துகின்றனர். நமது விழிப்புணர்வுவூடும் கருத்துக்கள் இவர்களைத் தான் கண்டிப்பாக சென்றடைய வேண்டும். ஆனால் அதற்க்கான ஒரு வலிமையான ஊடகம் நம்மிடத்தில் இல்லை.


முகநூலில் தமிழ் தேசியத்தை நோக்கி போராடும் அனைவருக்கும் ஒரு உயிர்ந்த கொள்கையும், நோக்கமும் இருக்கிறது; இங்கு தமிழர்களாகவே இருப்பினும், பண வலிமை படைத்த தமிழ் மொதலாளிகளுக்கு தமிழ் தேசிய நோக்கமில்லை. நோக்கமிருக்கும் தமிழ் தேசியவாதிகளிடம் பணமில்லை.

நோக்கமிருக்கும் தமிழ் தேசியவாதிகளுக்கு எனது முப்பாட்டன் வள்ளுவன் கூறுவது
குறள் 759:
செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
எஃகதனிற் கூரிய தில்.


மு.வ உரை:
ஒருவன் பொருளை ஈட்டவேண்டும், அவனுடைய பகைவரின் செருக்கைக் கெடுக்க வல்ல வாள் அதைவிடக் கூர்மையானது வேறு இல்லை.

Translation:
Make money! Foeman's insolence o'ergrown
To lop away no keener steel is known.

Explanation:
Accumulate wealth; it will destroy the arrogance of (your) foes; there is no weapon sharper than it.

தமிழ் தேசம் பிறக்க வேண்டுமென்ற நோக்கமுடையவர்கள் பொருளை ஈட்டுங்கள், தமிழில் படித்தவர்களுக்கு வேலையளியுங்கள்; தமிழ், தமிழர் தேசிய விடுதலையின் மொட்டு மலரத் தொடங்கும். 

நமக்கு தேவை விருப்பங்கள் மட்டுமல்ல, பகிர்தலே மக்களை சென்றடையும்!!!!!!

தங்களால் முடிந்த குறைந்தப்பட்ச சேவை தமிழுக்கு, தமிழ் மக்களின் விழிப்புணர்வுக்கும்...  

விருப்பம் பொத்தானும், பகிர்தல்  பொத்தானும் பல மையில்கள் தூரத்திலா இருக்கு?????...

விருப்பத்தை வைத்து நாமென்ன செய்வது???

பகிர்தல் தான் தேவை!!!!!!!!!!!!!!!!!அதுவே பெருமளவில் இணையதள தமிழ் தேசிய போராளிகளை சென்றடையும்???

நமது மாற்றம், நாம் ஏற்ப்படுத்த நினைக்கும் விடியல் அனைத்துமே நேரடியாக களத்தில் செயல்படும் போதே ஏற்ப்படும்.

தமிழகத்தில் கணினி பயன்படுத்தும் மக்கள் ௨௦ சதவீகத்திற்க்கும் குறைவாகவே உள்ளனர். அப்படி இருக்க வீணாக மூஞ்சி புத்ததகத்தில் விருப்பத்தை மட்டும் தெரியப்படுத்தி செல்வதினால் என்ன பயன்????

அந்த விருப்பங்களை வைத்து நான் என்ன செய்ய போகிரேன்? நீங்கள் தான் என்ன செய்ய போகிறீர்கள்?

முடிந்தால் பகிறுங்கள், இல்லையேல் விட்டுவிடுங்கள்; விருப்பங்கள் நமது நோக்கமல்ல; அவை நமக்கு தேவையும் அல்ல.

நான் கூறுவதை சற்று சிந்தித்து பாருங்கள்!!! இல்லை விருப்பம் போடுவது எனது பிறப்புரிமை என்று நீங்கள் நினைத்தாள் விருப்பத்துடன் சேர்த்து பகிரவும் செய்யுங்கள். அதுவே தமிழர் தேசிய இனவிடுதலைக்கு வித்திடும்.

-புவிநன்





 

"இந்தி"(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு..
செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்

www.senkettru.wordpress.com

thamilarulaham.org

http://senkettru.blogspot.in/

http://iamnotaliberator.blogspot.in/

தமிழர் தேசியம் சார்பான காணொளிப்பதிவு பார்க்க…

https://www.youtube.com/my_videos?o=U

No comments:

Post a Comment