ஏன் தமிழ் மொழியை ஆட்சி மொழியாக்க வேண்டும் ? இந்தியாவின் ஆட்சி மொழியான இந்தி மொழி கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவில் உள்ள எல்லா மொழிகளையும் அழித்து வருகிறது என்று மொழியியல் ஆய்வாளர்கள் கண்டறிந்து கூறியுள்ளனர்
தருண் கோரியது போல தமிழ் மொழிக்கு ஆட்சி மொழி அதிகாரம் வந்து விட்டால் , தமிழ் மொழியை அழிவில் இருந்து காப்பாற்றி விடலாம். இங்குள்ள தமிழர்கள் பிழைப்புக்காக இந்தியை கற்க வேண்டிய கட்டாயம் ஏற்படாது. தமிழ் மொழியிலேயே அனைத்து நடுவண் அரசு அலுவல்களையும் பார்க்கலாம்.
இந்தி"(தீ)ய ஒன்றியத்தின் நாணயங்கள், அஞ்சல் தலைகள் , கடவுச் சீட்டுகள் , அடையாள அட்டைகள் அனைத்திலும் தமிழ் இடம் பெரும். விமான சேவை துறை, தொடர்வண்டித் துறை, வங்கித் துறை, வருமானவரித் துறை , ராணுவத் துறை, கடவுசீட்டு வழங்கும் துறை , அஞ்சல் துறை, கப்பல் துறை, வெளியுறவு துறை என பல நடுவண் அரசுத் துறைகளிலும் இந்தி மொழியே ஆட்சி மற்றும் அலுவல் மொழியாக உள்ளது . இங்கெல்லாம் தமிழ் மொழி இல்லவே இல்லை.
இந்தி(தீ) அல்லாத மாநிலங்களில் இந்த துறைகளில் வேலை செய்யும் ஊழியர்களிடம் இந்தியை கொண்டு சேர்க்க நடுவண் அரசு பல ஆயிரம் கோடி ரூபாய்களை செலவு செய்கிறது . அதற்காக ஒவ்வொரு அலுவலகங்களிலும் இந்தி வளர்ச்சித் துறை அமைத்து அதில் உயர் அதிகாரி , துணை அதிகாரி, கீழ் அதிகாரி , மேல் அதிகாரி என பல அதிகாரிகளை நியமித்து இந்தியை திணித்து வருகிறது.
அந்த நிறுவன ஊழியர்களுக்கு மக்கள் வரிப்பணத்தில் இந்தி வகுப்பெடுக்கிறது இந்திய அரசு. இந்தியில் பெயர் பலகைகள், சின்னங்கள் ஆங்காங்கே நிறுவி இந்தி மொழியை பரப்பி வருகிறது. எல்லா மொழிகளையும் சமமாக வளர்க்க வேண்டிய இந்திய அரசு இந்தியை மட்டும் சிறப்பாக வளர்கிறது .
இதனால் மற்ற மொழி பேசும் மக்கள் எல்லாம் தங்களுடைய அடையாளத்தை இழந்து வருகின்றனர். இந்தியாவை தாண்டி வெளிநாடுகளுக்கு சென்றாலும் , இந்தியர் அனைவருக்கும் தாய் மொழி இந்தி தான் என தவறாக வெளிநாட்டினர் நினைக்கின்றனர். அதற்கு காரணம் இந்தியாவின் ஆட்சி மொழியாக இந்தி மட்டும் இருப்பதால் தான்.
இதனால் 5000 ஆண்டுகள் வரலாறு கொண்ட தமிழினத்திற்கு மொழி அடையாளம் என்று எதுவும் இல்லாமல் போய்விட்டது. தமிழ் மொழியை இந்தியாவின் ஆட்சி மொழியாக்கினால் எல்லா நடுவண் அரசுத் துறைகளிலும் தமிழ் மொழி பயன்பாட்டில் வரும். இதனால் தமிழ் பேசும் மக்கள் பெருமளவில் பயன்படுவர்.
இந்தி"(தீ)ய ஒன்றியம் இந்தி(தீ)க்கு கொடுக்கும் அதே முக்கியத்துவம் தமிழ் மொழிக்கும் கொடுக்க நேரிடும். இதன் மூலம் தமிழர்கள் தாங்கள் இழந்த அடையாளத்தை மீண்டும் பெறுவார்கள். தமிழ் மொழியின் சிறப்பை வடநாட்டவரும் உணர்வாளர்கள். இதன் மூலம் இந்தியாவில் மொழிப் புறக்கணிப்பு என்ற நிலை மாறி உண்மையான வேற்றுமையில் ஒற்றுமை என்ற நிலை ஏற்படும்.
இந்த நிலை அடைய இந்தி"(தீ)ய ஒன்றியம் ஒருபோதும் உதவாது. இங்குள்ள தமிழர் அனைத்தையும் தமிழில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். தமிழ் தெரியாத எவனும் இம்மண்ணில் நுழையாதபடி செய்ய வேண்டும்.
உலகின் மூத்த தொன்மையான மொழிகளும் ஒன்றான தமிழ் மொழியை இந்தி"(தீ)ய ஒன்றியம் ஆட்சி மொழியாக்க வேண்டும். முதலில் அதை தமிழர் நாட்டில் செயல்படுத்த வேண்டும். இருமொழி கொள்கையை உடைத்து தாய்மொழி கொள்கையை கடைபிடிக்க வேண்டும்.
-இளையவேந்தன்
நாம் "இந்தி"(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு..
செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்
www.senkettru.wordpress.com
thamilarulaham.org
http://senkettru.blogspot.in/
http://iamnotaliberator.blogspot.in/
தமிழர் தேசியம் சார்பான காணொளிப்பதிவு பார்க்க…
No comments:
Post a Comment