Friday, September 20, 2013

இவர்கள் சாதனை செய்றதுக்கு எங்கள் வாழ்க்கையை சோதனை செய்றது நியாயமா?

அம்மா குடிநீர் டிரைவர்களை தண்ணீர் தயாரிக்க விட்ட அவலம்...

இந்த வார் ஜூனியர் விகடனில் தம்பி நா.சிபிச்சக்கரவர்த்தியின் கட்டுரை அவசியம் வாசியுங்கள்.

'//இங்கே மொத்தம் 60 பேர் இருக்கோம். நாங்க எல்லோரும் திருச்சியில் பஸ் டிரைவர் ட்ரெய்னிங் எடுத்துட்டு இருந்தவங்க. ஒவ்வொருத்தரும் ரொம்ப செலவு செஞ்சுதான் இந்த ட்ரெய்னிங்குக்கு செலக்ட் ஆகி சேர்ந்து இருக்கோம். திடீர்னு ஒருநாள் 'உங்க எல்லோருக்கும் சென்னையில இனி பயிற்சி தரப்போறோம். ரெண்டு நாள் பயிற்சி. ஒரே ஒருநாள் வாட்டர் பிளான்ட்ல சின்ன வேலை பார்க்கணும்.’ சொல்லி அழைச்சிட்டு போனாங்க....

கால் வலிக்குதுன்னு சும்மா ஒரு நிமிஷம் உட்கார்ந்தா கூட 'மாடு மாதிரி சாப்பிடத் தெரியுதுல்ல. எழுந்து ஒழுங்கா வேலை செய். இல்ல, டிரைவர் டெஸ்ட்ல ஃபெயில் பண்ணிடுவேன்’னு மிரட்டுறாங்க........
டிரைவர் டிரெய்னிங் முடித்து நல்லபடியா வேலைக்கு ஜாயின் பண்ணலாம்னு வந்தா, இவர்கள் சாதனை செய்றதுக்கு எங்கள் வாழ்க்கையை சோதனை செய்றது நியாயமா?

No comments:

Post a Comment