தமிழ் நாட்டில் யெயலலிதா ஆட்சிக்கு வந்தால் யெயலலிதா துதிபாட வேண்டும், கருணாநிதி வந்தால் கருணாநதிக்கு துதி பாடவேண்டும், இது எழுதப்படாத விதி.
அது போல் விக்கினேஸ்வரனை கண்டிபதால், அவரை எப்படி கண்டிப்பது என்பதும், அவரை கண்டிப்பதால் எதிரிக்கேதான் இலாபம் என்னும் கருத்துகள் நல்லதல்ல.
நேற்றைய தேர்தல் வெற்றி தெரிந்தவுடன், கொடியவன் ராசபக்ச நடத்தும் கொமன் வெல்த் மகா நாட்டுக்கு இந்திய கொடியவன் மனிமோகன் சிங்க கலந்து கொள்ளவேண்டும் என்பதும், அதை தமிழக தலைவர்கள் தடுக்க முயற்ச்சிக்க கூடாது என்பதும், வெந்த புண்ணில் வேல்பாச்சுவைதை போல் உள்ளது.
கொமன் வெல்த் மகாநாட்டில் மண் மோகன் சிங்க கொடியவன் பங்கு கொள்வதால், இல்லது பங்கு கொள்ளாமல் விடுவதால் எமக்கு பெரிய பயன் ஏதும் இல்லை.
காமன் வெல்த் மகாநாட்டை நடத்த விடாமல் , பன்னாட்டு தலைவர்களை வரவிடாமல் பண்ணுவதன் நோக்கம் ராசபக்ஸ் கொடியவன், இனபடுகொலை குற்றவாளி என்று ஏற்று கோல செய்ய , அவனை அவன், சிங்கள தேசத்தின் கொடிய முகத்தை உலகத்திற்கு கட்டவே அன்றி வேறொன்றும் இல்லை.
நேற்று வரை கொமன் வெல்த் மகாநாட்டை நடத் வேண்டாம், யாரும் வரவேண்டாம் என்று கூக்குரலிட்ட விக்கினேஸ்வரனும், தமிழ் கூத்தமைப்பும் வெற்றி பெற்றவுடன் துரோகத்தை செய்ய முற்படுவதன் நோக்கம் என்ன?
உலக தமிழ் உறவுகள் மட்டுமல்லாது , உலகம் எல்லாம் வாழும் மனித உரிமை ஆர்வலர்கள் கூட அந்த மகாநாட்டை புறக்கணித்து , அந்த சிங்கள தேசத்தின் கொடியவன் முகத்தை வெளிக்காடி, கொத்து கொத்தாக கொல்லப்பட்ட என் இனத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்று போராடும் போது . விக்னேஸ்வரனின் இப்படி பட்ட கோரிக்கை உலகதமிழ் உறவுகளை மிகவும் வேதனையில் ஆழ்த்தி உள்ளது.
இப்படிப்பட்ட கோரிக்கையை முன்வைத்ததனால் சிங்கள தேசத்தால் கொத்து கொத்தாக படுகொலை செய்யப்பட்ட எம் உறவுகளிற்காக போராடிவரும், நீதி வேண்டி நிற்கும் அத்தனை உள்ளத்திலும் இதொரு பெருடியாக அமைந்துவிட்டது.
இந்திய தேசம் கொட்டூரமான தேசம், அந்த நாட்டின் பிரதமர் மன்மோகனும் தமிழின படுகொலையின் பங்காளி. அவன் வந்து எம் மக்களிற்கு என்ன நீதியை வெண்டு தரபோகிறான்?, சிங்களவனை காப்பாற்றி, அவனும் இந்த கொடூர இனப்டுகொலையில் இருந்து இருந்து தப்பிப்பான். அதை விடுத்து என்னத்தை கூறுவான் என்று எதிர்பாக்க முடியும்?
அதயும் மீறி இத்து போன, ஒண்ணுக்கும் உதவாத 13 திருத்தத்தை முழுமையாக அமல் படுத்த கூறுவான். அந்த 13 ஏற்கனவே அமலில் தான் இருகேன்பது , எனக்கு மட்டும் அல்ல விக்கிநேஸ்வரனுக்கும் தெளிவாக தெரியும்.
இந்த மகாநாட்டை புறக்கணிப்பதால் , சிங்கள தேசம் ஒரு இனப்படுகொலை நாடாக , இந்திய இனப்படுகொலையாளர்கலாலேயே முத்திரை குத்தப்படும் என்பதே உலகம் எல்லாம் வாழும் , நீதி வேண்டி நிற்கும் மக்களின் பேர் எதிர்பார்ப்பு.
அந்த நீதியின் மீது இடியை விழுத்துவது போல் உள்ளது இந்த அறிவிப்பு. , அதோடு நின்று விடாமல் காலம் காலமாக இந்திய , சிங்கள படுகொலயாளர்களிடம் இருந்து எம்மை காத்து வரும், எமக்காக போராடிவரும் உறவுகளை சோர்வடைய செய்வது, எம் உறவுகளிர்கிடயிலான் விரிசலை ஏற்படுத்துவதுமாக இதை பார்க்க வேண்டி இருக்கிறது.
எதுவரினும் சிங்கள தேசத்தின் இனபடுகொலை தேசமாக அறிவித்து எமக்கான நீதியை பெறுவதே எம் இனத்தின் தலையாய கடமையாக நாம் பார்க்கிறோம் தட்பாயாக இருப்பது அந்த ஈச்வரே என்றாலும் நாம் ஏற்று கொள்ளபோவதில்லை .
வெற்றியின் மறுநாள், இந்தியா காமன் வெல்த் மகா நாட்டில் பங்கெடுக்க வேண்டும் என்ற விக்னேஸ்வரனின் கோரிக்கையானது , அவரது முதல் துரோகமாகவே பார்க்கிறோம்.
இந்திய , சிங்க கூட்டு சதிகளில் வீழ்ந்து விடாம, எம் இனத்ர்கு காலம் காலமாக செய்து வரும் துரோகத்தை செய்யாமல், தெளிந்து, அறிவு பூர்வமாக் , நிதானமாக் செயற்பட வேண்டுகிறோம் , அல்லது எச்சரிக்கிறோம்.
தமிழினம் வேறு தெரிவு இல்லாத படியால், அவர்கள் உரிமைகளை நிலை நாட்ட மட்டமே இவ்வளவு இன்னல்களுக்கு மத்தியிலும் வாக்களித்தார்கள். சலுகைகளுக்கும், துரோகங்களுக்கும் அல்ல என்பதை தெரிந்து கொள்ளவேண்டும்.
தமிழரின் தாகம் தமிழ் ஈழ தாயகம்
-ராவணன் தமிழன்
No comments:
Post a Comment