Wednesday, October 16, 2013
இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக அனுவுலையை மூடக்கோரி உறுதியுடன் போராடும் கூடங்குளம் மக்களுக்கு வீரவணக்கம்
தினம் ஒரு திருக்குறள் - Головна - Etusivu - 홈 - Strona główna - ホーム - Ett hem
"குறள்"
கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு
சொல்வேறு பட்டார் தொடர்பு.
குறள் - 819.
"குறள் விளக்கம்"
சொல் வேறு செயல் வேறு ஆக
இருப்பவரின் உறவு கனவில்
வந்தாலும் துன்பமானது.
E'en in a dream the intercourse is bitternessExplanation:
With men whose deeds are other than their words profess.
The friendship of those whose actions do not agree with their words will distress (one) even in (one's) dreams.
översättning:
E'en i en dröm av samlag är bitterhet
Med män vars gärningar är andra än sina ord bekänner.
Förklaring:
Den vänskap av dem vars verksamhet inte håller med deras ord kommer distress (en) även i (ens) drömmar.
Übersetzung:
E'en in einem Traum der Verkehr ist Bitterkeit
Bei den Menschen, dessen Taten sind anders als ihre Worte bekennen.
Erläuterung:
Die Freundschaft von denen, deren Handlungen nicht mit ihren Worten wird Seenot (eins) auch in der (den) Träume zustimmen.
翻訳:
夢の中でevenの縮約形性交は苦味です
その行為、その言葉が公言以外で男性と。
説明:
そのアクションは、その言葉が(自分の)夢の中でさえ苦痛(1)意志に同意しない人々の友情。
terjemahan:
E'en dalam mimpi hubungan adalah kepahitan
Dengan orang-orang yang berbuat selain daripada kata-kata mereka menganut.
Huraian:
Persahabatan dari orang-orang yang tindakan tidak bersetuju dengan kata-kata mereka akan kesusahan (satu) walaupun dalam (seseorang) mimpi.
oversettelse:
E'en i en drøm samleie er bitterhet
Med menn hvis gjerninger er andre enn deres ord bekjenne.
forklaring:
Vennskap med dem hvis handlinger er ikke enig med deres ord vil nød (en) selv i (ens) drømmer.
翻譯:
E'en在夢中性交苦味
與男性其他比他們的話自稱其事蹟。
說明:
那些行動不同意他們的話甚至窘迫(一)(1)夢想的友誼。
번역 :
성교 괴로움 꿈에 E'en
그의 행동 그들의 말을 고백하는 것보다 다른 수 있습니다 남자와.
설명 :
그의 행동 그들의 말은 (자신의) 꿈에서도 고통 (일) 것에 동의하지 않는 사람들의 우정.
käännös:
E'en unessa yhdyntä on katkeruus
Miesten kanssa, joiden teot ovat muita kuin heidän sanansa tunnustaa.
selitys:
Ystävyys, joiden toimet eivät ole samaa mieltä heidän sanojaan ahdistan (yksi) jopa (oman) unia.
Переклад:
E'en у сні акта гіркоти
З чоловіками, чиї справи та інші, ніж їх слова сповідують.
пояснення:
Дружбу тих, чиї дії не згодні з їх слів вчиню зо (один) навіть у (своєї) мрії.
-புவிநன்
"இந்தி"(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு..
செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்
www.senkettru.wordpress.com
thamilarulaham.org
http://senkettru.blogspot.in/
http://iamnotaliberator.blogspot.in/
தமிழர் தேசியம் சார்பான காணொளிப்பதிவு பார்க்க…
https://www.youtube.com/my_videos?o=U
'வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்டது தமிழ்நாடு' - பாரதி.

ஆசான் திருவள்ளுவர் எந்த மதத்தையும் சார்கிலார் என்பார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். ஆகையால்தான் அவரை உலகினுக்கே தந்து, தமிழ்நாடு வான்புகழ் கொண்டது.
சர்மனியிலும் பின்பு ஃபிரான்சு நாட்டைச் சேர்ந்ததாகவும் உள்ள அல்சேசு எனும் பகுதியில் பிறந்து, முன்னேறிய ஐரோப்பிய நாகரிகத்தின் பின்னணியில் வளர்ந்து, மெய்யறிவு, இசை, மதயியல் ஆகியவற்றில் மூன்று முனைவர் பட்டங்களைப் பெற்று, கல்லூரிப் பேராசிரியராகவும், இசை, விற்பன்னராகவும் வசதியாக அமைந்த வாழ்வைத் தொண்டுள்ளம் காரணமாகத் துறந்து, நவீன வசதி எதுவுமின்றி வாழ்ந்த ஆஃபிரிக்க மக்களுக்கான மருத்துவச் சேவையில் ஈடுபடுவதற்காக 30 வயதுக்கு மேல் மருத்துவம் படிக்கத்தொடங்கி, ஏழு ஆண்டுகளில் மருத்துவராகி, பின் மணவாழ்வை மேற்கொண்டு, கறுப்பின மக்களோடு வாழ்நாள் முழுவதும் பணியாற்றி, உயிர் அன்பு (Reverence for life) எனும் கொள்-கையைப் போற்றி வாழ்ந்த, நோபல் பரிசு பெற்ற மாமனிதர் ஆல்பர்ட் சுவைட்சர் (1875-1965), குறளைப்பற்றிக் கூறும்பொழுது..,
அதன் அறநெறிகளில் நாம் காணும் உயர்ந்த பேரறிவு உலக இலக்கியங்களில் அரிதாகவே இருக்கின்றது என்கிறார். 1935இல் அவர் எழுதிய Indian Thought and its Development எனும் நூலில் இன்னும் பலவாறு திருவள்ளுவத்தைப் போற்றுகிறார்.
திருவள்ளுவப்பெருமான் அருளிய நூல்கள்
1. ஞானவெட்டியான் - 1500
2. திருக்குறள் - 1330
3. இரத்தினசிந்தாமணி - 800
4. பஞ்சரத்தனம் - 500
5. கற்பம் - 300
6. நாதாந்த சாரம் - 100
7. நாதாந்த திறவுகோல - 100
8. வைத்திய சூத்திரம் - 100
9. கற்ப குருநூல் - 50
10. முப்பு சூத்திரம் - 30
11. வாத சூத்திரம் - 16
12. முப்புக்குரு - 11
13. கவுன மணி - 100
14. ஏணி ஏற்றம் - 100
15. குருநூல் - 51
(இவர்கள் அருளிய நூல்கள் இன்னும் இருக்கலாம்)
-தமிழும் சித்தர்களும் Thamil.Siththars
அவ்வை இல்லத்திற்கு நன்கொடையாக 30 ஆயிரம் வழங்கிய எம்.சி.ஆர் அவர்களைப் பாராட்டும் இக்கூட்டத்தில் கலந்து கொள்ள வாய்ப்புக் கிடைத்தமைக்கு மகிழ்ச்சியடைகிறேன்.

நான் எம்.சி.ஆர். அவர்களைப் பல கோணங்களிலிருந்து பாராட்டியிருக்கிறேன். ஆனால் நானும் நிதியமைச்சர் சுப்பிரமணியம்அவர்களும் சேர்ந்து பாராட்டுவது என்பது இதுதான் முதல் தடவை .
நம்முடைய நிதியமைச்சர் அவர்கள் எம்.சி.ஆர். அவர்களை ஊக்குவிக்க, வாழ்த்திய வாழ்த்துரை பிறரைத் தூண்டுவதற்கு ஒரு தூண்டுகோலாக இருக்கிறது .
ஆதரவற்றவர்கள் அனாதைகள் ஆகியோருக்கு இல்லம் ஆற்றி வருகிற தொண்டு மிக நல்ல தொண்டாகும்.
இயேசு கூட “தட்டுங்கள் திறக்கப்படும் கேளுங்கள் தரப்படும்” என்று கூறியுள்ளார். எனவே அப்படிப்பட்டவர்களைக் கேளுங்கள் தரப்படும்.
எம்.சி.ஆர். இப்பொழுது மட்டுமல்ல; ஏற்கெனவே வேறு பல காரியங்களுக்குத் தாராளமாக அளித்துள்ளார்.
அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டார்கள் இப்படிப்பட்ட காரியங்களில் அளிப்பதற்குப் போட்டி மனப்பான்மை வளரவேண்டும் என்று. இதை நானும் வரவேற்கிறேன். சட்டமன்றத் தலைவர் அவர்கள் பேசும்போது, ‘அப்படி ஏற்படும் போட்டியிலும் எம்.சி.ஆர். அவர்கள்தான் வெற்றி பெறுவார்கள்’ என்று சொன்னார். இதை நான் வரவேற்கிறேன்.
நிதியமைச்சர் அவர்கள், ‘இப்படிப்பட்ட விழாவில் கட்சி எதுவும் கிடையாது’ என்று கூறினார். எம்.சி.ஆர். அவர்கள் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர். அப்படியிருப்பினும் நிதியமைச்சர் அவர்கள் கட்சியைப் பற்றிக் கவலைப்படாமல் இவ்விழாவில் கலந்து கொண்டு அவ்வை இல்லத்தின் வளர்ச்சிக்கு நல்ல பல வழிவகைகள் கூறியுள்ளதை மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன்.
எம்.சி.ஆர் அவர்களின் உடல் மட்டும் அல்ல உள்ளம் கூட தங்கம் போன்றதாகும். தங்கம் உருக்கி வார்க்கப்பட்டு அடிதெடுக்கப்பட்ட பின்னரே பளபளப்பைப் பெறுகிறது. எம்.சி.ஆர் அவர்களும் வாழ்வில் வறுமையால் வாட்டப்பட்டு உருக்கி எடுக்கப்பட்டவர்.
ஏறக்குறைய எல்லா நடிகர்களின் வாழ்வும் இப்படிப் பட்டதாகத்தான் இருக்கும். வாழ்க்கையில் மிகவும் பாதிக்கப்பட்டு வறுமை சூழ்ந்து மிகச் சிரமப்பட்டுப் பத்து பதினைந்து ஆண்டுகள் நடித்து அதற்குப்பின் அய்ம்பதுஆண்டுகள் உழைத்தால்தான் பல இலட்சங்களைப் பார்க்க முடியும். ‘அப்படியெல்லாம் இருந்தாரே அவரா இவர்? என்று சிலர் பார்த்துக் கேட்கக் கூடிய நிலை பிறக்கும்.
ஆனால் நண்பர் இராமச்சந்திரன் தன் எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படாது இந்தத் தொகை தன்னிடமே இருந்தால் பின்னால் பயன்படுமே என்றும் நினைக்காது குறைவின்றிக் கொடுத்து வருகிறார். ரூ.10 லட்சம் சம்பாதிப்பவர் ஒரு லட்சத்தில் மண்டபம் கட்டுவதை நாம் பார்க்கிறோம். கட்ட ஆரம்பிக்கும்போதே பணம் சம்பாதிப்பவர்களையும் கூட நாம் சந்திக்கிறோம்.
அப்படியில்லாது நண்பர் இராமச்சந்திரன் காத்திருக்கிறார் பணத்தை நோக்கி. எங்கே வருகிறது எங்கே வருகிறது என்று வழி பார்த்திருக்கிறார். வந்ததும் கொடுக்கிறேன் கொடுக்கிறேன் என்று வழங்குகிறார்.
ஆக, இந்த இல்லத்தைப் பொறுத்தவரை, அவர் எப்போதாவது பணம் தரவேண்டும் என்று சொன்னால் நான், ‘அட்டியில்லை’ என்று சொல்வேன். இந்த இல்லம் செழிக்கப் பாடுபடுவேன் என்று உறுதி தருகிறேன்.
-அறிஞர் அண்ணா . (நம்நாடு - 30.1.61)
"இந்தி"(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு..
செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்
www.senkettru.wordpress.com
thamilarulaham.org
http://senkettru.blogspot.in/
http://iamnotaliberator.blogspot.in/
தமிழர் தேசியம் சார்பான காணொளிப்பதிவு பார்க்க…
https://www.youtube.com/my_videos?o=U
தமிழா! சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு. அண்டிப்பிழைக்க வந்த ஆரியக் கூட்டம் கற்பித்ததே அறிவுக்கொவ்வா அறுபது ஆண்டுகள். தரணி ஆண்ட தமிழனுக்கு தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு!” -பாவேந்தர் பாரதிதாசன்.
1. "தைஇத் திங்கள் தண்கயம் படியும்" – நற்றிணை
2. "தைஇத் திங்கள் தண்ணிய தரினும்" – குறுந்தொகை
3. "தைஇத் திங்கள் தண்கயம் போல்" – புறநாநூறு
4. "தைஇத் திங்கள் தண்கயம் போல" – ஐங்குறுநூறு
5. "தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ" – கலித்தொகை
ஆரியர்கள் ஓர் ஆண்டை நான்கு பருவங்களாக மட்டும்தான் வகுத்தார்கள். ஆனால் பண்டைக்காலத் தமிழர்களோ, தமக்குரிய ஆண்டை, அந்த ஆண்டுக்குரிய தமது வாழ்வை, ஆறு பருவங்களாக வகுத்திருந்தார்கள்.
1. இளவேனில் - (தை---மாசி மாதங்களுக்குரியது)
2. முதுவேனில் - (பங்குனி - சித்திரை மாதங்களுக்குரியது)
3. கார் - (வைகாசி - ஆனி மாதங்களுக்குரியது)
4. கூதிர் - (ஆடி - ஆவணி மாதங்களுக்குரியது.)
5. முன்பனி (புரட்டாசி - அய்ப்பசி மாதங்களுக்குரியது)
6. பின்பனி (கார்த்திகை - மார்கழி மாதங்களுக்குரியது)
சித்திரை மாதத்தில் (வேனில்) வெயில் தன் அதிகபட்ச உக்கிரத்தை அடைவதால் அதை முதுவேனில் என்றும் தைமாதத்தில் தொடங்கும் வெயிலை 'இளவேனில்' எனவும் பண்டைத் தமிழர்கள் அழகாகப் பகுத்திருந்தார்கள்.
காலத்தை, அறுபது நாழிகைகளாகவும், ஆறு சிறு பொழுதுகளாகவும், ஆறு பருவங்களாகவும் பகுத்த பண்டைத் தமிழன் தன்னுடைய புத்தாண்டு வாழ்வை இளவேனிற் காலத்தில்தான் (தை) தொடங்குகின்றான். இங்கே ஒரு மிக முக்கியமான விடயத்தை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்!
பண்பாட்டுப் பெருமை கொண்ட மற்றைய பல இனத்தவர்களும், தங்களுடைய புத்தாண்டு வாழ்வை, தங்களுடைய இளவேனிற் காலங்களில்தான் ஆரம்பிக்கின்றார்கள்.
தமிழர்கள் மட்டுமல்ல, சீனர்களும், சப்பானியர்களும், கொரியர்களும், மஞ்சூரியர்களும் என, பல கோடி இன மக்கள் - தொன்மையான பண்பாட்டு வாழ்வினைக் கொண்ட பெருமை வாய்ந்த மக்கள்- தங்களுடைய இளவேனிற் காலத்தையே தமது புத்தாண்டாகக் கொண்டாடி வருகின்றார்கள்.
இந்தி"(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு..
செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்
www.senkettru.wordpress.com
thamilarulaham.org
http://senkettru.blogspot.in/
http://iamnotaliberator.blogspot.in/
தமிழர் தேசியம் சார்பான காணொளிப்பதிவு பார்க்க…
https://www.youtube.com/my_videos?o=U
அடுத்த பிறவியில் நான் தமிழனாக பிறக்க வேண்டும் - நேதாசி. நேதாசி கூறிய தமிழ் இனத்தின் வீரம்.

நேதாசி கூறிய தமிழ் இனத்தின் வீரம்.
*********************************
இதை படித்த பிறகு தமிழன் என்ற பெருமையில் உடம்பு சிலிர்த்து போகும். அதிக நீளம் என கருதி நம் வரலாறை தெரிந்து கொள்ளாமல் பயணித்து விடாதீர்கள்.
தமிழ் இனத்தின் வீரம் பற்றி அறிய நாம் மன்னர் காலத்திற்கு பின்னோக்கி பயணிக்க வேண்டியதில்லை. சமகாலத்தில் வாழ்ந்த நம் தமிழ் இன மக்கள் பங்கெடுத்த நேதாசி அவர்களின் இந்திய தேசிய ராணுவம் ஒரு சான்றே போதுமானது...
இந்தி"(தீ)ய ஒன்றியத்தின் விடுதலைக்காக நேதாசி மலேயாவிலும் பர்மாவிலும் செயல்பட்டார். அவருக்கு உதவியாக அங்கிருந்த தமிழ் இன மக்கள் முழுமையாக செயல்பட்டனர்...
"இந்தி"(தீ)ய ஒன்றியம் விடுதலைப் பெற்றால்தான் ஆசியாவில் மற்ற நாடுகள் உடனே விடுதலை அடைய முடியும்" என்று நேதாசி அறைக்கூவல் விடுத்தார்.
அந்த அறைக்கூவல் நம் வீர இனத்தின் காதுகளில் விழ, தமிழ்நாட்டிலும் மலாயாவிலும் பர்மாவிலும் இருந்த தமிழின மக்கள் இந்திய தேசிய ராணுவத்தில் உயிரை பொருட்படுத்தாமல் இணைந்தனர். பல உயர் பதவிகளிலும் இருந்தனர்.
அரக்கான் போரில் பல தமிழர்கள் வீர மரணம் அடைந்தனர். மடிந்த ஒவ்வொரு தமிழனும் தான் உயிர் போகும்வரை போராடியதாக நேதாசியிடம் சொல்லுங்கள் என்று அருகில் இருந்தவரிடம் உயிர் பிரியும் வலியோடு கூறிவிட்டு வீரமரணம் அடைந்தார்கள்.
ஒரு காலக்கட்டத்தில் 600க்கும் மேற்பட்ட தென்னிந்திய இ.தே. ரா. (இ.தே. ரா. - இந்திய தேசிய ராணுவம்) வீரர்களை கைது செய்ய நேர்ந்தது. அப்போது நேதாசி செனரல் திலானை அழைத்து கூறினார் -- " இவர்கள் மிக சிறந்த வீரர்கள். இவர்கள் கடுமையுடன் இறுதிவரை போராடுவார்கள். இவர்கள் தவறான புரட்சி செய்வதற்கு காரணம் இவர்கள் தலைவரின் தவறான போக்குத்தான். அதனால் நீ இவர்களுக்கு தலைமை ஏற்று வழி நடத்து" என்றாராம்.
பின் ஒருநாள் தலைவரான திலான் கூறுகிறார். " தமிழ் வீரர்களுக்கு நான் தலைவராக இருந்தது என் பெரும் பேறு இ.தே. ரா. த்தின் இதயமும் ஆத்த்மாவும் தமிழர்கள்தான்"
இ.தே. ரா.த்தில் தலைவராக இருந்த மற்றொரு வீரர் சனரல் கியானி கூறுகிறார். " தமிழர்கள் மிக சிறந்த வீரர்கள், இறுதிவரை போரிட்டார்கள். எதிரியிடம் பிடிப்பட்டபோதும் இவர்கள் ஒருவரை ஒருவர் காட்டி கொடுத்ததே இல்லை என்பதுதான் குறிப்பிடத்தக்கது.
நேதாசியின் இ.தே. ரா. கண்டு எரிச்சல் அடைந்த வின்சுடன் சர்ச்சில் ரேடியோவில் கூறினார் " மலேயா ரப்பர் தோட்டத்தில் ரப்பர் பால் உறிஞ்சும் தமிழர்களின் ரத்தம் நேதாசியின் மூலையில் கட்டியாக உள்ளது" என்றார்.
அதற்க்கு பதில் அளித்த நேதாசி "இந்த தமிழர்கள்தான் பின்னாளில் ஆங்கில ஏகதிபத்தியத்தின் ரத்தத்தை குடிப்பார்கள் " என்று கூறினார்.
1945 இல் மார்ச் மாதம் நேதாசி படையில் ஒற்றர்களாக இருந்த நான்கு தமிழ் வீரர்கள் தூக்கிலிடபட்டனர். இந்தி"(தீ)ய ஒன்றியம் விடுதலைப் பெற்ற பின்னரும் இவர்களைப் பற்றி நாம் அறியாது விந்தையிலும் விந்தை. இந்தி"(தீ)ய ஒன்றியம் தமிழினத்திற்கு செய்த மற்றுமொரு துரோகம்.
ஒரு தமிழனாக பிறந்ததால்தான் ராமுத்தேவர், இராமசாமி ஒன்றியார் போன்றோர்கள் புகழ் அறியப்படவில்லை. இந்தி"(தீ)ய ஒன்றியத்தால் அனைத்து இடங்களிலும் மறைக்கப்பட்டது, தமிழன் தனது பெருமையை அறியக்கூடாது என்று ஆரியர்களும் வந்தேரிகளும் செய்த கூட்டுச்சதி.
இங்குள்ள ஒவ்வொரு தமிழனும் தன்னைத்தான் தமிழன் என்று உணர வேண்டும்.
தலைசிறந்த படைத்தலைவர்களை உருவாக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் நேதாசி 46 பேர்களைத் தேர்ந்தெடுத்து சப்பான் டோக்கியோவிற்கு ராணுவ பயிற்சி பெற்று திரும்ப அனுப்பினார். அதில் கூட 16 பேர்கள் தமிழர்கள். ஒரு ஈழத்தமிழர் உட்பட.
இ.தே. ரா. சேர ஆர்வம் கொண்டு ஒரே நேரத்தில் 2500 பேர் அணிதிரண்டனர். உடல் வலிமை இல்லாதவர்களும் கூட தங்களை இணைத்து கொள்ளுமாறு வலியுறுத்தினர். 14 வயது சிறார்களும் 16 வயது என்று பொய் கூறி கொண்டு இ.தே. ரா.வில் இணைந்தனர்.
ஒருவர் தன்னிடம் இருந்த 200 பசுக்களை நன்கொடையாக இ.தே. ரா.க்கு நேதாஜியிடம் கொடுத்துள்ளார். கிழிந்த சேலையுடன் வந்த மூதாட்டி ஒருவள் தன்னிடம் இருந்த மூன்று டாலரை கொடுத்துள்ளார். அதை கண்ணீர் மல்க நேதாசி பெற்று கொண்டார்.
நேதாசியை சுற்றி பலர் தமிழர்கள் இருந்தனர். அவருடைய சமையல்க்காரர் பெயர் காளி. நேதாசியின் இறுதி கடிதத்தை எழுதியவர் திவி என்ற தமிழர். நேதாசி சிங்கபூருக்கு வந்த போது அவரை வரவேற்றவர் சிதம்பரம் ஒரு தமிழர்.
சர்மனியில் தமிழ் வானொலி நடத்தியவர் திரு நாயுடு. அவர் அக்காலத்தில் பிரான்சில் உள்ள பாரிசில் உணவு விடுதி ஒன்றை நடத்திய பெரிய வியாபாரி.நேதாசியின் விருப்பத்திற்கு ஏற்ப உணவு விடுதியை மூடிவிட்டு சர்மனியை அடைந்து தமிழ் நிகழ்சிகளை நடத்தினார். குண்டு மழை பொழிந்தபோதும் கூட தொடர்ந்து தமிழ் நிகழ்சிகள் நடத்தினார். நாலரை ஆண்டுகளில் ஒரே ஒரு நாள்தான் நிகழ்ச்சி நடக்கவில்லையாம்.
மலேயாவிலும் நேதாசிக்கு அதரவாக யுவபாரதம், சுதந்திர இந்துசுதான் போன்ற தமிழ் இதழ்கள் வெளிவந்தன.
ராணி சான்சி படையின் தலைவியாக கேப்டன் இலட்சுமி இருந்தார். இந்த படையில் கேப்டன் சானகி பெரும்பங்கு ஆற்றினார். இவர் இந்தி"(தீ)ய ஒன்றியத்தில் பிறக்காதவர், இந்தி"(தீ)ய ஒன்றியத்தை பார்க்காதவர்.
எனினும் வீரத்தமிழ் இன உணர்வோடு போராடினார்கள்.விவசாய குடும்பங்களில் இருந்து வந்த இளம் பெண்கள் தங்கள் நீண்ட கூந்தலை கத்தரித்து விட்டு ராணுவ பயிற்சிக்கு பின் பர்மா போர் முனைக்கு சென்றனர்.அங்கு அவர்கள் செவிலியர்களாக பணிபுரிய மறுத்து தூப்பாக்கி ஏந்தி ஆங்கிலேயருடன் போரிட விரும்பினார்கள். அத்தனை வீரம் மிகுந்த தாய் வழி வந்தவர்கள் நாம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
அவர்கள் மார்பில் குடித்த பால் இன்னும் நம் மரபணுக்களில் கலந்திருப்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
அடுத்த பிறவியில் நான் தமிழனாக பிறக்க வேண்டும் - நேதாசி
"இந்தி"(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு..
செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்
www.senkettru.wordpress.com
thamilarulaham.org
http://senkettru.blogspot.in/
http://iamnotaliberator.blogspot.in/
தமிழர் தேசியம் சார்பான காணொளிப்பதிவு பார்க்க…
https://www.youtube.com/my_videos?o=U
Tuesday, October 15, 2013
பட்டதாரி இளைஞர்களின் பலே விவசாயம் !
-------------------------------------------------
விவசாயிகளின் பிள்ளைகளே விவசாயத்தை மறந்து அல்லது துறை மாற நினைத்து, பன்னாட்டு நிறுவனங்களை நோக்கி படையெடுத்திருக்கும் நவீன யுகம் இது! இதற்கு நடுவே, விவசாயமே தெரியாத சிலர்... பன்னாட்டு நிறுவன வேலைகளை உதறிவிட்டு, விவசாயத்தைக் கையிலெடுக்கிறார்கள் என்றால்... ஆச்சர்யம்தானே!
மென்பொருள் பொறியாளர்கள், விஞ்ஞானி, கல்லூரிப் பேராசிரியர், வழக்கறிஞர், ஆடிட்டர், பொறியாளர்கள் என பல துறையைச் சேர்ந்த இவர்களை ஒன்று சேர்த்திருக்கிறது, இயற்கை விவசாயம். 'நல்ல கீரை’ என்கிற பெயரில் அமைப்பை உருவாக்கி, பயணத்தைத் தொடங்கியிருக்கிறார்கள்...
சகன்னாதன், கௌதம், ராதாகிருட்டிணன், சலோமிஏசுதாசு, ராமு, விசு, திருமலை, புனிதா, சாம், சிவகுமார், ராசமுருகன், அறிவரசன் ஆகிய 12 பட்டதாரி இளைஞர்கள்!
திருநின்றவூர்-பெரியப்பாளையம் பிரதான சாலையில், ஐந்தாவது கிலோ மீட்டரில் பாக்கம் என்னும் கிராமம் உள்ளது. இங்கு இந்த அமைப்பினர், இயற்கை முறையில் கீரை சாகுபடி செய்து... சென்னையில் நேரடியாக சந்தைப்படுத்தி வருகிறார்கள்.
பண்ணைக்குத் தேடிச் சென்ற நம்மிடம், முதலில் பேச ஆரம்பித்த சகன்னாதன், ''கிராமப் பொருளாதாரத்தப் பத்தி அடிக்கடி நான் சிந்திப்பேன். அதோட தொடர்ச்சியா, கிராம மக்கள்கிட்ட ஆய்வு பண்ணினேன். 240 குடும்பங்கள்கிட்ட ஆய்வு பண்ணினதுல... செயற்கை உரம், பூச்சிக்கொல்லி, மதுபானங்கள், புகையிலைனு வருடத்துக்கு 1 கோடியே 60 லட்ச ரூபாயைச் செலவு செய்றாங்கனு தெரிஞ்சுது.
படாதபாடுபட்டு இந்தக் குடும்பங்கள் சம்பாதிக்கற பணம்... சம்பந்தமில்லாத யாருக்கோ போறத நினைக்கறப்ப... ரொம்ப வருத்தமா இருந்துச்சு.
இந்தச் செலவைக் குறைக்கறதுக்கும், இவங்கள இதுல இருந்து மீட்டெடுக்கறதுக்கும் என்ன வழி?னு யோசிச்சப்பதான்... இயற்கை விவசாயத்தால உரம், பூச்சிக்கொல்லிச் செலவை சுத்தமா ஒளிச்சுடலாம்னு தோணுச்சு.
இதுக்காகவே நம்மாழ்வார் அய்யா நடத்துன பல கூட்டங்கள்ல கலந்துகிட்டேன். இயற்கை விவசாயிகள் பலரையும் சந்திச்சேன். அவங்ளோட தங்கி, அவங்க செய்ற விவசாயத்தப் பாத்து, தொழில்முறையா எப்படி செய்யலாம்னு தெரிஞ்சுகிட்டேன்.
இணைத்த இயற்கை!
அப்போ பன்னாட்டு நிறுவனத்தில் வியாபார மேம்பாட்டாளரா நான் இருந்தேன். அங்க நண்பர்களோட பேசினதுல... நிறைய பேருக்கு இதுல ஆர்வம் இருக்கறது தெரிஞ்சது.
அவங்களையெல்லாம் இணைச்சு... இந்த அமைப்பைத் தொடங்கினோம். முதல் கட்டமா, சென்னை மக்களுக்கு ரசாயனம் தெளிக்காத கீரையை உற்பத்தி செஞ்சு கொடுக்கலாம்னு முடிவு செஞ்சோம்.
அதுக்காக, இந்த 5 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து கீரை சாகுபடியைத் தொடங்கியிருக்கோம். விளையற கீரையை சென்னையில வாடிக்கையாளர்களுக்கு நேரடியா விற்பனை செய்றோம்.
மொத்தமிருக்கற 12 உறுப்பினர்கள்ல... நாலு பேர் முழுநேரமா செயல்படுறோம். இதுக்காகவே... ஏற்கெனவே நாங்க பார்த்திட்டிருந்த வேலையை விட்டுட்டோம் (சகந்நாத், ராதாகிருட்டிணன் ஆகிய இருவரும் மருத்துவ நிறுவன அதிகாரிகளாகவும்... கௌதம், மின்சாதனங்கள் தயாரிக்கும் நிறுவன நிதி ஆலோசகராகவும், சலோமி ஏசுதாசு ஆந்திர மாநிலத்தில் இருக்கும் டெக்கான் டெவலப்மென்ட் சொசைட்டி தொண்டு நிறுவன திட்ட அதிகாரியாகவும் பணியாற்றி வந்தனர்).
மத்த உறுப்பினர்கள்.. வாரம் ஒரு முறை வருவாங்க. மாசம் ஒரு முறை கூட்டம் நடத்துவோம். அவங்கவங்க ஆலோசனைகளைப் பரிமாறிக்குவோம்.
இயற்கை உரத் தேவைக்காகவே நாட்டு மாடுகளை வளர்க்கிறோம். இப்போதைக்கு எட்டு மாடுகள் இருக்குது. இயற்கை முறையில விளைஞ்ச பொருட்களை விக்கிறதுக்காக... 'நல்ல சந்தை’னு ஒரு அமைப்பையும் தொடங்கப் போறோம்.
இயற்கை விவசாயிகள், அத்தனைப் பேருமே பயன்படுற வகையில லாபநோக்கம் இல்லாம இதை நடத்தப் போறோம்'' என்றார் சகன்னாதன்!
''கீரையில சின்னச்சின்ன ஓட்டைகள் இருந்தாகூட... பூச்சிக் கீரைனு சொல்லி வாங்க மாட்டேங்கறாங்க சிலர். இயற்கை முறையில விளைவிக்கறப்ப... சில நேரங்கள்ல கீரைகள் இப்படித்தான் இருக்கும். அதோட, பூச்சிகள் சாப்பிடற கீரைகளை சாப்பிடறதால எந்த பாதிப்பும் இல்லைங்கறதுதான் உண்மை. பூச்சிங்க சாப்பிட்டிருந்தா... அது இயற்கையில விளைஞ்ச கீரைனு நம்பி வாங்கலாம். ரசாயனப் பூச்சிக்கொல்லி தெளிக்கற வயல்கள்ல இருந்து வர்ற கீரைகள்தான், பெரும்பாலும் ஓட்டைஇல்லாத கீரையா இருக்கும்.
பொதுவா... காய்கறி, கீரை, பழம்னு எல்லாத்துக்குமே காலம் இருக்கு. அந்தந்த காலம் தான்... அதெல்லாம் நல்லா விளையும். அப்படிப்பட்ட காய்கறிகளை, இயற்கை முறையில எளிதா விளையவெக்க முடியும். ஒவ்வொரு காலதுலயும், மனிதனுக்கும் விலங்குகளுக்கும் எது தேவைப்படும்னு இயற்கையே செய்திருக்கற ஏற்பாடுதான் இது.
அதனால, அந்தந்த காலத்துல விளையறதை மட்டும் வாங்கிச் சாப்பிடறதுதான் நல்லது. இந்த உண்மை புரியாம, பலரும் காலம் இல்லாத சமயங்கள்லகூட அந்தக் காய்கள்தான் வேணும்னு வற்புறுத்திக் கேக்கறாங்க'' என்று தங்களது சிக்கலைச் சொன்னார், முழுநேர ஊழியர்களில் ஒருவரான ராதாகிருட்டிணன்.
விதவிதமா இருக்குது, கீரை!
''முளைக்கீரை, சிகப்பு முளைக்கீரை, சுக்கான், சக்கரவர்த்தினி, பசலைக்கீரை, அரைக் கீரை, சிறு கீரை, கொத்துமல்லி, புதினா, பொன்னாங்கன்னி, சிகப்புப் பொன்னாங்கன்னி, கோங்கூரானு சொல்லற சீமைக் காசினி, கொம்புக்காசினி, அகத்தி, முருங்கை, வல்லாரை, தூதுவளை, முடக்கத்தான், வெந்தயக் கீரை, கல் இளக்கி, காசினி, கறிவேப்பிலை, மணத்தக்காளி, தண்டுக் கீரை, பருப்புக்கீரை, தவசிக் கீரை, சிலோன் கீரை, திருநீற்றுக் கீரை...
இப்படிமுப்பதுக்கும் மேற்பட்ட கீரை வகைகளை சாகுபடி செய்றோம்'' என்று பட்டியலிட்டமுழு நேர ஊழியர் கௌதம், கீரை சாகுபடி செய்யும் முறைகள் குறித்து பாடம்சொன்னார்.
நிறைவாகப் பேசிய கௌதம், '' ஒரு பாத்தி அமைக்க, 200 ரூபாய் செலவாகும். முதல் கட்டமா, நாங்க மொத்தம் 50 சென்ட் நிலத்துல 300 பாத்திகள அமைச்சுருக்கோம். இதை ஒரு முறை அமைச்சா... மூணு, நாலு தடவைசாகுபடி பண்ணலாம்.
ஒரு பாத்தியில அதிகபட்சம், 100 கட்டு கீரை பறிக்கமுடியும். ஒரு கட்டுக்கு 5 ரூபாய்க்கு குறையாம விலை கிடைக்கும். பாத்திகளோடஇடைவெளியில அகத்தி, வல்லாரை, தூதுவளை, பிரண்டை மாதிரியான பயிர்களைப்போட்டிருக்கோம். வேலைக்கு 2 பேர் இருந்தா போதும். 300 பாத்தியிலிருந்தும்மாசத்துக்கு 30 ஆயிரம் ரூபா வரை வருமானம் கிடைச்சுட்டுருக்கு.
ஒருபானை சோத்துக்கு, ஒரு சோறு பதம் போல, 50 சென்ட் நிலத்துல பல விடயங்களைக் கத்துக்கிட்டோம். இந்த அனுபவத்தை வெச்சே...
கீரை சாகுபடியை விரிவுப்படுத்தப் போறோம். அதேபோல, வேறு சில பயிர்களையும் கையில எடுக்கப் போறோம். இதன் மூலமா மொத்தமா இருக்கற 5 ஏக்கர்ல இருந்தும், ஒவ்வொரு மாசமுமே... பல லட்ச ரூபாய் வருமானம் கிடைக்கும்.
முறையா திட்டம் போட்டு உழைச்சா, விவசாயமும், மத்த தொழில் மாதிரி லாபம் கொட்டும். ஏற்கெனவே நாங்க பார்த்துட்டிருந்த வேலையில கிடைச்ச சம்பளத்தைவிட, இன்னும் கூடுதலா விவசாயத்தின் மூலமே லாபம் பார்க்க முடியும்கிறத நிரூபிச்சே தீருவோம்'' என்று சூளுரைத்து விடை கொடுத்தார்.
தொடர்புக்கு,
சகன்னாதன், அலைபேசி : 99626-11767
கௌதம், அலைபேசி : 98406-14128
ராதாகிருட்டிணன், அலைபேசி : 97898-40630
-செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போரின் குழு மற்றும் தற்ச்சார்பு பொருளாதார வாழ்வியல்முறைக் குழு
"இந்தி"(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு..
செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்
www.senkettru.wordpress.com
thamilarulaham.org
http://senkettru.blogspot.in/
http://iamnotaliberator.blogspot.in/
தமிழர் தேசியம் சார்பான காணொளிப்பதிவு பார்க்க…
https://www.youtube.com/my_videos?o=U
Monday, October 14, 2013
இனியும் ஒரு தமிழர் சாகக் கூடாது. தோழர் தியாகுவின் உண்ணா நிலைப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவோம். நாம் செயலில் ஈடுபடுவோம்.

ஒவ்வொரு முறையும் தமிழர்கள் இந்தி"(தீ)ய ஒன்றியம் மற்றும் இலங்கைக்கு எதிராக போராடும் போது யாராவது ஒருவரை தமிழ்ச் சமுகம் இழக்க நேரிடுகிறது .
முத்துக்குமார், செங்கொடி , விசயகுமார் போன்ற பல உணர்வாளர்கள் ஆற்றாமையால் தன்னையே தீக்கு இரையாக்கி உள்ளனர். அப்படி உயிர் நீத்தாலும் இந்தி"(தீ)ய ஒன்றியம் அதை பற்றியெல்லாம் சட்டை செய்வதில்லை.
தமிழர்களின் போராட்டங்களை எல்லாம் தமிழர் தேசியத்தின் அரசோ, இந்தி"(தீ)ய ஒன்றியமமோ மதிப்பதில்லை. இப்படி ஒரு நிலை இருக்க ஏன் தமிழர்கள் உயிர் துறக்க வேண்டுமா?
நாம் பல வழிகளில் போராடி நம் உரிமைகளை பெற்றுக் கொள்வோம்.
இப்போது 14 வது நாளாக உண்ணா நிலையில் இருக்கும் தோழர் தியாகு ஐயாவின் உடல்நிலை மிகவும் மோசமான கட்டத்தை எட்டி உள்ளது. தோழர் தியாகு தமிழர்களின் அறிவு சார் சொத்து. அவரை இழப்பது இந்தி"(தீ)ய ஒன்றியதிற்கு மகிழ்ச்சியை தான் தரும்.
ஆனால் தமிழர்களுக்கோ அது மாபெரும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அவரை நாம் நிச்சயம் இழக்க முடியாது. அவரை காப்பாற்றுவது ஒவ்வொரு தமிழனின் கடமையாகும்.
அதனால் தோழர் தியாகு தனது போராட்டத்தை முடித்துக் கொள்ள தமிழர்கள் ஒன்று சேர்ந்து குரல் கொடுப்போம். வயதான நிலையில் அவர் உயிர் எந்த நேரத்திலும் பிரிந்து விடும் அபாயம் உள்ளது என்பதை கருத்தில் வைத்து அவரது போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர நாம் அனைவரும் தோழர் தியாகு ஐயாவிற்கு வேண்டுகோள் வைத்து அவரை உண்ணா நிலைப் போராட்டத்தை கைவிட செய்வோம்.
தமிழக அரசியல் தலைவர்கள், இயக்கங்கள், மாணவர்கள், பொதுமக்கள் அனைவரும் இதை வலியுறுத்துவோம். தமிழக மக்களாகிய நாம் இந்த போராட்டத்தை கையில் எடுப்போம். தமிழகம் தழுவிய மாபெரும் போராட்டங்களை மக்களாகிய நாம் இணைந்து முன்னெடுப்போம். அடுத்தடுத்து வரும் போராட்டங்களில் கலந்து கொண்டு நாம் செயலில் ஈடுபடுவோம்.
அப்படியான செயலில் நாம் ஈடுபட்டால் தோழரின் உண்ணா நிலையை விரைவில் நாம் முடிவுக்கு கொண்டு வரலாம். உடனே செயல்படுவோம் தோழரின் உண்ணா நிலையை முடிவுக்கு கொண்டு வருவோம் .
-இளையவேந்தன்
"இந்தி"(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு..
செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்
www.senkettru.wordpress.com
thamilarulaham.org
http://senkettru.blogspot.in/
http://iamnotaliberator.blogspot.in/
தமிழர் தேசியம் சார்பான காணொளிப்பதிவு பார்க்க…
https://www.youtube.com/my_videos?o=U
Sunday, October 13, 2013
Thursday, October 10, 2013
தினம் ஒரு தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் சிந்தனை.
சுதந்திரத்தை
அனுபவிக்க
இயலுமென்பது
நியதியாகும்.
-தமிழன் கரு.ஆசைசெந்தில்- தமிழர் நாடு
Tuesday, October 8, 2013
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்அவர்களின் நினைவு நாள் இன்று.. அக்டோபர் 8, 1959...

சுவையான தகவல்கள்...
கட்சிகளுக்கு அப்பாற்பட்டு முற்போக்குக் கொள்கையில் பற்றுடைய அனைவரது மன மண்டபங்களிலும் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் வீற்றிருக்கிறார்.
பகுத்தறிவுப் பாசறையில் பயின்றவர்கள், பொதுவுடமைக் கொள்கைகளில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர்கள் ஆகியோர் அனைவரது மனதிலும் மறையாமல் உள்ளார் கல்யாணசுந்தரம்.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் போன்று மேலும் பல கவிஞர்கள் தோன்ற வேண்டும்.
எழுத்தாளர்களால் இந்த உலகம் முன்னேற முடியும். எழுத்தாளர்கள் கொள்கைப் பிடிப்பு உள்ளவர்களாக, லட்சியவாதிகளாக இருந்தால் இந்த உலகம் முன்னேறும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
அந்த நம்பிக்கையின் ஒரு கணுவாகத் திகழ்ந்தார் கல்யாணசுந்தரம்.
விழாவில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் துணைவியார் கௌரவம்மாள், புதல்வர் குமாரவேலு, சகோதரர் கணபதிசுந்தரம் வாழ்வில் சிறக்கவும் வாழ்த்துக்கள்.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் மனைவி கௌரவம்மாள் கூறியுள்ள செய்தியில் :
எனது கணவர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் நினைவைப் போற்றும் வகையில் மக்கள் அவரின் பகுத்தறிவு சிந்தனைகளையும், புரட்ச்சி பாடல்களையும் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன்...
-கவின்
Monday, September 30, 2013
அடிமையாய் ஆண்டுகள் பலநூறு, எழுந்தான் பிரபா அடலேறு, உத்தரவிட்டான் சுடுமாறு; உதித்தது புதிய வரலாறு

