பல திரைப்பட ரசிகர்கள் திரையரங்கில் கூடி இருக்க 'தமிழ்த் தாய் வாழ்த்தை புறக்கணிக்காதே' என்ற முழக்கத்தை அனைவரும் முன்வைத்தோம். உடனே திரையரங்க நிர்வாகமும், காவல்துறையும் எங்கள் கோரிக்கையை விரைந்து வந்து பெற்றுக் கொண்டனர். இது குறித்து நிர்வாகக் குழுவிடம் பேசி மூன்று நாட்களுக்குள் பதில் தருகிறோம் என்று திரையரங்க மேலாளர் பதிலளித்தார். அவர்கள் தமிழ்த் தாய் வாழ்த்து ஒலிக்க மறுத்தால் அவர்கள் திரையரங்கில் தமிழர்கள் நாங்கள் தமிழ் தாய் வாழ்த்தை ஒலிக்கச் செய்வோம் என்பதை உறுதியுடன் கூறினும்.
காவல்துறையும், தமிழ்த் தாய் வாழ்த்து முதலில் பாடுவது தான் முறையானது என்று ஒத்துக் கொண்டனர். தமிழக அரசின் விதிமுறைப்படி நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், முடிவில் இந்திய நாட்டுப் பண்ணையும் பாட வேண்டும் . அதை நடைமுறைப்படுத்த வேண்டியது தமிழகத்தில் உள்ள அனைத்து நிறுவனங்களின் கடமையாகும்.
-இளையவேந்தன்
No comments:
Post a Comment