Wednesday, October 2, 2013
அணு உலையை எதிர்த்து அனைத்து கட்சிகள் போராட்டம்
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை முதல் அனைத்து கட்சிகள் சார்பில் ஆபத்தான கூடங்குளம் அணுஉலையை எதிர்த்து அனைத்து கட்சிகளும் அமைப்புகளும் பங்குபெற்ற மாபெரும் போராட்டம் நடைபெற்றது .
இடிந்தகரை மக்களின் மீது பல்வேறு பொய் வழக்குகள் போட்டு மாநில அரசு அராசகம் செய்கிறது . உச்சநீதிமன்றம் போராளிகள் மீதான வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என்ற தீர்ப்பு அளித்தும் தமிழக அரசு இன்னும் வழக்குகளை திரும்ப பெற வில்லை . இதை தமிழக கட்சிகளும் , அமைப்புகளும் , சமூக ஆர்வலர்களும் கடுமையாக கண்டித்து தொடர் முழக்க போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர். இதே நாளில் தமிழகமெங்கும் மாவட்ட தலைநகரில் இதே கோரிக்கையை வலியுறுத்தி தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது. அணுஉலைகளை மூடுவதே நிரந்தர தீர்வு , அதை மூடிவிடுவதே தமிழர்களுக்கு நன்மை பயக்கும் ஏகமனதாக அனைத்து கட்சிகளும் முழங்கின.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment